நகைச் சுவை நாடுவோர் சங்கத்தின் தலைவர் நாணுத் தாத்தா, சங்கத்தின் வருடாந்திர விழாவினைத் துவக்கி வைத்திடக் குத்து விளக்கேற்ற, சங்கத்தின் மூத்த பெண் அங்கத்தினரான கோமளா பாட்டியை மேடைக் கழைத்தார்.
கோமளாப் பாட்டி இருவர் கை பிடித்து தட்டுத் தடுமாறி மேடைக் கேறினாலும் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாய் நெருப்புக் குச்சியைப் பத்த வைத்து விளக்கேற்றினார், பின்னர் ஒரு வெற்றிப் புன்னகையுடன் அரங்கில் இருந்தவர்களைப் பார்த்தார். அவர்கள் எழுப்பிய கரவொலி பாட்டிக்கு ஊக்கம் தந்திட மெல்ல எவர் உதவியும் இன்றித் தன் இருக்கைக்கு சென்றடைந்தார் அவர்.
சங்கத் தலைவர் நாணுத் தாத்தா தன் தலைமை உரையைத் துவக்கினார்.
“அன்பர்களே…அன்பிகளே….” (அது என்ன அன்பிகளே? அப்பிடி ஒரு வார்த்தெ தமிழ்லெ இருக்கான்னா? ன்னு கேக்காதீங்கோ. நண்பர்களே… நண்பிகளேன்னு சொல்றதுக்கு பதிலா அன்பர்களே…அன்பிகளே… சொல்றது நாணுத் தாத்தாவோட வழங்கு தமிழ்.)
தொடர்ந்தார் நாணுத் தாத்தா.
“நகைச் சுவைங்கறது மனுஷா வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமான ஒண்ணு. நம்ம தினசரி வாழ்க்கைலெ பல சங்கடங்கள் வரும். அப்போ கவலை நம்ம மனசெ அழுத்தும். நமக்கு நகைச் சுவை உணர்வு இருந்தா நம்மெ கவலைகள் ஒண்ணும் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு ஒங்க நண்பர் ஒருத்தர் ஒடம்பு சரியில்லாமெ படுத்துண்டு இருக்கார். அவரெ நீங்க பாக்கப் போறேள். ‘என்னடா ஒடம்புக்குன்னு?’ கேக்கறேள். அவர் சொல்றார், ‘தலெ வலிடா’ ன்னு.
ஒடனே நீங்க ஸ்கேன் எடுத்துப் பாத்தையாடா? ப்ரைன் ட்யூமரா இருக்கப் போறதுடா. டாக்டர் என்ன சொன்னார்? னு கேக்கறேள்னு வெச்சுக்கோங்கோ. அவ்வளவுதான் அந்த மனுசனுக்கு மலச்சிக்கல்னாலெ தலெ வலி வந்திருந்தாக் கூட தனக்கு ஏதோ பெரிசா வந்துடுத்துன்னு கவலெலெ ஆழ்ந்துடுவான்.
அதே நீங்க, ‘தலெ வலி ஏன் வரது தெரியுமோ? ந்னு கேளுங்கோ. அவர் திரும்ப ஒங்களெக் கேப்பார், ‘ஏன் வரது?’ ன்னு. நீங்க சிரிச்சிண்டே ‘தலென்னு ஒண்ணு இருக்கறதாலெ தலெ வலி வரது’ ன்னு சொல்லுங்கோ. அவரும் சிரிச்சுடுவார் தலெ வலியெ மறந்து. அதுவும் வந்த சுவடு தெரியாம பறந்தே போயிடும்.
இப்பிடி நாம நகைச் சுவை உணர்வோட வாழ்ந்தோம்னா நமக்கு ஒரு குறையும் வராது. நம்மெச் சுத்தி இருக்கறவாளும் சந்தோஷமா இருப்பா.
இப்போ நகைச் சுவை உணர்வும் தங்கள் சொந்த அனுபவமும் பத்திப் பேச நம்ம அங்கத்தினர்களை மேடைக்கு அழைக்கிறேன். யாரெல்லாம் பேச விரும்புகிறீர்களோ அவா கையைத் தூக்கலாம்” என்று முடித்தார் நாணுத் தாத்தா தன் பேச்சை.
முதலில் கை தூக்கியது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த நாணுத் தாத்தாவின் மனைவி கோமா என்ற கோமதிப் பாட்டி. கையைத் தூக்கியது மட்டுமல்லாமல் சடசடவென மேடைக்கு ஏறி மைக்கையும் கையில் எடுத்துக் கொண்டு ஆரம்பித்தார் தன் பேச்சை.
“எல்லாருக்கும் நமஸ்காரம். இன்னிக்கி நமக்கு விசேஷமான நாளு. நம்ம சங்கத்தோட ஆண்டு நிறைவு விழா. ஆனா ஒரு வேடிக்கை பாருங்கோ. நம்ம சங்கத்தோட பேரு நகை சுவை நாடுவோர் சங்கம்னு. ஆனா இதெ நடத்துற புருஷாள் எல்லாம் நகைச் சுவையெப் பத்தி வாய் கிழியப் பேசுவாளே தவிற அவாளுக்கு நகைச் சுவையே கெடையாதூன்னு சொல்லுவேன் நான்.
எப்பிடின்னு கேக்கறேளா? சொல்றேன் கேளுங்கோ. ‘ஏன்னா பக்கத்தாத்து பங்கஜம் பத்துப் பவுனுலெ ஒரு சங்கிலி வாங்கிண்டு இருக்கான்னா’ ன்னு சொன்னேன் போனவாரம் எங்காத்து மாமா கிட்டெ. அவர் கேக்கறார், ‘ஒனக்கெதுக்குடீ நகையெல்லாம்? ஒன் மொகத்துலெ இருக்கற புன்னகெயெ விடவாடீ கடேலெ விக்கிற நகெ? இப்பொ பவுனு 23 ஆயிரத்துக்கு மேலெ சொல்றான். அப்புறம் சேதாரம் செய்கூலின்னு 26 ஆயிரத்துக்குக் கொண்டு வந்துடுவாம்பார். இப்பொதான்னு இல்லெ அவர் இப்பிடி. கல்யாணம் ஆன புதுசுலெ பவுனு நூறு ரூவாதான் இருந்துது. அப்பொவும் இப்பிடி தான். நானா ஆத்து செலெவுக்குக் கொடுக்கற காசுலெ சேத்து வெச்சு ஒரு முப்பது பவுனு வாங்கினேனோ மூணு பொண்ணுங்களெயும் தள்ளி உட முடிஞ்சுதோ. இப்பிடி நகை மேலெ துளிக்கூட சுவை இல்லாதவா நகைச் சுவை பத்திப் பேசி என்ன பெரிசாக் கிழிச்சூடப் போறா? வேடிக்கையா இல்லெ இது?” என்று ஒரு கேள்வியை எழுப்பினாள் கோமாப் பாட்டி.
அங்கிருந்த பெண்கள் கை தட்டியதில் மேடையே அதிர்ந்தது. கூடவே கூட்டமும் கலைந்தது. நாணுத் தாத்தா, “கோமா…………………..” என்று கத்தியபடி கோமாவில் சாய்ந்
No comments:
Post a Comment