Wednesday, May 18, 2016

ஆண்களுக்கு அலாரம்... ப்ராஸ்டேட் சீக்ரெட்ஸ்

55-60 வயது ஆனாலே, பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை சிறுநீர் கழித்தலில் சிரமம். சொட்டுச்சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்க அதிகம் சிரமப்படுதல் என்று தங்களுக்கு இருக்கும் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கியே, பிரச்னையைப் பெரிதாக்க விட்டுவிடுகின்றனர். முடி நரைத்தல், கண்ணில் புரை போல, ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு பெரிதாவதும் இயற்கைதான். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எளிதில் சரிப்படுத்தலாம்.
ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் ப்ராஸ்டேட் சுரப்பி முக்கியமானது.  இந்த சுரப்பி, சிறுநீரகப் பைக்கு கீழ் வால்நட் வடிவத்தில் அமைந்திருக்கிறது. விதைப் பையில் இருந்து விந்து அணுக்கள், பிரத்யேகக் குழாய் வழியாக இந்த சுரப்பிக்கு வரும். ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து வெளிவரும் வெள்ளை நிறத் திரவம் விந்து அணுக்களுடன் இணைந்து விந்து திரவம் (Semen) உற்பத்தியாகிறது.  இந்த வெள்ளை நிறத் திரவ உற்பத்திக்கு ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜன் (Prostatespecific antigen) என்ற புரதம் காரணமாக இருக்கிறது.
வயது அதிகரிக்கும்போது, ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு இயல்பாகவே சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், 25 கிராம் எடை அளவுக்குள் இருப்பது நல்லது. ப்ராஸ்டேட் சுரப்பி வெளிப்புறத்தில் பெரிதானால், பயப்படத் தேவை இல்லை.  ஆனால், சுரப்பியின் உட்புறமாகத் தடித்து பெரிதானால், அதன் தசைகள் சிறுநீர் செல்லும் குழாயை நெருக்கும்.  இதனால், சிறுநீர் வெளியேறுவதில் கடினமான சூழல் ஏற்படும். 
ப்ராஸ்டேட் பெரிதாக இரண்டு காரணங்கள் உள்ளன. புற்றுநோய் காரணமாக பெரிதாவது ஒரு வகை. பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா (Benign Prostatic hyperplasia) எனும் பிரச்னை மற்றொரு வகை.
பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா
60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா பிரச்னை இருக்கிறது. ஆண்களுக்கு வயதானவுடன் ப்ராஸ்டேட் ஏன் பெரிதாகிறது என்பதற்கு முழுமையான மருத்துவ விளக்கம் கிடையாது. எனினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் - ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் விகிதம் மாறும்போது, ப்ராஸ்டேட் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 
ப்ராஸ்டேட் பெரிதாகும்போது அதில் இருக்கும் ஃபைபர் தசைகள் அதிகமாக இயங்க ஆரம்பிப்பதால் வலி ஏற்படும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால், ஒரு கட்டத்தில்  சிறுநீரை வெளியேற்ற முடியாமல் போகலாம். அதன் பிறகு செயற்கையாக டியூப் பொருத்தி சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். உடலில் சிறுநீர் அதிகமாகத் தங்கும்பட்சத்தில் சிறுநீரகத்தின் செயல்திறனும் குறைந்து சிறுநீரகக் கோளாறுகளும் வரக்கூடும்.
இந்தப் பிரச்னை சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு அதிகம் காணப்படும். இந்த சுரப்பி பெரிதாவதை ஆரம்பக் நிலையில் கண்டறிந்தால், மருந்து மூலமாக, கட்டுப்படுத்த முடியும். முற்றிய நிலையில், அறுவைசிகிச்சைதான் தீர்வு.
ப்ராஸ்டேட் பெரிதாவதை மருத்துவர்கள் நேரடியாக தொட்டுப் பார்த்தே ஓரளவு கண்டுபிடிக்க முடியும். எனினும், ரத்தத்தில் பி.எஸ்.ஏ அளவு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்
பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவது போல், ஆண்களுக்கு பிரத்யேகமாக வரக்கூடியது ப்ராஸ்டேட் புற்றுநோய். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  குறைவுதான். 60 வயதை தாண்டியவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம் வயது அதிகரிக்கும் போது புற்று நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பி.எஸ்.ஏ பரிசோதனை செய்த பிறகு, புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும்பட்சத்தில், ப்ராஸ்டேட்டை நுண்ணிய அளவில் எடுத்து பயாப்சி செய்யப்படும். ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டால், ரோபோட்டிக் சர்ஜரி மற்றும் ரேடியோ தெரப்பி மூலம் குணப்படுத்திவிட முடியும்.  முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு, ஹார்மோன் சென்
சிட்டிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் என்ற இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிட்டிவ் டைப்பில் விரைகளை நீக்கி, டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை 15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில், சிகிச்சைகள் அளித்தாலும் பெரிய அளவில் பயன் தராது.
ப்ராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டாலே புற்றுநோய் என பீதி அடைய வேண்டியது இல்லை. தற்போது இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் குறைவு என்றாலும் மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக வருங்காலத்தில் அதிகரிக்கக்கூடும். எனவே ப்ராஸ்டேட் பற்றிய விழிப்புஉணர்வு ஆண்களுக்கு மிகவும் அவசியம்.
சிறுநீருக்கான சுய பரிசோதனை!
வயதானவர்கள் மாதம் ஒருமுறை சிறுநீர் சரியாக வெளியேறுகிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து 300 மிலி கொள்ளளவு கொண்ட குடுவையில் சிறுநீர் கழிக்க வேண்டும். 30 விநாடிகளில் சிறுநீர் முழுவதுமாக வெளியேறினால், பிரச்னை இல்லை. அடுத்த மாதம் மீண்டும் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீர் முழுவதுமாக கழிக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகிறது எனில் எச்சரிக்கையாக இருக்க
வேண்டியது அவசியம். இந்த சோதனையை,  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மூன்று - நான்கு முறை செய்து சிறுநீர் தாமதமாக வெளியேறுவதை உறுதிப்படுத்தினால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
 50 வயதைக் கடந்த ஆண்கள், ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி சாப்பிடவும். குறிப்பாக லைக்கோபீன் (Lycophene) நிறைந்த தக்காளி, தர்பூசணி, மாதுளம்பழம் சாப்பிடுவது ப்ராஸ்டேட் பிரச்னைகளைத் தடுக்கும்.

கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா.

