Friday, September 23, 2016

அங்காயப் பொடி:



தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளிக்காய் வற்றல், தனியா, வேப்பம்பூ, ஓமம், சீரகம்  – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு – ஒரு துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கப், பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் (உப்பு நீங்கலாக) தனித்தனியாக வாணலியில் வறுக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

இந்தப் பொடி குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், பசியின்மை இரண்டையும் சரிசெய்யும்.

No comments:

Post a Comment