Wednesday, June 22, 2016

சிறு சிறு குறிப்புகள்


வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும் ஒரு ஸ்பூன் மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். 

துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும். 

காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும். 

தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும். 

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும். 

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நடைபெறும். 

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்போது ஒரு கரண்டி பால் சேர்த்துப் பிசைந்து கொழுக்கட்டையை வேக வைத்தால் விரிந்து போகாமல் இருக்கும்.

சீடை உருட்டும்போது அது வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கையில் சிறிதளவு உப்பு தடவிக் கொண்டால் கையில் மாவு ஒட்டாது. -இரா.சுப்புலட்சுமி, ஆத்தூர்.

நீரில் சில துளிகள் சுண்ணாம்பு நீரைவிட்டு அதில் கீரைகளை சற்றுநேரம் வைத்து அலசி சமைத்தால் கீரை "ஃபிரெஷ்ஷாக' இருக்கும்.

வெள்ளரித் துண்டுகளை நெய்யில் வதக்கி சாலட் செய்தால் அதிக நீர் வெளியேறாது.

தயிர்ப்பச்சடி செய்யும்போது அதில் ஓமவல்லி இலையைச் சேர்த்தால் வாசனையாக இருக்கும். சளித் தொல்லையும் குறையும்.

மோர் அருந்தும்போது அதில் கொஞ்சம் சுக்குப் பொடி கலந்தால் நல்லது.


 வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.


சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

 முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.


 பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.


 தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.


துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

 பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.


 உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.


 வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.

 ஏதாவது விசேஷத்திற்கு சாப்பிட போகும்முன், ஒரு ஸ்பூன் தேனுடன்,ஒருசிறிய மேசைகரண்டி பட்டைபொடி சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு எதுவும் ஏற்படாது.

 படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும்.


 சளி அதிகமாக இருந்தால் பத்து துளசி இலைகளை தொடர்ந்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி அனைத்தும் வந்துவிடும்.


 தொண்டை வேக்காளாம் வந்து வயிறும் புண்ணாகி, காதில் உள்ளே அரிக்கும். அதற்கு ஒரு சிறிய குழிக்கரண்டி பச்சரிசாதம் சூடாக எடுக்கவும். அதனுடன் அதற்குத் தேவையான சுடுகிற பாலையும் சேர்க்கவும். ஆறியவுடன் ஒரு துளி தயிர் சேர்க்கவும். மறுநாள் காலை பல்விளக்கியவுடன் இந்த சாதக்கலவையை சாப்பிடவும். இந்த மாதிரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்று,தொண்டை வேக்காளம் இல்லாமல் போய்விடும்.


வயிற்று வேக்காளத்திற்கு மணத்தக்காளி கீரையைக் கூட்டு வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேக்காளம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 குழம்போ, ரசமோ செய்யும் பொழுது உப்பு போட்டு இருக்கிறோமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறிய வழி. உப்பு போடவில்லை என்றால் ஒரத்தில் நுரையுடன் கொதித்துக் கொண்டு இருக்கும். உப்பு போட்டு இருந்தால் நடுவில் நுரையுடன் கொதிக்கும்.


 குழந்தைகள் கறிவேப்பில்லை சாப்பிட மாட்டார்கள். எனவே சமையலில் தாளிக்கும் போது, பதினைந்து இலைகளைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் சத்து சேரும்.


பொரித்த கூட்டிற்கு தேங்காய் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காய்கறி வேகும் பொழுதே சிறிது சீரகம் சேர்க்கவும். அனைத்தும் வெந்தவுடன், அரை டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் கடலை மாவை நன்றாகக் கரைத்து, கூட்டில் சேர்க்கவும். தேங்காய் போட்ட ருசி கிடைக்கும்.

 குழம்பிற்கு பழைய புளியாக இருந்தால், கரைத்த புளியுடன் ஒரு சிறியகட்டி வெல்லம் சேர்த்தால், நல்ல ருசியாக இருக்கும்.


 கோதுமை தோசைக்கு கரைக்கும் போது, சில சமயம் கட்டிகட்டியாக இருக்கும். அவற்றை மிக்ஸியில் ஒரு முறை நன்றாக ஓட்டி எடுத்தால், மிகவும் மிருதுவாக தோசை வரும்.

ஷாஷேக்களில் வரும் ஷாம்பு, உபயோகிக்க முடியாத அளவு கொஞ்சூண்டு மீதம் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் விட்டு நுரை வரும்படி நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையால், வாரம் ஒருமுறை நாம் பயன்படுத்தும் சீப்புகளை நன்கு சுத்தம் செய்து, நல்ல தண்ணீரில் சுத்தமாக அலசினால் சீப்புகள் பளபளவென்று புத்தம்புதிதாக மின்னும்.

தேங்காய் சட்னியில் காரம் அதிகமாகிவிட்டதா? அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள். காரம் குறையும். சுவையும் அதிகரிக்கும்.

பக்கோடாவுக்கு மாவு பிசறும்போது கொஞ்சம் பிரெட் தூளையும் கலந்தால் பக்கோடா மொறு மொறுவென சூப்பராக இருக்கும்.

நெய் ரொம்ப நாளுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? அதில், கொஞ்சம் வெல்லத்துண்டைப் போட்டு வையுங்கள்.

காபித்தூள் வைக்கிற டப்பாவில் நான்கு அல்லது ஐந்து அரிசி போட்டு வைத்தால் அது கட்டியாகாது.

குக்கரின் உள்பாகம் கறை படிந்திருக்கிறதா? உள்ளே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் கழுவ, பளிச்சிடும் குக்கர்!

கறை படிந்த கண்ணாடி கதவுகளைத் துடைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம்... வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு சொட்டு நீலம் போட்டு, பிறகு துடையுங்கள். இப்போது பாருங்கள்... பளிங்காக பளீரிடுகிறதா கண்ணாடி?

|கத்தி துருப்பிடித்துள்ளதா? அந்தப் பகுதியை ஒரு சிறிய வெங்காயத் துண்டில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து நன்றாகத் துடையுங்கள். துரு ஓடிப்போய்விடும்.

என்ன செய்தும் ஃபிளாஸ்க்கில் வருகிற துர்நாற்றத்தைப் போக்க முடியவில்லையே என்கிறவர்கள், வெந்நீருடன் தயிரைக் கலந்து கழுவுங்கள். வாடை நீங்கி, வசீகரிக்கும் ஃபிளாஸ்க்.

டாய்லெட்டில் கொசு மண்டுகிறதா? கொஞ்சம் மண்ணெண்ணையைத் தெளித்துவிடுங்கள். ஒரு கொசுவும் உள்ளே நுழையாது.
....
டிப்ஸ்... டிப்ஸ்...

பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா!

ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் அரை ஆழாக்கு வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் உப்பு, காரப் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை தட்டினால், குறைந்த நேரத்தில் சுவையான மொறுமொறுவென்று வாயில் கரையும் வடைகள் தயார்!
-----------------------------------------------------------------
தோசை மிளகாய்ப்பொடி, ஊறுகாய்க்கான மிளகாய்ப்பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும்போது சரியாக அரைபடாது. முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.
------------------------------------------------------------------------------
பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால், சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும். மசாலா மணத்துடன் கட்லெட் போன்ற ருசியுடன் இருப்பதால், தக்காளி சாஸையே தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------
பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கும்போது, குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க ஒரு சூப்பர் யோசனை!

மூடியுள்ள ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடியால் மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு அட்டகாசமாக வெந்திருக்கும்.
----

No comments:

Post a Comment