Saturday, August 27, 2016

கடி ஜோக்ஸ்

 *யார், யார் எப்படி பேசுவார்கள்*
*கிரிக்கெட் வீரர்* - "ஓவரா" பேசுவார்
*போட்டோகிராபர்* - "டெவலப் பண்ணி" பேசுவார்
*ரவுடி* - "அடிச்சுப்" பேசுவார்
*ஹோட்டல் சர்வர்* - "சூப்"பரா பேசுவார்
*வக்கீல்* - "பீஸ்புல்லா"  பேசுவார்
*ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்* – "காரசாரமா" பேசுவார்
*ஐஸ் விக்கிறவர்* – "குளிரக் குளிரப்" பேசுவார்
*டெய்லர்* – "கட் பண்ணிப்" பேசுவார்
*பூக்கடைக்காரர்* - வார்த்தையை "அளந்து" பேசுவார்
*டயட்டீஷியன்* - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்
*பேங்க் மேனேஜர்* – "இண்ட்ரஸ்டா" பேசுவார்
*பியூட்டீஷியன்* – "அழகாப்" பேசுவார்
*கசாப்புக் கடைக்காரர்* – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்
*ஸ்வீட் கடைக்காரர்* – "இனிக்க இனிக்கப்" பேசுவார்
--------------------
கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''
2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"
3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.
4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா:  பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"
6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
 
7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!
8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT
9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.
10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.


-----------------------

: நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும், ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?
ஃபேன்: நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனு என்ன இப்டி சுத்தவிடுற!
_
டிவி: ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
_
தலையனை: நாளக்காவது குளிடா! நாத்தம் கொடல புடுங்குது!
_
ஃப்ரிட்ஜ்: சாம்பார் புளிக்கொழம்பு மீந்து போன காய்கரி இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா!
_
ட்யூப் லைட்: நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா!
_
கண்ணாடி: தயவு செஞ்சு குளிக்காம வந்து ஏ முன்னாடி நிக்காத!
_
மிக்ஸி: மூடிய மூடாமத்தா ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்.
_
வால்க்ளாக்: இப்ப என்ன பாத்து என்ன கிளிக்க போற!
_
வாசிங்மெஷின்: நாயே நாயே! பாக்கெட்ல காசு பணம் இருக்கானு செக் பண்ண மாட்ட!
_
மிதியடி: என்னத்தடா மிதிச்சுட்டு வந்த, மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு!
_
சேவிங் ட்ரிம்மர்: இப்ப அங்க என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற!
_
மொபைல் சார்ஜர்: வாய தொற அப்டியே அதுல கொஞ்சோ சார்ஜ் ஏத்தி விடுறேன்!
_
பாத்ரூம் விளக்கமாறு: தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்க!
_
அயன்பாக்ஸ்: அப்டியே கொஞ்ச மூஞ்சிய காட்றது!
_
சர்ட் ஆன்கர்: வெண்ண மகனே, ஓ சட்ட காலர கொஞ்ச பாரு! ஓ ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு....-

No comments:

Post a Comment