"தந்தையாகவும் மகனாகவும் நடித்த மகா பெரியவா"(ஸ்வபாவமான அமரிக்கையும் அமைதியும் கூடுதலாகஓசை செய்யாமல் கருணைக் கவிதை நடத்திய பாங்கும்)
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"வேதபொறே ! வேதபொறே !" -வேதபுரி என்ற தம்புத்திரனின் பெயரை அப்படித்தான் ஓர் அவசரத்துடன்சொல்லிக் கூப்பிடுவார் தகப்பனார் ஸீதாராமய்யர்.நாகரிகர்களின் ஒப்பனைகள்,வாயசைப்பு,நகாசு,ஒலி நயம் அறியாத எளியவர்.நல்ல மனுஷ்யர்.தாயை இழந்து சிறு வயதிலேயே ஸ்ரீசரணரிடம் வந்தவேதபுரி,நீண்ட நெடுங்காலம் அவருக்கு அத்யந்த
கைங்கர்யம் செய்து இன்று அடியார் வட்டம் வேதபுரிசாஸ்திரிகளாக அறிந்திருப்பவர்கள்தாம். ஸ்ரீசரணரேதமது அந்திம நாள்களில் அவரை "ப்ரஹ்மஸ்ரீ" என்றுகுறுநகை தவழ அழைப்பது வழக்கம்.பெரியவாள் பணிக்கு அவர் வந்து சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு பகற்பொழுதில் நெடுநேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்புவதற்காகத்தான்அந்த 'வேதபொறே!' மீண்டும் மீண்டும் ஒலித்தது.
"வேதபொறே ! பெரியவா உத்தரவாறதுடா !தூங்கிண்டே இருக்கியே!"
கைங்கர்யம் செய்து இன்று அடியார் வட்டம் வேதபுரிசாஸ்திரிகளாக அறிந்திருப்பவர்கள்தாம். ஸ்ரீசரணரேதமது அந்திம நாள்களில் அவரை "ப்ரஹ்மஸ்ரீ" என்றுகுறுநகை தவழ அழைப்பது வழக்கம்.பெரியவாள் பணிக்கு அவர் வந்து சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு பகற்பொழுதில் நெடுநேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்புவதற்காகத்தான்அந்த 'வேதபொறே!' மீண்டும் மீண்டும் ஒலித்தது.
வேதபுரி புரண்டார்.ஓயாப்பணியின் களைப்புபட்டவருக்குத்தானே தெரியும் !
மீண்டும் தந்தையார் பெரியவா உத்திரவாறதைச்சொல்லி உசுப்ப, "என்னப்பா நீ !" என்று அலுத்துக்கொண்டு எழுந்தார் வேதபுரி.
அப்பாவா? "எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழியாட்செய்த" சாசுவத அப்பனாகப் பெரியவாளல்லவா எதிர் நிற்கிறார்?ஸீதாராமய்யரை அப்படியே 'மிமிக்' செய்த மாயக்குறும்பராகச் சீடர் முன் சிரித்து நின்றார் குரு.
ஜகத்குருவின் ஸௌலப்யம் அப்படி !."வேதபொறே ! வேதபொறே !" - பல்லாண்டுகளுக்குப்பின் ஒரு நள்ளிரவில் குரல் எழுகிறது.காலம் ஓடிவிட்டதில் குரலில் நடுக்கம் கண்டுவிட்டது. அதைவிடக் கோளாறாக ஸீதாராமய்யரின்இரு கண்களும் பார்வை இழந்து விட்டன.இரவு நடுவிலே அவருக்கு ஒரு முறை நீர் இறக்கிக்கொள்ள வேண்டும்.பிள்ளையை எழுப்புவார்.பிள்ளைஅவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருகாக உடன்
சென்று கொல்லைப்புறம் அழைத்துப் போய்த்திரும்ப கொண்டு வந்து விடுவார்."வேதபொறே ! வேதபொறே !"வேதபுரி எழுந்து வரும் அரவம் மெலிதாகக் கேட்கிறது. பெரியவாள் வெகு அருகிலேயே நித்திரை
கொண்டிருப்பதால் போலும். முடிந்தமட்டில் ஓசைப்படாமல் வருகிறார்.