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்? இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க.
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனு சொல்வாங்க.
நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகை

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!..
1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம் :
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்:
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,
இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.
பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,
சர்ப்ப சாபம்
உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப
வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம்
பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7) பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.
பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
8) கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9) விருட்ச சாபம்:
பச்சை மரத்தை
வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.
விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10) தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
11) ரிஷி சாபம்:
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12) முனி சாபம்:
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.
முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.
குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.
ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.
தீயவர்களை அழிக்கும்.
எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.
-சிவம்

"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்"

"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்"
(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும்
நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும்
அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத்
தெரிந்துகொள்ள முடியாதா என்ன?)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஆத்தூர் அஞ்சல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்
முகுந்தராஜ்.சென்னையிலிருந்து பதவி உயர்வின்
காரணமாக ஆத்தூர் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்
அவருக்கு ஒரே மகன். எம்.டெக். வரை படித்திருக்கான்.
அந்தப் படிப்புக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தால்
நன்றாக இருக்கும் என்று தந்தை நினைத்தார்.வேலைக்கு
முயற்சிப்பதை ஒத்திப் போட்டு மகனின் ஜாதகம்
எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல்.
அப்போது பெத்தநாயக்கன் பாளயத்தில் ஓர் ஆந்திர
ஜோசியர் இருந்தார்.ராமபட்லு சாஸ்திரிகள் என்பது
அவரது பெயர். முகுந்தராஜ் தன் உதவியாளர்
சீனிவாசனிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து,
ஜோசியரிடம் அனுப்பினார். அந்த ஜோசியர்,
சீனிவாசனுக்கு நன்கு அறிமுகமானவர்.
"பையனுக்கு அமெரிக்காவில் நிச்சயம் வேலை
கிடைக்கும்.இங்கு தனக்குச் சொந்தமான
பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வான்.
இன்னும் நான்கு மாதங்களில் இவை நடக்கும்"
என்று ஜோசியர் எழுதியே கொடுத்துவிட்டார்.
அதை வாங்கித் தன் பையில் பத்திரப்படுத்திக்
கொண்ட சீனிவாசன் ஊர் திரும்பியபோது,
போஸ்ட் மாஸ்டர் வேறு வேலையாகச் சென்னை
சென்று விட்டார். 'வந்தபிறகு கொடுத்துக்
கொள்ளலாம்' என்று இவரும் அதைப் பத்திரமாகத்
தன் பையில் வைத்துக் கொண்டார்.
இதற்கிடையில் சீனிவாசன் வழக்கப்படி, மாதம்
ஒருமுறை காஞ்சி மகானைத் தரிசிக்கப் போவதுண்டு
அந்த மாதமும் போயிருந்தார். மகான் அமர்ந்திருக்க
சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அமைதியாக
ஒவ்வொருவராக எழுந்து தங்களது வேண்டுதல்களை
சொல்லிக் கொண்டிருந்தனர்.
தன் முறை வந்தபோது, ஒரு பெண்மணி எழுந்து தன்
மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவேண்டும்
விரைவில் திருமணமும் ஆகவேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
மகான் முகத்தில் லேசான புன்முறுவல். சற்றுத் தள்ளி
அமர்ந்திருந்த சீனிவாசனைப் பார்த்தார். இந்தப்
பெண்மணிதான் போஸ்ட் மாஸ்டர் முகுந்தராஜின்
மனைவி என்பதே சீனிவாசனுக்குத் தெரியாது.
"பையில் பத்திரமா வெச்சுண்டு இருக்கியே......
அந்த ஜாதகத்தை இப்படிக் கொடு!" என்று கேட்கிறார்.
சீனிவாசன் ஜாதகத்தை எடுக்க "அதை அந்த
அம்மாளிடம் கொடு" (ஜோதிடர் எழுதிய பலனோடு)
என்று உத்தரவு போடுகிறார்.அந்த இருவருக்கும்
ஒரே நொடியில் விவரம் புரிகிறது.
அது சரி.....தன் பையில் வைத்திருந்த ஜாதகக் குறிப்பு
பற்றி மகானுக்கு எப்படித் தெரியும்? முகுந்தராஜின்
மனைவி அங்கே வருவார் என்பதும் இவருக்குத்
தெரியாதே!
மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும்
நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும்
அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத்
தெரிந்துகொள்ள முடியாதா என்ன?
(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும்
நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும்
அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத்
தெரிந்துகொள்ள முடியாதா என்ன?)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஆத்தூர் அஞ்சல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்
முகுந்தராஜ்.சென்னையிலிருந்து பதவி உயர்வின்
காரணமாக ஆத்தூர் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்
அவருக்கு ஒரே மகன். எம்.டெக். வரை படித்திருக்கான்.
அந்தப் படிப்புக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தால்
நன்றாக இருக்கும் என்று தந்தை நினைத்தார்.வேலைக்கு
முயற்சிப்பதை ஒத்திப் போட்டு மகனின் ஜாதகம்
எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல்.
அப்போது பெத்தநாயக்கன் பாளயத்தில் ஓர் ஆந்திர
ஜோசியர் இருந்தார்.ராமபட்லு சாஸ்திரிகள் என்பது
அவரது பெயர். முகுந்தராஜ் தன் உதவியாளர்
சீனிவாசனிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து,
ஜோசியரிடம் அனுப்பினார். அந்த ஜோசியர்,
சீனிவாசனுக்கு நன்கு அறிமுகமானவர்.
"பையனுக்கு அமெரிக்காவில் நிச்சயம் வேலை
கிடைக்கும்.இங்கு தனக்குச் சொந்தமான
பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வான்.
இன்னும் நான்கு மாதங்களில் இவை நடக்கும்"
என்று ஜோசியர் எழுதியே கொடுத்துவிட்டார்.
அதை வாங்கித் தன் பையில் பத்திரப்படுத்திக்
கொண்ட சீனிவாசன் ஊர் திரும்பியபோது,
போஸ்ட் மாஸ்டர் வேறு வேலையாகச் சென்னை
சென்று விட்டார். 'வந்தபிறகு கொடுத்துக்
கொள்ளலாம்' என்று இவரும் அதைப் பத்திரமாகத்
தன் பையில் வைத்துக் கொண்டார்.
இதற்கிடையில் சீனிவாசன் வழக்கப்படி, மாதம்
ஒருமுறை காஞ்சி மகானைத் தரிசிக்கப் போவதுண்டு
அந்த மாதமும் போயிருந்தார். மகான் அமர்ந்திருக்க
சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அமைதியாக
ஒவ்வொருவராக எழுந்து தங்களது வேண்டுதல்களை
சொல்லிக் கொண்டிருந்தனர்.
தன் முறை வந்தபோது, ஒரு பெண்மணி எழுந்து தன்
மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவேண்டும்
விரைவில் திருமணமும் ஆகவேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
மகான் முகத்தில் லேசான புன்முறுவல். சற்றுத் தள்ளி
அமர்ந்திருந்த சீனிவாசனைப் பார்த்தார். இந்தப்
பெண்மணிதான் போஸ்ட் மாஸ்டர் முகுந்தராஜின்
மனைவி என்பதே சீனிவாசனுக்குத் தெரியாது.
"பையில் பத்திரமா வெச்சுண்டு இருக்கியே......
அந்த ஜாதகத்தை இப்படிக் கொடு!" என்று கேட்கிறார்.
சீனிவாசன் ஜாதகத்தை எடுக்க "அதை அந்த
அம்மாளிடம் கொடு" (ஜோதிடர் எழுதிய பலனோடு)
என்று உத்தரவு போடுகிறார்.அந்த இருவருக்கும்
ஒரே நொடியில் விவரம் புரிகிறது.
அது சரி.....தன் பையில் வைத்திருந்த ஜாதகக் குறிப்பு
பற்றி மகானுக்கு எப்படித் தெரியும்? முகுந்தராஜின்
மனைவி அங்கே வருவார் என்பதும் இவருக்குத்
தெரியாதே!
மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும்
நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும்
அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத்
தெரிந்துகொள்ள முடியாதா என்ன?

குளியல் !


            உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.
சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.
இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.
சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.
வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,
எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.
இதன் மூலம் என்ன ஆனது..
சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.
நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.
சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.
இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.
நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல
உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
நலம் நம் கையில்

"சிவன் சொத்து குல நாசம்"

நாம் எல்லோரும் சிவனை தரிசிக்க சிவலாயத்திற்கு போகிறோம் .அங்கே கருவறை வலம் வரும்
போது ,அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் சண்டிகேசுவரர் எழுந்தருளி இருப்பார்.சண்டேசுவரரை   "சண்டிகேசுவரர் " என்று  நாம் கூறுகிறோம் .இவர் சிவபெருமான் பக்தர் .இறைவன் திருவருள் பெற்ற அடியார் .எப்போதும் தியானத்திலேயே இருப்பவர்.

ஏதோ சாமி கும்பிட்டோம் என்று இல்லாமல் அவருடைய வாழ்க்கையை  தெரிந்து கொண்டு, சாமி கும்பிட்டால் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் .
ஆதலால்  இந்த சண்டேசுவரரைப்   பற்றி தெரிந்து கொள்ள உங்களையும் அழைக்கிறேன் .ஓம் நமச்சிவாயா!
இவர் மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் எனும் சிற்றூரில் அந்தணர் வீட்டில் எச்சதத்தன் ,பவித்திரை என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்,இவர் பெயர் விசாரசருமர் .
மாடுகள் மேய்ப்பதை விடுத்து ,மண்ணால் சிவலிங்கம் செய்து ,பூஜை செய்து வந்தார் .பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர் .இதையறிந்த தந்தை ,அவரை கோலால் அடித்தார்.ஆனால்  அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார் .இதனால் கோபம் அதிகமாகி ,அபிஷேக பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவருடைய தந்தை .சிவ பக்தியால் கீழே கிடந்த கோலை  எடுத்தார் .அது மழுவாக மாறியது .
அதை கொண்டு தன்  தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர் .அப்போது சிவபெருமான் காட்சி தந்து இனி நாமே உமக்கு தந்தை எனக்கூறி ,திருதொண்டர்களுக்கு அவரை தலைவராக்கினார்.தன் சிரசில் கிடந்த கொன்றை மாலையை அவருக்கு சூட்டி ,இனி உன் பெயர் "சண்டேசுவரர்"என்று அனைவரும்  அழைப்பர் .என்றென்றும் என்  அருகில் இரு என்று அருள்மழை பொழிந்தார் நம் அய்யன் சிவபெருமான்.
சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள் எல்லாம் சண்டிகேசுவரர் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன .
நாம் எல்லோரும் "சிவன் சொத்து குல நாசம்"என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.எந்தவொரு  பொருளையும் சிவன் ஆலயத்திலிருந்து வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது .மூலவரை தரிசித்து விட்டு ,இறுதியாக இவர் சந்நிதிக்கு வந்து வழிபடவேண்டும் .
இவர் முன் சிலர் தங்கள் ஆடைகளில் உள்ள நூலை எடுத்து போடுவதை காணலாம் .இது அறியாமையால் ,மற்றவர்கள் செய்வதை பார்த்து ,சிலர் செய்கிறார்கள் .இது தவறான ஒன்று .இன்னும் சிலர் இரு கைகளைத் தட்டியும்,சொடுக்கிட்டும் சண்டிகேசுவரரை வணங்குகிறார்கள் .இவர் சிவபெருமானை நினைத்து தியானத்தில் இருப்பவர் என்பதால் அவரை வணங்கும் போது  நம் இரு கைகளையும் துடைத்து விட்டு, இங்கிருந்து நான் எதையும் கொண்டு செல்லவில்லை என்று வணங்க வேண்டும் .
நாம் சிவபெருமானை வணங்கி சென்றதை கணக்கு வைத்து கொண்டு ,சிவபெருமானிடம் நம் பிராத்தனைகளை சேர்ப்பார் என்பது  ஒரு நம்பிக்கை.
இனிமேல் சிவனை வணங்கிவிட்டு சண்டேசுவரரை தொந்தரவு செய்யாமல் வணங்குங்க .எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்க நானும் பிராத்திக்கிறேன் .

"தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!"


(பர்வத மலை கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்)
நன்றி-.2014 மே மாத குமுதம் பக்தி
சர்வேஸ்வரன் சகல ஜீவராசிகளுக்கு படியளக்கறவர். சதா சர்வ காலமும் அவரோட நினைப்பெல்லாம் லோக ரட்சணம் பத்திதான் இருக்கும்னு புராணங்கள் எல்லாம் சொல்றது.
சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.
திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.
பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார்.
ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.
அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.
பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார்.
உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.
அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.
அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது.
அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.
கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.
அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.
எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.
வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.
கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.
- பி. ராமகிருஷ்ணன்

ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

ஒருமுறை, தம் யாத்திரையில் ஒரு கிராமத்தில் பெரியவர் தங்க நேர்ந்தது. அங்கே மடத்துக்கு சொந்தமான நிலத்தில் அந்த வருடம் அமோகமாக கடலை விளைந்திருந்தது. குத்தகைதாரர் அவ்வளவையும் அறுவடை செய்து விற்றும் விட்டார். பெரியவரின் தரிசனத்தின்போது, மகிழ்வோடு அதை குறிப்பிட்டார். அப்போது அவருக்கு படைப்பதற்காக எல்லாவிதமான பழங்களுடனும், முந்திரி, கற்கண்டு போன்ற பதார்த்தங்களுடனும் பலர் காத்துக் கொண்டிருக்க, அவைகளை ஏறெடுத்தும் பாராமல், அந்த நிலத்தில் நன்கு விளைந்ததாக சொன்ன கடலையில் ஒரு கைப்பிடியை ஆசையாகக் கேட்டார் பெரியவர்.
குத்தகை விவசாயி ஆடிப்போய்விட்டார்.
இப்படிக் கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.
அதேசமயம், அவ்வளவையும் விற்று விட்டதால் கைவசமும் கடலையில்லை. இது என்ன சோதனை என்று அவர் தவித்தாலும், அவருக்குள் ஒரு உபாயம் தோன்றியது. ‘இதோ போய் கொண்டு வருகிறேன்’ என்று ஓடினார். திரும்பி வரும்போது, ஒரு கைப்பிடி என்ன பல கைப்பிடி கடலை அவரிடம்! அதில் ஒன்றை எடுத்து பெரியவர் பார்த்தார். அந்த ஒன்றில் ஒரு ஓரமாய் எலி கொரித்தது போன்ற அறிகுறி. உடனேயே கேட்டார் பெரியவர்: இது பறிச்சதா? கொரிச்சதா?” என்று…!
பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.
பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.
ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன. எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை.
மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார்.
அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.
வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின! சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

மனு, பெண்ணுரிமை, பிராமணீயம்

மனு, பெண்ணுரிமை, பிராமணீயம்
முதலில் “மனு” என்பது ஒரு பதவியின் பெயர். அந்த மனு என்னும்  பதவிக்கு க்ஷத்ரியர்கள்தான் வரமுடியும் “மனுவாக” ஒரு பிராமணர் வரமுடியாது. எனவே, இதில் எங்கு ஆரியம் / பிராமணீயம் வந்து ஒட்டிக்கொண்டது எனத் தெரியவில்லை.
     மனுவினை எதிர்ப்பவர்கள் கூட இன்றும் தமிழக அரசு சார்பில் நடக்கும் “மனுநீதி” நாளை அந்த மனுவின் பெயரில் தான் சிறப்பிக்கிறார்கள் என்பது வேடிக்கை..
மனுவில் பெண் உரிமை
1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக்கூடாது. (மனு 2-52)
2)  எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.
எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)
3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)
4)   நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)
5)  கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)
6)        குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண்  இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394)
7)        இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)
8)   எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)
9)           கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10)  அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57) 
11)    பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)
12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)
பிராமணீயம்
     அடுத்து பிராமணர்கள் வேறு எந்த ஜாதியரையும் அடக்கி விட்டார்களாம், அதற்கு ஆன்மீகம் என்பது ஆயுதம், சூழ்ச்சி என்பார்கள்.

