Saturday, August 27, 2016

மைக்ரோ கதை


சரவணன் தினமும் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பான்.
""இறைவா பலருக்குக் காட்சி கொடுத்ததாகப் படித்துள்ளேன். இந்த பக்தனுக்கும் ஒருநாள் காட்சி கொடுக்கக் கூடாதா?'' என தினமும் வேண்டுவான்.
அன்றும் அவ்வாறு வழிபட்டுவிட்டு வெளியே வந்தவனை ஓர் அருளாளர் வழிமறித்தார்.
""தாங்கள் யார்? ஏன் வழி மறைக்கிறீர்கள்?''
""நீ தினமும் எனது தரிசனம் வேண்டி வணங்கியதால், நேரில் வந்தேன்'' என்றார் கடவுள்.
""தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரியவில்லையே? இருந்தாலும் வணங்குகிறேன். ஒன்பது மணிக்கு எனது மகனின் ஃப்ரி கேஜி அட்மிஷனுக்கு பள்ளி தலைவர் அனுமதி கொடுத்து உள்ளார். நான் அவசரமாப் போகணும். இன்னொருநாள் வரலாமா?'' என்றான்.
கடவுள் தான் வந்த நேரம் சரியில்லை என்று திரும்பினார்.

​​


No comments:

Post a Comment