திருடர் தலைவன் ஒரு நாள் சர்க்கஸ் பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகச் சிறிய வளையத்திற்குள் கலைஞன் ஒருவன், மொத்த அரங்கமும் கைதட்ட, சுலபமாக நுழைந்து வந்தான்.
தலைவனுக்கு கலைஞனைத் தனது திருட்டு தொழிலில் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று தோன்றிற்று.
எக்ஸாஸ்டர்
ஃபேன் துளையிலோ, புகைபோக்கி வழியிலோ, கண்ணமிட்ட ஓட்டையிலோ அவனை உட்புகச்
சொல்லி, பூட்டிக் கிடக்கும் வீடுகளில் சுலபமாக கொள்ளை அடிக்கலாம் என்பது
அவனது திட்டம்!
அதிக பணத்திற்கு ஆசைப்பட்ட சர்க்கஸ் கலைஞனும் திருடனின் திட்டத்திற்கு உடன்பட்டான்.
திருடும் நாளும் வந்த்து. கலைஞனுக்கு திருடவேண்டிய விஷயங்களைத் தெரிவித்தபின் செல்லவேண்டிய வழியைக் காட்டினான் திருடன்.
ஓட்டையில் உட்புகாது சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்து தயங்கியபடியே நின்றான்!
என்ன முழிக்கிறாய் விரைந்து சென்று களவாடி வா என விரட்டினான் திருடன்.
மன்னிக்க
வேண்டும் முதலாளி, இந்த ஓட்டை அப்படி ஒன்றும் மிகச் சிறியது அல்ல, நான்
நுழைந்துவிடுவேன் எளிதாக! ஆனால் யாராவது நூறு பேர் கைதட்ட வேண்டும்.
அப்போதுதான் என்னால் இந்த ஓட்டைக்குள் நுழைய முடியும்! அதற்கு ஏற்பாடு
செய்துவிட்டு எனக்கு சொல்லி அனுப்புங்கள, நான் உள் நுழைந்து வேலையைச்
சுலுவாக முடித்து வருகிறேன், என்று சொல்லி நடையைக் கட்டினான் கலைஞன்.
அப்படிச் செய்தால் திருடனின் கதி என்னாகும் என்பது நாமெல்லாம் அறிந்ததுதானே!
கைதட்டலுக்கு அவ்வளவு சக்தி! கைதட்டல்களால் எந்த வேலையும் சுலுவாகும் என்பது இந்தக் கதைமூலம் நாம் கற்கும் பாடம்!
அரைமணி நேரக் கைதட்டல் 21 நாள் அதிகமாக நம்மை வாழவைக்கிறதாம்! கைதட்டுவோமா?!
No comments:
Post a Comment