     பிராமணர்கள் மற்ற வர்ணத்தினர் தந்த ஞான செல்வத்தினை ஜாதி வர்ண பேதமின்றி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை காண்போமா?
     பிராமணர்களை பெரும்பாலும் அடையாளம் காட்டுவது பூணல்.  க்ஷத்ரியர்கள், வைசியர்கள் பூணல் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்ட காலத்தில் பூணல் பிராமணர்களின் தனி அடையாளம் என்கிற ரீதியில் வெறுப்பாளர்கள், எதிர்பாளர்களால் அடையாளப் படுத்தப்படுகிறது.
     பூணலில் முக்கியமானது  தந்தை மகனுக்கு உபதேசிக்கும் “காயத்ரீ” என்னும்  மந்திர உபதேசம்.  இந்த காயத்ரீயை கண்டு வெளிப்படுத்தியவர் (திருஷ்டா) விஸ்வாமித்ரர். இவர் க்ஷத்ரியர். பிறப்பால் பிராமணர் அல்ல. பிராமணர்களின் முக்கிய சடங்கான பூணலில் உபதேசிக்கப்படும் மந்திரம்   பிராமணர் கண்ட மந்திரமல்ல.
     பிராமணன் காயத்ரீ ஜபத்தினாலேயே மோக்ஷத்தினையடைகிறான். இதில் சந்தேகமில்லை. மனு இரண்டாம் அத்தியாயம் 87 வது ஸ்லோகம்
     பிராமணர் பெரிதும் போற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் மகாபாரதத்தில் உள்ளது. இன்றும் ஜோதிடர்கள் பிராயாச்சித்தம் என பிராமணர்களுக்குக்கூட கூறுவதில் முக்கியமானது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்.
     இந்த  ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் க்ஷத்திரியரான  ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்துதி. இதையும் பிராமணர்கள் உருவாக்கவில்லை மாறாக வர்ண பேதமின்றி ஸ்துதித்து வணங்குகின்றனர்.
     அடுத்து பிராமணர்கள் போற்றும் இதிகாசம் இரண்டு அதில் முதல் ஸ்ரீ ராமாயணம் அதை எழுதியது பிராமணரா? என்றால் இல்லை. ஸ்ரீ வால்மீகி என்னும் ரிஷி அவர் வேடுவகுல ஜாதி, அடுத்த காவியமாம் உயர்ந்த தத்துவ நூலாம் கீதையைக் கொண்ட ஸ்ரீ மஹாபாரதம் அதை எழுதியவரான ஸ்ரீ வியாசர் அவரது தாயோ ஒரு மீனவ பெண்மணி.
     கீதையை சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ இடையர்குலம். பிராமணனாகிய ராவணனை வதம் செய்ய  ஸ்ரீ ராமன் அவதரித்ததோ  க்ஷத்ரியர் குலம்.
     பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்தார்கள் என்பதற்காக ஸ்ரீ ராம , ஸ்ரீ கிருஷ்ண நாமங்களை பிராமணர்கள் ஜபிக்காமல் இல்லை. சொல்லப் போனால் அதை உச்சரித்துக்கொண்டே காலம் கழிப்பது மோட்சத்திற்க்கு வழி என பலர் வாழ்கின்றனர்.
     தசாவதாரங்களில் இரண்டு அவதாரங்கள் மட்டுமே பிராமண அவதாரம் அவை வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் அவை இரண்டுக்கும் பாரத தேசமெங்கும் கோவில் இல்லை என்பது தானே உண்மை. பிராமணீயத்தினை உயர்த்திட எண்ணியிருந்தால் இந்த இரண்டு அவதாரங்களுக்குக்தானே கோவில்கள் கட்டியிருக்கவேண்டும்.
     தொட்டதற்கெல்லாம் பிராமண சூழ்ச்சி என உணர்ச்சிவசப்படும் “பகுத்தறியாதவர்கள்” இந்த வழிபாட்டு முறையினை சிந்திக்கவேண்டும்.
     மஹாபாரதம் சாந்தி பர்வம் 85வது அத்தியாயம் ராஜ தர்மத்தினை பற்றி பீஷ்மர் தர்மருக்கு உபதேசிக்கிறார் அதில் அமைச்சர்களினை தேர்வு செய்வது குறித்து கூறும்போது....
      பீஷ்மர், பிரும்மச்சர்யத்தினை முடித்த, கற்ற பரிசுத்தமுள்ள பிராமணர்கள் நால்வரையும், பலசாலியான ஆயுதமுள்ள 18 க்ஷத்திரியர்கள், நிறைந்த பொருளுள்ள 21 வைசியர்களையும், மூன்று சூத்திரர்களையும் அமைச்சர்களாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
     முற்றிலுமாக நான்காம் வர்ண ஜாதியினரை அடிமையாக்கிவிட்டது உங்கள் மதம் என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது.
     பெருமாள் கோவில்களில் எல்லோரது தலையிலும் வைக்கப்படும் “சடாரி” என்பது நம்மாழ்வார் எனப்படும் பிராமணரல்லாத அதுவும் வர்ணத்தின்படி நான்காம் வர்ணத்தினர் காலடிகள் / திருவடிகள்.
 
     எந்த பிராமணரின் காலடிகளும் திருவடிகளாக சடாரியாக கோவில்களில் இல்லை என்பதையும், ஜாதி வர்ணம் என்பதை விலக்கி ஞானத்தினை முன்னிறுத்தியதே நமது தேசத்தின் பண்பாடு, ஆன்மீகம், மதம், கலாசாரம் மற்றும் உயர்ந்த மரபு வழியாகும்.

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) தாய்க்குலத்தின் பெருமை



வைரத்திலும் பட்டிலும் நம் ஸ்திரீகளுக்கு எப்படியாவது மோஹம் போய்விட்டால் போதும், நம்முடைய குடும்ப வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் ஸ்திரீதர்மமே பிழைத்துப் போய்விடும். 'லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரமா? சாப்பாட்டிலே நாம் சைவம் என்று சொல்லிக் கொண்டால் போதுமா? இத்தனை பட்டுப் பூச்சிகளின் கொலை பாவத்துக்கு ஆளாகிறோமே!' என்கிற எண்ணம் பெண்களுக்கு வந்துவிட்டால் போதும். இதிலே இன்னொரு அம்சம், இதனால் வசதியில்லாதவர்களுக்கும் பட்டிலும், வைரத்திலும் ஆசையைத் தூண்டி விடுவது. பிள்ளை வீட்டுக்காரர்கள் "இத்தனை பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும், வைரத் தோடு போட வேண்டும்" என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அநேகப் பெண்களை கல்யாணமாகாது நிறுத்தி வைக்கும்படி பண்ணுவது பாபம்.

