ஒரு சமயத்தில் அய்யவாளின்
தாயாருக்கு சிராத்தம் வந்தது. ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் ஒரு
சிவனடியார் தான் பசியுடன் வந்துள்ளதாக கூறவே, சிராதத்துக்கு சமைத்து
வைத்திருந்ததை அவருக்கு கொடுத்துவிட்டு, மறுபடியும் சுத்தம் செய்து சமைக்க
தொடங்கினார் அய்யவாள். இதை செவியுற்ற அவ்வூர் அந்தணர்கள், சிராத்த
சடங்குகளில் பெரும்பிழை நிகழ்ந்துள்ளது என அய்யவாளை ஜாதியிலிருந்து விலக்கி
வைக்கிறோம் என்று கூறிச்சென்றனர். இதற்க்கு வேறு பரிஹாரம் இல்லையா என்று
அய்யவாள் கேட்க, கங்கைக்கு சென்று குளித்து விட்டு வந்தால் தான்,
மேற்கொண்டு காரியம் செய்ய முடியும் என்று நடக்கமுடியாத நிபந்தனையை விதித்து
விட்டு சென்றனர். காசிக்கு செல்ல பல மாதங்கள் ஆகிவிடும், இக்க்ஷனமே எப்படி
கங்கையில் ஸ்நானம் செய்வது என்று மனமுடைந்து போன அய்யவாள் தன் வீட்டின்
கிணற்றருகில் அழுதபடியே சிவனாரை நினைத்து பாடலை பாடினார்.
அப்போது
ஒரு அசரீரியானது,”உன் வீட்டு கிணற்றில் கங்கை வரும்” என கூறி, கிணற்று
நீர் பிரவாகமாக கங்கை வெள்ளத்தால் ஊரே மூழ்கும் அளவிற்கு சூழ்ந்தது.
அவ்வூர் மக்கள் திரண்டு வந்து அய்யவாளிடம் வெள்ளத்தை கட்டுபடுத்த
வேண்டினர். அந்தணர்களால் அபசாரம் ஏற்பட்டு விட்டதாக மண்டியிட்டு
முறையிட்டனர். அதனால் அய்யவாள் கங்கா அஷ்டகத்தை அப்பொழுதே இயற்றி பாடினார்.
வெள்ளமும் கட்டுபாட்டுக்குள் வந்தது. அய்யவாள் கங்கை நீரில் ஸ்நானம்
செய்து சிராதத்தை நடத்தினார். அந்த சிராததில் பிரம்மா, விஷ்ணு, சிவன்
ஆகியோர் அந்தணர் ரூபத்தில் கலந்து கொண்டதாக கூறுவர்.
அதிலிருந்து
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று விடியற்காலை கங்கா அவதார
தாரணம் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய காலியாக இருக்கும் கிணற்றிலிருந்து குபு
குபு வென கங்கையானது நிரம்ப ஆரம்பிக்கிறது. கங்கை வெள்ளமாக பொங்கி விடாமல்
கிணற்றின் நடுநிலையில் உள்ள வேண்டி கங்கா அஷ்டகம் பாடுவர். காவிரியில்
குளித்துவிட்டு வந்தால் கிணற்று நீரை பல ஆயிரம் பேர் குளிக்கும் அளவிற்கு
அன்று மாலை வரையில் கிணற்றில் நீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த அதிசய
நிகழ்வை காண்பதற்கு எல்லா இடத்திலிருந்தும் திரளான பல ஆயிரம் பக்தர்கள்
திருவிசநல்லூர் வந்த வண்ணம் இருப்பர்.
No comments:
Post a Comment