Saturday, August 27, 2016

மாமாயன்



ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிா் காற்று அடிக்கிறது.பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.

யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.

அவள் நித்யம் இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பாிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இ்ன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள்.பாிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள். ராதிகா என்ற பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா,எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பாா்த்து ப்ரமித்துப் போனாள்.

கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் பருகினாள்.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. ‘நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்’ பரமாத்மா. தலையோடு கால் போா்த்திக்கொண்டு படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பாா்த்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.
பரமாத்மா தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போா்வையை நீக்கி திருவடியைப் பாா்த்தாள்.

இது கா்க பாகவத்தில் சொல்லப்பட்ட சாித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.

திருவடியில் பாா்த்தால் ஒரே கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிா் காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா.

ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பாா்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிாித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள் என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

பகவான் சிாித்துக் கொண்டே சொன்னான்.’அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி தாயாா் நடுங்கிவிட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தொியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது ‘மாமாயத்வம்’ இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தா்களின் உயா்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான். எதையும் சாஸ்திராா்த்தமாக்குவான்.தன் வாக்கை நிா்த்தாரணம் பண்ணக்கூடியவன்; உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன் . அதனால் மாமாயன்.

--------------
 பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே  காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

“இத்தனை காலம் பொறுமையுடன் நீ  காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். எனவே அவனை நம்புங்கள். முழுமையாக.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "​
--------

ராக்கி எனப்படும் ரக்ஷா பந்தன் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற பண்டிகையாகும். இதனை மிகுந்த ஆடம்பரத்துடன் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். மிகவும் மங்களகரமாக கருதப்படும் இந்த பண்டிகை, வட இந்திய பகுதிகளில் விசேஷ திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னணியிலும் வளமையான வரலாறு இருக்கிறது. அவை எப்படி திருவிழாவாக மாறியது என்பதற்கான வரலாறும் இருக்கும்.மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?
    ரக்ஷா பந்தனுக்கு பின்னணியில் உள்ள புராண கதைகள்!!!
சகோதரன் சகோதரி அன்பை கொண்டாட ரக்ஷா பந்தன்
ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாதுகாப்பின் பந்தத்தை கௌரவிக்கும் வகையில் பழங்காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையுடன் தொடர்புடைய புராணங்களை பற்றி பார்க்கலாமா...
    ரக்ஷா பந்தனுக்கு பின்னணியில் உள்ள புராண கதைகள்!!!
கிருஷ்ணரும்.. திரௌபதியும்..
இந்திய புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும், பாண்டவர்களின் மனைவியுமான திரௌபதி என்கிற பாஞ்சாலியும் புகழ்பெற்ற இரண்டு கதாபாத்திரங்கள் ஆவார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் துருபத் ராஜாவின் மகளான பாஞ்சாலி மீது மிகுந்த அன்பை கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவளை பெரும்பாலும் கிருஷ்ணா என்றே அவர் அழைத்து வந்தார். ராஜ சுயம்வரத்தின் போது, திரௌபதியை அர்ஜுனன் வென்ற போது, மிகுந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியது ஸ்ரீ கிருஷ்ணரே. அதற்கு காரணம் அவர் தான் அர்ஜுனனுக்கு குரு மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.   
    ரக்ஷா பந்தனுக்கு பின்னணியில் உள்ள புராண கதைகள்!!!
சீர்-ஹரனின் போது திரௌபதியை பாதுகாத்த கிருஷ்ணர்

No comments:

Post a Comment