கல்யாணத்தை economic problem [பொருளாதாரப் பிரச்சனை] -ஆகப் பண்ணியிருப்பது அக்கிரமம். "அக்கிரமம்" என்கிற வார்த்தையைத்தான் சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு பெண்ணோடு பிறந்தவர்கள்தானே? நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், "வரதக்ஷிணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு" என்று ஷைலக் மாதிரி கன்டிஷன் போட்டுப் பெண் குழந்தைகளை கல்யாணமாகாமல் கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதற்கேயில்லை. பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா? 'நம் அகத்தை விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்தக் குழந்தை வரவேண்டும்' என்று ஸந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல் கலியாணம் பண்ணிக்கொள்கிற நல்ல மனஸ் நம் ஜனங்களுக்கு வரவேண்டும்.

இதில் ஸ்திரீகளின் பங்கு விசேஷமானது. பெண்ணாக பிறந்தவர்களுக்குத்தான் தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும் அநுதாபமும் இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணுகிற ஸமயத்தில் பெண்டுகள் குறிப்பாக நான் சொன்ன விதத்தில் உயர்ந்த பண்போடு நடந்து கொள்ளவேண்டும். 'அந்த அகத்தில் அப்படிச் சீர் செய்தார்களே; அந்த பிள்ளைக்கு அவ்வளவு செய்தார்களே; அந்த மாதிரி நம் பிள்ளைக்கு நடக்காவிட்டால் எப்படி? அது நமக்குக் குறைவு இல்லையா?' என்ற மாதிரி அசட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற பிள்ளையகத்துக்காரர்களுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டும். 'இதுவரை மற்றவர் பண்ணின தப்பை, அக்ரமத்தை ஏன் நாம் follow பண்ண வேண்டும்? இனிமேலே மற்றவர்கள் நம்மை follow பண்ணும்படியாக இப்போது நாம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவேயல்லவா நமக்குப் பெருமை?' இப்படிப்பட்ட உணர்ச்சி தாய்க்குலத்துக்கு உண்டாக வேண்டும்.

'நம்மகத்துப் பெண்ணுக்கு நாம் வரதக்ஷிணை கொடுத்தோமே! நமக்கே நம் அப்பாவும் அந்த காலத்தில் வரதக்ஷிணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை' என்று தாங்களாக நியாயம் கற்பித்துக் கொண்டுவிடக் கூடாது. இந்தக் கெட்ட பழக்கம் - நம் தர்மத்தைச் சிதைக்கிற பழக்கம் எப்படியாவது நிற்க வேண்டும். இதற்காக யாராவது இப்போது தியாகியாக முதலடி எடுத்து வைத்துத்தான் ஆகவேண்டும். எதெதற்கோ தியாகம் என்று கிளம்புகிறார்களே! ஒரு ஊர் இந்த ஜில்லாவில் இல்லாமல் இன்னொரு ஜில்லாவுக்குப் போகிறது என்றால் அதற்காக நூறு பேர், ஆயிரம் பேர் மறியல் செய்து ஜெயிலுக்குப் போகிறார்கள்; எவனாவது ஒருத்தன் கெரஸினைத் தன் மேலே கொட்டிக் கொளுத்திக் கொண்டு, உயிரையே விடுகிறான்! நம்முடைய உயர்ந்த ஸ்த்ரீ தர்மத்தைக் காப்பாற்ற நாம் கொஞ்சம் பண நஷ்டம் படக் கூடாதா?

"ஸெளந்தர்யலஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம்" என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம்தான். ஆசீர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய பிரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதக்ஷிணை, வைரத் தோடு, சீர் ஸெனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் நான் சொன்ன மாதிரிக் கலியாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால்தான் முடியும். தங்கள் மாதிரியான பெண்கள் வயசு வந்தும் கலியாணமாகாமல் நிற்பது, அதனால் மனோ விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு இவர்களுக்கு மனசு இரங்கினால் இவர்களிடம் அம்பாளுக்கு மனசு தானாக இரங்கும்.

'நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று ஸ்வயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்' என்று சொல்வதுகூட தப்பு. ஏனென்றால் ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரிப் போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமலே ஒருத்தர் வரதக்ஷிணை கொடுத்தாலும் இதனால் அவர் தன் பிள்ளைக்கும் கலியாணம் பண்ணும்போதும் வரதக்ஷிணை எதிர்பார்க்கத்தான் செய்வார். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும்கூட, "வேண்டாம்" என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும். பெண்வீட்டாருக்கு மிதமிஞ்சிப் பணம் இருந்தால் கூட, "எங்களுக்குப் பணம் தராதீர்கள்". உங்கள் பெண்ணுக்கே ஸ்ரீ தனமாகப் போட்டு வையுங்கள்" என்று சொல்ல வேண்டும்.

பிள்ளை வீட்டுக்காரர்களின் செலவுக்கு - அதாவது பிள்ளையின் உறவுக்காரர்களுக்கு துணிமணி வாங்குகிறது; இவர்கள் கலியாணத்துக்குப் போகிற பிரயாணச் செலவு முதலானதுகளுக்கு - பெண் வீட்டுக்காரர் 'அழ' வேண்டும் என்பது துளிக்கூட நியாயமே இல்லை. நம் பிள்ளைக்குத்தானே கல்யாணம்? நாமே ஏன் அதற்கு செலவழிக்கக் கூடாது? எவனோ கொடுக்கிற பணத்தில் நாம் டிரஸ் வாங்கிக் கொள்வது அவமானம்தான். நமக்கு வக்கில்லை என்றுதான் அர்த்தம். இதையே 'பிள்ளையகத்து ஸம்பந்தி' என்று பெரிய பெயரில் தங்கள் 'ரைட்' மாதிரி மிரட்டி உருட்டிச் செய்து வருகிறோம்! வரதக்ஷிணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி. திருட்டுச் சொத்து மாதிரி என்ற பயம் வேண்டும். இது இரண்டு தரப்போடு நிற்காமல் vicious circle -ஆக [விஷ வட்டமாக] ஸமூஹத்தையே பாதிப்பதால் எப்படியாவது இதை ஸமாப்தி பண்ண வேண்டும்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.


2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

- மஹா பெரியவா

தவறு செய்தவர்களை மன்னியுங்கள்.


தவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.
நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நமக்கு செய்த துரோகம், நம் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், அவற்றை மறந்து மன்னிப்பதே, இறைவனின் சன்னிதானத்தில் நமக்கு பெருமையைத் தரும். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான், மாமன்னர் நரசிங்க முனையரையர்.
திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். இவரது நண்பர் சடையனார்,
திருநாவலூரில் வசித்து வந் தார். சடையனாரின் மனைவி இசைஞானியார். இவர்களுக்கு பிறந்த மகனே சுந்தரர். குழந்தை சுந்தரர் மிகவும் அழகாக இருப்பார்.
இக்காலத்தில், குழந்தைகள் நடை வண்டி ஓட்டி விளையாடுவது போல, அன்று, சிறு தேர்களை குழந்தைகள் ஓட்டி விளை யாடுவர். குழந்தையான சுந்தரரும் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்னர் நரசிங்க முனையரையர் அவ்வழியாக தேரில் வந்தார்.
சிறுதேரை, பல குழந்தைகள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந் தாலும், சுந்தரரின், "பளிச்’ அழகு, முனையரையரை கவர்ந்தது. அந்த குழந்தையைத் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் மேலிடவே, குழந்தை யின் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். அந்த குழந்தை, தன் நண்பர் சடையனாரின் குழந்தை என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவரிடம் பேசி, குழந்தையை அரண்மனையிலேயே வளர்க்க அனுமதி கேட்டார். சடை யனாரும் ஒப்புக்கொண்டார்.
பக்தனுக்கு அடிப்படை குணம் இரக்கம். அது நிறையவே இருந்தது மன்னர் முனையரையரிடம்; அவர் சிறந்த சிவபக்தர்.
ஒருமுறை, திருவாதிரை திருநாளன்று மன்னர், பக்தர் களுக்கு பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஒரு பெண் பித்தனும் நின்றான். அவனுக்கு பெண் பித்து காரணமாக நோய் ஏற்பட்டிருந்தது. உடலில் புண்கள் நிறைந்து காணப்பட்டன. அவனுடன் வரிசையில் நின்றவர்கள் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.
அவனுக்கு ஆறுதல் தருவார் யாருமில்லை. மன்னர், அவனை கண்டதும் கையெடுத்து வணங்கினார். யாரொருவர் உடல் முழுவதும் திருநீறு அணிந்து சைவப்பழமாகக் காட்சியளிக் கிறாரோ, அவர் விரோதி ஆயினும் அவர்களுக்கு சேவை செய்வது மன்னரின் பழக்கம். அந்த பித்தனும் மேனியெங்கும் திருநீறு பூசி வந்ததால், மன்னர் அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு நோய் இருந்தாலும், இரக்கத்துடன் அவனைத் தழுவியது, அவனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. எல்லாரும் வெறுத்த நிலை யில், நாட்டின் மன்னன், கடவுள் போல ஆறுதல் அளித்தது இதமாய் இருந்தது. அவனுக்கும் பொருட்களை வாரி வழங்கினார் மன்னர். இவ்வாறு தவறு செய்து துன்பப்படும் உயிர்களிட மும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார் முனையரையர்.
சுந்தரரை வளர்ப்பு மகனாகப் பெற்ற இவர், கொடுத்து வைத்தவராகவும் விளங்கினார். சுந்தரர் சிவ பெருமானின் நண்பராகும் பேறு பெற்றார். அத்தகைய பிள்ளையை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன் முனையரையருக்கு அளித்தார். அதன் காரணமாகவும், சிவத் தொண்டு காரணமாகவும், நரசிங்க முனையரையரும் நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார். அவரது குருபூஜை, புரட்டாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்நாளில், சிவாலயங்களில் உள்ள நாயன்மார் சன்னிதியில் பூஜை செய்ய வேண்டும். நரசிங்க முனையரையருக்கு பட்டு வஸ்திரம் சாத்த வேண்டும். தவறு செய்தவர்களையும் மன்னிக்கும் மனோ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தர்மம் செய்யுங்கள் -


ஏழையாய் இருந் தாலும், தங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை, ஆதிசங்கரரின் வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. அவரது சரிதத்தை படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகிலுள்ள காலடியில் அவதரித் தார் ஆதிசங்கரர். இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை சிவகுரு; பணக்கார குடும்பம், படித்த குடும்பம். சிவகுருவுக்கு எர்ணா குளம் அருகிலுள்ள மேல்பாழூர் மனையைச் சேர்ந்த ஆர்யாம்பாளைத் திருமணம் செய்து வைத்தனர்; இருவருமே சிவ பக்தர்கள்.
இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குச் சென்று, சிவனிடம், குழந்தை வரம் வேண்டி, தீவிர வழிபாடு செய்தனர்.
அவரது பக்தியின் பலத்தை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், “உனக்கு தீர்க்காயுள் உள்ள தீய குணங்களையுடைய, 100 புத்திரர்கள் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளே உள்ள ஒரே ஒரு சிறந்த புத்திரன் வேண்டுமா?’ என்றார்.
“என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்…’ என்ற சிவகுரு, தூக்கத்திலிருந்து விழித்து, மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். “இது, நமக்கு சிவன் வைத்த சோதனை. இதில், நம் தேர்வு ஏதுமில்லை. அவர் ஏதோ முடிவு செய்து தான் இப்படி கேட்கிறார். எனவே, அவர் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யட்டும்…’ என்றார் ஆர்யாம்பாள்.
இந்த முடிவை திருச்சூர் சென்று, வடக்குநாதரிடம் கூறி, பிரார்த்தித்தனர். சுவாமி மீண்டும் கனவில் தோன்றி, “நானே உங்களுக்கு புத்திரனாக பிறக்கிறேன்; ஆனால், ஆயுள் எட்டு தான்…’ என்று சொல்லி விட்டார். இறைவனே தங்கள் வயிற்றில் பிறப்பதாக தெரிவித்ததால், அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆர்யாம்பாளின் வயிற்றில் ஐஸ்வரியமான ஒரு தேஜஸ் புகுந்தது; அவர் கர்ப்பமானார்.
சித்திரை மாத அமாவாசை கழித்து வந்த சுத்த பஞ்சமியை, வைகாச சுத்த பஞ்சமி என்பர். அன்று, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வந்தது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த மதிய வேளையில் அவதரித்தார் சங்கரர்.
குழந்தைக்கு, “சங்கரர்’ என்று பெயர் சூட்டப் பட்டது. இரண்டு வயதிலேயே எழுத்துக்களை வாசிக்கத் துவங்கி விட்டது குழந்தை. மூன்று வயதாகும் போது, தந்தை சிவகுரு காலமானார். ஆர்யாம்பாள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தையை வளர்த்து வந்தார். ஐந்து வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் படித்து தேறினார் சங்கரர். படிக்கும் காலத்தில் பிச்சை எடுத்து, தன் குருவுக்கு கொடுத்து விட்டு, மீதியை உண்பது சங்கரரின் வழக்கம்.
ஒருமுறை, ஒரு ஏழைத் தம்பதியின் வீட்டில் பிச்சை கேட்டார். வீட்டில் முதல் நாள் ஏகாதசி விரதம் முடித்து, மறுநாள் துவாதசி விரதம் முடிப்பதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டும் வைத் திருந்தனர்; அதுவும் உலர்ந்து போயிருந்தது. அதையும், அவ் வீட்டுப் பெண், நிறைந்த மனதுடன் சங்கரருக்கு அளித்தாள். பரம ஏழையாக இருந்தாலும், தர்மம் செய்யும் எண்ணமுள்ள அவளைப் போன்றவர்களிடமே செல்வம் நிறைந்திருக்க வேண்டுமென எண்ணிய சங்கரர், லட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். “கனகம்’ என்றால், “தங் கம்!’ “தாரை’ என்றால், “பொழிதல்!’ லட்சுமி, அவர் முன் தோன்றி, “அந்தப் பெண், முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை; அதனால், அவள் ஏழ்மையையே அனுபவித்தாக வேண்டும்…’ என்றாள். இருப்பினும், லட்சுமியிடம் வாதாடினார் சங்கரர். உடனே, அவ்வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் நிறைந்தன.
துறவறம் மேற்கொள்ள தாயிடம் அனுமதி கேட்டார் சங்கரர். ஆனால், தாயார் சம்மதிக்கவில்லை. ஒரு முறை தன் தாயுடன் நதியில் குளிக்கச் சென்றார். ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. “துறவறம் பூண சம்மதித்தால், முதலை காலை விட்டு விடும்.
இல்லாவிட்டால், நான் இப்போதே முதலைக்கு இரையாகி விடுவேன்…’ என்றார் சங்கரர். குழந்தை உயிரோடு இருந்தால் போதுமென தாயார் சம்மதிக்க, முதலை, காலை விட்டது. அவர் காசிக்கு சென்று தங்கினார்.
தன் ஆயுட்காலம் முடிந்ததை எண்ணிய அவர், கங்கையில் மூழ்கச் சென்றார். வியாசர் அவரைத் தடுத்து, ” நீ செய்ய வேண்டிய புண்ணியச் செயல்கள் எவ்வளவோ உள்ளன; அவற்றை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வாழ்வாய்…’
என்றார். அதன் பின், பல அற்புதங்களைச் செய்தார் சங்கரர். இறந்து போன மகனின் உடலுடன், மூகாம்பிகை கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு, உயிர் கொடுத்தார். சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கவுமாரம், சவுரம் என்று பிரிந்து கிடந்த மதங்களை இணைத்து, “சனாதன தர்மம்’ என்ற பெயரில் ஒரே மதமாக்கினார். 32 வயது வரை அவர் வாழ்ந்தார்.
முற்பிறவியில் செய்த கர்மவினைகளின் பலனாக ஏழ்மையை அனுபவிப்போர், கஷ்டத்திலும் தங்களால் முடிந்த தர்மத்தை பிறருக்கு செய்ய முன்வந்தால், அதற்கு பலன் நிச்சயம் என்பது சங்கரரின் சரிதம் நமக்கு சொல்லும் பாடம்?

