Friday, October 2, 2015

மயானத்தில் நடந்த இரு சம்பவங்கள்.

மயானத்தில் நடந்த இரு சம்பவங்கள்.
அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
புத்தகம்-தாயுமான மகான்-3
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சம்பவம்-1
நாங்கள் ஸ்ரீ மகா பெரியவாளுடம் யாத்திரை சென்று கொண்டு இருந்தபோது இரவு நேரம் ஆகிவிட்டது. ஸ்ரீ மஹா பெரியவாள் இங்கே தங்கலாம் என்று சொல்ல,
நாங்கள் கீழே படுத்துக் கொண்டோம்.ஸ்ரீ பெரியவா பல்லக்கில் இருந்தார். 
திடீரென்று என்னிடம் 'ஏண்டா பாலு கீழே ஒரே சாம்பலா இருக்கா பார் என்றார்.நான் பார்த்து விட்டு ஆமாம் என்றேன். நாங்கள் தங்கி இருந்த இடம் ஒரு மயானம். பரவாயில்லை இது பிராமணர்கள் மயானம் இல்லை. அதனால் நமக்கு தீட்டு கிடையாது. ஸ்ரீ பரமேஸ்வரன் மயானத்தில் தானே இருக்கார் என்றார். பிராமணர்கள்,மற்றவர்கள் மயானத்தில் என்ன வித்தியாசம் தீட்டு,தீட்டில்லை என்பதற்கு என்று கேட்டேன்.
ஸ்ரீ மகா பெரியவா, "பிராமணர்கள் மயானத்தில் நிறைய வேதம் சொல்கிறோம் அதான் வித்தியாசம்" என்றார்.
சம்பவம்-2
திருப்பக்குழி என்ற இடம் என்று நினைக்கிறேன். நாங்கள் யாத்திரை சென்று விட்டு இரவில் ஒரு இடத்தில் தங்கினோம். ஸ்ரீ ஸ்ரீகண்டன் தூக்கப் பிரியர். அவர் இரவில் ஸ்ரீமகாபெரியவா உறங்கும் மேனா பக்கத்தில் உறங்கமாட்டார். அதனால் சிறிது தொலைவில் படுத்துக் கொள்வார். நடந்து வந்த களைப்பில் உடனே உறங்கிவிட்டார்.தலைக்கு பக்கத்தில் கிடைத்த எதையோ ஒன்றை தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு உறங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் நாங்கள் உறங்கிய இடம் ஒரு மயானம். ஸ்ரீ ஸ்ரீகண்டன் பயந்து ஸ்ரீமகாபெரியவாளிடம் "என்ன பெரியவா இந்த இடத்தில் உறங்கிவிட்டோமே? ரொம்ப பயமாக இருக்கு" என்றார்.
ஸ்ரீமகாபெரியவா சிரித்துக்கொண்டே "நீயோ பக்கத்தில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டை தலைக்கு வைத்துக் கொண்டு நன்றாக தூங்கிவிட்டாய். சந்தோஷம்தானே.
நல்ல ஓய்வு கிடைத்தது. அப்புறம் எதற்கு பயம்" என்றார்.

No comments:

Post a Comment