Saturday, August 27, 2016

உலகத்தின் கடைசி நாள்..!

உலகத்தின் கடைசி நாள்..!!அனைத்து மக்களும்..
​​
எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர்..! அப்போது கடவுள் அவர்களின் முன் தோன்றி காட்சி அளித்தார்..!பிறகு உரத்த குரலில் சொன்னார்.."இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும்.. இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள்..!!முதல் வரிசை;- மனைவி என்ன சொன்னாலும்.. அதை அப்படியே கேட்கும் ஆண்கள்..!
!இரண்டாம் வரிசை;- மனைவி எதை சொன்னாலும்..எடுத்துக் கொள்ளாத ஆண்கள்..!! என்றார்..!!சிறிது நேரத்தில் இரண்டு வரிசைகளையும்..பார்வையிட்ட கடவுள்.. ஒரு நிமிடம் உறைந்து போனார்..!!முதல் வரிசையில் பல மைல்.. தொலைவிற்கு ஆண்கள் வரிசை..!!இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு.. ஆண் மகன்..!!முதல் வரிசையில் நின்ற.. ஆண்களிடம் கடவுள் கோபத்தோடு கூறினார்..."பாருங்கடா.. என் சிங்கக்குட்டியை..!ஆண் வர்க்கத்தின் பெருமையை.. உங்களுக்குபுரிய வைக்கிற.. இவரை பார்த்தால்.. உங்களுக்கு வெக்கமாக இல்லை..?? இந்த சிங்கத்தை பார்த்து மத்த ஆண்கள் எல்லாம் கத்துக்கோங்கயா..!!"பிறகு அந்த ஆண் மகனிடம் கேட்டார்..."உன்னை பார்த்தால் எனக்கு ரொம்ப பெருமையா.. இருக்கு..!!நீ மட்டும் எப்படி.. இவ்ளோ தைரியமா பொண்டாட்டி சொல்றத கேட்காமா சுயமா சிந்திக்கிற'ன்னு இருக்கேன்னு மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுடா..!!
"அந்த சிங்கக்குட்டி..ஒரு சில வார்த்தைல.. விளக்கம் சொன்னாரு..."அதெல்லாம் எனக்கு..
தெரியாது கடவுளே..!!என் பொண்டாட்டி.. எப்பவும், எங்க போனாலும் இரண்டாவது வரிசைல தான் நிக்கணும்ன்னு சொல்லிருக்கா.. நான் நின்னேன்..

அவ்ளோ தான்.."!!?

No comments:

Post a Comment