நரசிம்மர் ஜெயந்தி

வலது காலை மடித்து அமர்ந்துள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்; சில அம்மன் கோவில்களில், இந்த தரிசனத்தைக் காண முடியும். நரசிம்ம விக்ரகங்கள் பெரும்பாலும் இடது காலை மடித்து, அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில், வலது காலை மடித்து அமர்ந்து அருள்பாலிக்கிறார், நரசிம்மர்.
நரசிம்மர் என்ற சொல்லிலுள்ள, நரன் என்பது மனிதனையும், சிம்மம் என்பது சிங்கத்தையும் குறிக்கும். இவர் மனித உடலும், சிங்க முகமும் கொண்டவர். அசுர குணங்களுடன் நடப்பவர்களை அடக்க தெய்வம் நினைத்து விட்டால், அதன் உக்கிரத்தை தாங்க இயலாது என்பதை நரசிம்ம அவதாரம் எடுத்துரைக்கிறது. அதே நேரம், தெய்வத்தின் மீது பக்தி செலுத்தினால், சாந்தமாக, லட்சுமி நரசிம்மராய் மாறி, வேண்டியதை அள்ளித் தருவார்.
நரசிம்மரின் தரிசனம் வேண்டி, இத்தலத்தில் கடும் தவம் இருந்தார், ஜாபாலி மகரிஷி. இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், பிரதோஷ வேளையில், மகரிஷிக்கு தரிசனம் தந்தார். 
இதன் அடிப்படையில், இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். மூலவரை, பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைப்பர். 'பாடலம்' என்றால், சிவப்பு; 'அத்ரி' என்றால், மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால், இவ்வூருக்கு, பாடலாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது. 
நரசிம்மருக்கு ஆயுதம் அவரது நகங்கள் தான். இதைக் கொண்டே அவர் இரண்யனை வதம் செய்தார். ஆனால், இங்குள்ள நரசிம்மர், பெருமாளின் அம்சமாக சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். அது மட்டுமல்லாமல், இவருக்கு கண்கள் மூன்று; உற்சவர், பிரகலாத வரதன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அருளுகிறார். 
இங்குள்ள நரசிம்மர், குகையில் இருப்பதால், அச்சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர வேண்டும். லட்சுமியின் அம்சமான தாயார் அஹோபிலவல்லியை, செல்வ வளம் வேண்டி வணங்குவர். இங்கு, 12 ஆழ்வார்களும் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.
வைகாசி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர், நரசிம்மர். அன்று, அவரது ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கிறது; மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில், அவரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. செவ்வாய், ராகு தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை விலக, இங்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, ஏழரை மற்றும் அஷ்டமச்சனியால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வணங்கி வரலாம்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு-செல்லும் வழியில், 8 கி.மீ., முன் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
தொலைபேசி: 044-2746 4325.

அம்பாளுக்குஸ்ரீ சக்கரம்

அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா? அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ சக்கரம் அவளுடைய இல்லம். ஸ்ரீ சக்கரம் நான்கு மேல் நோக்கிய கோணங்கள், இவை சிவ சக்கரங்கள் எனப்படும், கீழ் நோக்கிய ஐந்து சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் எனப்படும். இந்த ஒன்பது முக்கோணங்களும் இடைவெட்டி மொத்தம் நாற்பத்தி நான்கு முக்கோணங்களை உண்டாக்கும்.
இது நடுவில் உள்ள  பிந்து சக்கரத்தினையும் சேர்த்த பகுதியினையும் சேர்த்த எண்ணிக்கையாகும். ஒன்பது முக்கோணங்களில் எட்டினை மட்டும் கணக்கெடுத்தால் மிகுதி உள்ள ஒரு முக்கோணம் நிலையானதாக அசைவற்று இருக்கும்.
நிலைப்பண்பு என்பது சிவத்தினுடைய தன்மை, இயக்கம் என்பது சக்தியினுடைய தன்மை. இந்த சக்கரங்கள் சக்தியின் இயக்கத்தால் லலிதையின் இல்லமாக்கப் பட்டிருகின்றது.
ஸ்ரீ சக்கரம் பிரபஞ்ச சக்கரம் எனவும்  கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்திற்கும் குண்டலினி பயணிக்கும் ஒன்பது சக்கரங்களினையும் ஒப்பிட முடியும். (ஆறு சக்கரங்கள் + சஹஸ்ராரம்+குல சஹஸ்ரம்+அகுல சஹஸ்ரம்).
ஸ்ரீ சக்கரம் மனித உடலுடனும் ஒப்பிட முடியும். மேல் சக்கரங்கள் நாபிக்கு மேல் உள்ள பகுதிகளையும், கீழ் சக்கரங்கள் நாபிக்கு கீழ் உள்ள பகுதிகளையும் குறிப்பிடும்.
சக்தி கோணம் தோல், இரத்தம், மூளை, சதை, எலும்புகளையும் சிவ கோணங்கள் ஆன்மா பிராணன், தேஜஸ், விந்தினையும் குறிப்பிடுகிறது. சக்தி கோணம் பருப்பொருட்களையும் சிவ கோணங்கள்  சூஷ்ம [பொருட்களையும் குறிப்பிடுகிறது. இந்த சூஷ்ம ஸ்தூல பொருட்கள் ஒருங்கிணையும் போது உயிர்ப்பு தோன்றுகிறது.
ஐந்து சக்திக்கோணங்களும்   ஆகாயம், வளி, அக்னி, நீர், மண் என்ற பஞ்ச பூதங்களை குறிப்பதாகவும், இவற்றின் வேற்றுமை கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், ஞான இந்திரியங்க்களாகவும், தன்மாத்திரைகளாகவும்உருப்பெறுவதையும் குறிக்கும். சிவ கோணங்கள் நான்கும் அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றையும் குறிக்கும்.
பிந்து என்பது உள்ளே காணப்படும் கீழ் நோக்கிய  உள்ளே காணப்படும் புள்ளியாகும். இந்த பிந்துவே உலக தோற்றத்திற் கெல்லாம் காரணமாக கருதப்படுகிறது. இது   சிறிய விதை ஒன்று பெரிய மரத்தினை உண்டாக்குவதை உதாரணமாக கூற முடியும்.
இந்த பிந்துவைச் சூழ உள்ள பகுதி ஆனந்தத்தினை தருவது, இதனாலேயே சர்வானந்தமயச் சக்கரம் எனப்படுகிறது. இந்த ஆனந்ததிற்கு காரணம் சிவனும் சக்தியும் இந்த சக்கரத்தில் இணைந்து உன்னார்கள் (நாமம் 999). இந்த சக்கரம் பிந்துவாக சஹஸ்ராரத்தில் தியானிக்கப்படுகிறது. இங்கு சிவசக்தி ஐக்கியம் மட்டும் தியானிக்கப்படுவதில்லை, ஒருவருடைய இஷ்ட தேவதை, மற்றும் குருவினையும் சஹஸ்ராரத்தில் தியானிக்க முடியும்.
ஸ்ரீ சக்கரத்தினை வணங்கும் செயன்முறையினை நவாவரண பூஜை என்பார்கள். நவ என்றால் ஒன்பது, ஆவரணம் என்றால் சுற்றுக்கள் எனப்பொருள் படும். இந்த பிந்துவினை அடைய முதல் பல தேவதைகளை துதிக்க வேண்டும்.
முதல் ஆவரணத்தில் 28 தேவதைகள், இரண்டாவது ஆவரணத்தில் 16 தேவதைகள்,
மூன்றாவது ஆவரணத்தில் 08 தேவதைகள்,
நான்காவது ஆவரணத்தில் 14 தேவதைகள்,
ஐந்தாவது ஆவரணத்தில் 10 தேவதைகள்,
ஆறாவது ஆவரணத்தில் 10 தேவதைகள்,
ஏழாவது ஆவரணத்தில் 08 தேவதைகள்,
எட்டாவது ஆவரணத்தில் 15 தேவிகளும் 04 ஆயுதங்களும் ( நாமாக்கள் 08 -11 வரை),
ஒன்பதாவது நடு  முக்கோணத்தில் ஐந்து ஐந்து தேவதைகள் ஒவ்வொரு பக்கமாக  பதினைந்து திதி நித்தியாக்களும் முக்கோணத்தின் சுற்றில் வணங்கப்படும்.
லலிதாம்பிகை பிந்து ஸ்தானத்தில் வணக்கப்படும். இந்த தேவதைகள் தவிர்ந்து குரு  பரம்பரையினரும் இந்த முக்கோணத்தின் மேலே  வணங்கப்படுவர்.
ஸ்ரீ சக்கரமும் மஹா மேருவும் ஒன்றே, மஹா என்றால் பெரிய என்றும்ம் மேரு என்றால் மலை என்றும் பொருள் படும். தேவி மகா மேருவின் உச்சியில் வசிக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாண வடிவமே ஸ்ரீ சக்கரம் எனப்படும். ஸ்ரீ  சக்கரம் என்பது தட்டையான வடிவம், பிந்து புள்ளியாக குறிக்கப்படும், மஹாமேருவில் பிந்து உச்சியில் காணப்படும்.