சென்று கொல்லைப்புறம் அழைத்துப் போய்த்திரும்ப கொண்டு வந்து விடுவார்."வேதபொறே ! வேதபொறே !"வேதபுரி எழுந்து வரும் அரவம் மெலிதாகக் கேட்கிறது. பெரியவாள் வெகு அருகிலேயே நித்திரை
கொண்டிருப்பதால் போலும். முடிந்தமட்டில் ஓசைப்படாமல் வருகிறார்.
ஸீதாராமய்யரைத் தொடுவது போல் பக்கத்தில் கைத்தடி நாட்டப்படுகிறது.
அதைப் பிடித்தபடி அவர் எழுந்திருக்க,அவரைப்பிடிக்காத குறையாக நெருங்கியிருந்து புத்திரர்கொல்லைப்புறம் அழைத்துப் போய் அமர்த்துகிறார்.
இயற்கையழைப்புக்குத் தகப்பனார் பதில் கொடுத்தபின்சுத்தி செய்து கொள்ள நீர் மொண்டு வந்து தருகிறார்.
புத்திரரின் எல்லாக் காரியத்திலும் இன்று ஓர்அலாதி,அமரிக்கை.அமைதி.
தந்தையாரைத் திரும்பவும் சப்தம் செய்யாது அழைத்துவந்து படுக்க வைத்து விட்டு மகனார் உறங்கப் போகிறார்.மறுநாள் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டிருக்கும்போது பிள்ளை,"ஏம்பா நேத்து ராத்திரி நீ ஏந்திருக்கலியா
என்ன?" என்று கேட்டார்.
என்ன?" என்று கேட்டார்.
"ஏந்திருந்தேனே! ..நீதானேடா கொண்டு விட்டு
அழைச்சிண்டு வந்தே?"
அழைச்சிண்டு வந்தே?"
"என்னப்பா சொல்றே? நான் எங்கே கொண்டு விட்டேன்?"பின் யார் அவரைக் கொண்டு விட்டது?
அங்கு படுத்திருந்த ஒவ்வொருவரையும் விசாரித்துப்பார்த்ததில் எவருமே இல்லை என்று தெரிந்தது.
"ஆஹா,அப்படியா?"...பெரியவாளிடம் கேட்க,அவரது வாய் மௌனம் பூண்டது.ஆனால் கண்களும்இதழ்க் கடைகளும் பேசின.கருணைக் காப்பியமே பாடின!வேதபுரியல்ல, வேதம் விளங்கவே வந்த அவதாரபுருஷர்தாம் நள்ளிரவில் தொண்டரின் தந்தைக்குத்தொண்டு செய்திருக்கிறார்! அதுவும் எப்படிப்பட்டஅசங்கியம் பர்க்காத குற்றவேல் தொண்டு.!தமக்காகத் தொண்டு செய்த அந்தச் சீடரை,மடத் தொண்டர்கள் அனைவரையுமேதான்,தூக்கத்தில்
சிரமப்படுத்தலாகாது என்ற அருட்பாங்கில் தமதுஸ்வபாவமான அமரிக்கையும் அமைதியும் கூடுதலாகஓசை செய்யாமல் கருணைக் கவிதை நடத்தியிருக்கிறார்
அதிலேயே தொண்டரின் தந்தைக்கு தம்மைக் காட்டிக்கொள்ளாத மர்ம நாடகமும் நடித்திருக்கிறார்.அன்றொருநாள் தந்தையாக நடித்தவர்.இன்று மகனாகநடித்திருக்கிறார்.சிரமப்படுத்தலாகாது என்ற அருட்பாங்கில் தமதுஸ்வபாவமான அமரிக்கையும் அமைதியும் கூடுதலாகஓசை செய்யாமல் கருணைக் கவிதை நடத்தியிருக்கிறார்
No comments:
Post a Comment