‘’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார்



சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
குருவுடம் சிஷ்யன் .,
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
பாடம் ஆரம்பித்த குரு,
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
சிஷ்யன் .,
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..
“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்
“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார்,
‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும்,
சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால்

இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, 'பச்... சாமியாவது ஒண்ணாவது...' என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, 'ஜோசியமே பொய்...' என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...' என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.
சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம்.
கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.
எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ. தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின், மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.
இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, 'ராம பக்தா... குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது. என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்...' என்றது.
'ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்...' என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.
பூதமோ, 'அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்...' என்று சொல்லி மறைந்தது.
ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.
பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில் அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ. வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும் புறப்பட்டார். விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார். சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ. உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது. அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை. 
கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து, 'ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்...' என்றார்.
'அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்...' என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து, 'பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்...' என்று ஆசி கூறி, மறைந்தார்.
ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான அந்நூல், 'ராம் சரிதமானஸ்' எனப்பட்டது. இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்!
விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.

நம்பியாண்டார் நம்பி வரலாறு

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.
மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.
அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.
அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

பெற்றோரைப் போல் பிள்ளை! -


எந்த வீட்டில், தம்பதியினர் ஒற்றுமையாக, கருத்தொருமித்து வாழ்கின்றனரோ, அந்த வீட்டு குழந்தைகள் நல்லபடியாக வளர்வர் என்பது பொதுவான கருத்து; இதற்கு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பமே உதாரணம்.


கோல்கட்டாவில் இருந்து, 120 கி.மீ., தூரத்தில் உள்ளது தேரேய்பூர் கிராமம். இவ்வூரில், மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர் பெரிய புள்ளி. இவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். அவர்களில் மூத்தவர் தான், ராமகிருஷ்ணரின் தந்தையான சுதிராம் சட்டர்ஜி. ராமபிரானின் பக்தர்; தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசும் குணமுள்ளவர்.

இக்கிராமத்தில், ராமானந்தர் என்ற ஜமீன்தார் இருந்தார். இவர் பிரிட்டிஷாருக்கு மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து, அவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார். அக்கிராமத்தின் வரி வசூல், இவருக்கு வந்து விடும். இதனால், அதிகம் சம்பாதிப்பதற்காக, மக்களை வாட்டி வதைத்து விடுவார்.

ஒருசமயம், ராமானந்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான் ஏழைக் குடியானவன் ஒருவன். அவன் மீது பொய் வழக்கு போட்டார் ஜமீன்தார். தன் வழக்கிற்கு ஆதரவாக, சுதிராமை சாட்சி சொல்ல அழைத்தார். ஆனால், அந்த ஏழைக்கு எதிராக பொய் சாட்சி சொல்ல மறுத்து விட்டார் சுதிராம்.

தனக்கு ஆதரவாக செயல்பட மறுத்த சுதிராமின், 50 ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தார் ஜமீன்தார். உண்மைக்காக சொத்தை இழந்த சுதிராம், கமார்புகூர் என்ற ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். தன் நண்பரின் உதவியுடன் வாழ்வை துவக்கினார்.
சுதிராமின் மனைவி சந்திராமணியும், கணவரின் குணம் அறிந்து, அவருடன் ஒத்துழைத்து, குடும்பம் உயர உதவினார். இப்படிப்பட்ட அரிய தம்பதிக்கு பிறந்தவர் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!

பிப்., 18, 1836ல் பிறந்தார் ராமகிருஷ்ணர். தந்தையைப் போலவே பெரும் பக்தர்; மன திடம் மிக்கவர். தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளிகோவிலே கதியென கிடந்தவர்; காளிமாதாவிடம் பேசும் வல்லமை உடையவர். சாரதாதேவி அம்மையாரை திருமணம் செய்தார். இருந்தாலும், இருவருமே இல்லறத்தில் நாட்டம் செலுத்தாமல் பக்தியில் மூழ்கினர்.

இல்லறத்தில் இருந்தபடியே பக்தியை நாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தனர் இத்தம்பதியினர்.
‘நீங்கள் உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்கிடையில் உங்கள் மனதை இறைவன்பால் திருப்ப வேண்டும். இல்லையேல் உங்கள் வாழ்வு அனர்த்தமாய் போய்விடும்…’ என்பார் ராமகிருஷ்ணர்.

வீட்டில் கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ வேண்டும். நல்ல விஷயங்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால், பிள்ளைகளும் ஒழுக்கமானவர்களாக வளர்வர் என்பதற்கு ராமகிருஷ்ணரின் வாழ்க்கையே உதாரணம்.