Monday, July 27, 2015

இது தான் என் நண்பன்.

     

ஒரு நண்பன்  யார்?   உன் பர்சிலிருக்கும் பணத்தை செலவு செய்வதற்கு  உதவுபவனா?  
உன்னால் என்ன  ஆதாயம் என்று உன் நிழலாக சுற்றுபவனா? 
உனக்கு ஏதோ கஷ்டம் என்று தெரிந்தால்  காத்திருக்கும்போது   நிற்காமல்  போகும்  பஸ் போல்  மறைபவனா?  
அப்படியெல்லாம்  இல்லவே  இல்லை.  உண்மையான  நண்பனை  திருவள்ளுவர்  பார்த்திருக்கிறார்.  அது தான்  பெல்ட்  போட்டுக்காம  வேஷ்டி  நழுவும்போது  கை  தானாகவே  அதை பிடித்து மீண்டும் வயிற்றின் மேல் இருக்குமே  அது போல் சமய சஞ்சீவியா  உதவுகிறவன்.  

இப்போது என் நண்பன் பத்தி சொல்றேன்.  என் நண்பன்  யாரென்று சொன்னால்  தான்  நீங்கள்  என்னையே  யாரென்று  அறிவீர்களாமே .  அப்படித்தானே இங்க்ளிஷ்லே சொல்வார்களாம். எங்கள்  காலத்தில் தான்  இங்க்லீஷ் இல்லையே.

'' இதோ பார்  நண்பா  மனம் விட்டு  சொல்கிறேன்.    உன் தங்கை  தான்  என் உயிர். அவளைத்தான்  நான்  கல்யாணம் பண்ணிக்கணும்.  நீ  எப்படியாவது உதவ வேண்டும்.''  

 ஹ ஹ ஹா.  நல்ல  வேடிக்கை  நண்பா.   என் தங்கை  ஒரு  அழகிய ராஜகுமாரி இன்று அவளுக்கு ஸ்வயம்வரம்.  அவள்  விரும்பும்  ராஜகுமாரனை மணப்பதற்கு ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.  நீயோ  பார்ப்பதற்கு ஒரு சந்நியாசி மாதிரி இருக்கிறாய்.உன்னை அவள் விரும்புவாளோ என்னவோ?  என்ன பண்ணுவது யோசிக்கிறேன்''  என்றான் நண்பன்.

உடனேயே  நான்  அவளை எங்கே சந்திப்பது எப்படி கடத்திக்கொண்டு போவது என்றெல்லாம் வழி சொன்னான்.  எங்கேயாவது நண்பனுக்கு உதவுகிற  இப்படிப்பட்ட  அண்ணனை பார்த்ததுண்டா. அவன் தங்கை என் மனைவியானாள் .. 

ஒரு மகா வீரனை நான் ஜெயிக்கிறது கஷ்டம்.  இருவரில் ஒருவர் தான் உயிரோடு  இருக்க முடியும். நானா  அவனா?  என்னை அவன் கொல்வது நிச்சயம் என்றாலும்  நான்  பயப்படவில்லை. அவனைக் கொல்வேன்  என்று  நம்பிக்கை  தைரியம் இருந்தது.   என் நண்பன்  இதை கவனித்து, சமயோசிதமாக  நிலைமையை சமாளிச்சு என்னை காப்பாத்தினானே .எப்படி?.  எங்கம்மாவை  பார்த்தான். ஏதோ பேசினான்.  அவள்  ஓடினாள்  என் எதிரியிடம்.  என் நண்பன்  சொன்ன மாதிரியே  நடந்தது.  நான் என் எதிரியைக் கொன்றேன். என் தலை தப்ப வைத்தான். எப்படி என் நண்பன்?

ஒரு நாளா  ரெண்டு நாளா.  பன்னிரண்டு வருஷம்  காட்டிலே நாங்கள்  அலைந்தோம் .  எங்களுக்கு  தான் அது  விதி. அவனுக்கென்ன?.  கூடவே அடிக்கடி வருவான்.   எந்த நேரத்திலே எந்த உதவி வேணும் என்று அவனுக்கு நன்றாகவே  தெரியுமே.  ஒரு கவலை இல்லாம என்னையும், எங்களையும்  காப்பாற்றின  தூய நண்பன் அவன்.

எந்த  சண்டை வரணும்னு நான் வேண்டினேனோ , எதிர்பார்த்தேனோ, அந்த சண்டை என் எதிரிகளோடு  வந்துது. ஆனா  என் கையிலேருந்து வில் கீழே  விழுந்துட்டுது.  எனக்கு  ''வில்' பவர்''  போய்ட்டுது.  என்னை  உலுக்கி  எது சரி என்று எடுத்து சொல்லி,  ஊக்குவித்து, அவனே  எனக்கு  வண்டி ஒட்டி என்னை  காப்பாத்தினவன் என் நண்பன்.

என்ன கவலை வந்தாலும்  இடிஞ்சு உக்கார்ந்தாலும் முதுகிலே  ஒரு தட்டு தட்டி   என்னை உற்சாகப்படுத்த அவனைப்போல ஒருத்தரை  ஏன்  யாரையுமே  பார்க்க முடியாது.--  அவன் நண்பன். 

எப்படி  உழைக்கணும், பிழைக்கணும்  சிந்திக்கணும், சாப்பிடணும். நினைக்கணும்   எல்லாமே ரொம்ப ரொம்ப   க்ளீனா சொல்லித்தருவான்.  கூப்பிட்டா போதும் எங்கே இருந்தாலும் ஒரே ஒட்டமா கிட்டே  வந்துடுவான். 

இன்னொரு விஷயம்  தெரியுமா.  ஒரு  தடவை வானம்  பொத்தலா போய் கொட்டிடுத்து மழை.  சரி  ஊரே  இனிமே  முழுகிடும் என்று எல்லோரும்  அலற  என் கூட வாங்கன்னு  எல்லோரையும்,  ஆடு மாடோட தான்,  அழைத்துக் கொண்டு  ஒரு பெரிய  குடை பிடிச்சான்.  ஊரே  அதன் கீழே.  மழை என்ன செய்யும். அவன் என் நண்பன்.
 
பசின்னு வார்த்தை  காதிலே  விழுந்தாலே போதும்.  எப்படியோ எங்களுக்கு சாப்பாடு  கிடைக்கும்படி  பண்ணிடுவான். அவன் என் நண்பன்.
என்ன கேட்டாலும் சிரித்துக் கொண்டே  தருவான்.  என்ன வேணாலும் சொல்லேன். ஹுஹும். அவனுக்கு  கோபமே வராது. சிரித்தே மயக்குவான்.  இசை ஞானம் அபாரம் அவனுக்கு.  ஒரு ராகம் வாசித்தால்  அவ்வளவு தான்   ''கேட்டவரெல்லாம்  ஆடுவார். பாட்டுக்கு தாளம்  போடுவார்.''  அவன் என் நண்பன்.

நான் என்ன சொல்ல  நினைக்கிறேன்  என்று என் மனதில் தோன்று முன்னாலேயே அவனுக்கு அது தெரிந்து விடும். அவ்வளவு கெட்டிக்காரன்.   அதாலே  சாதுன்னு நினைக்கவேண்டாம்.  எங்கே  எப்படி  தண்டனை கொடுக்கணுமோ  அதை  சூட்டோடு சூடா  உடனே  கொடுப்பான். ஈவு இரக்கம் பார்க்க மாட்டான் அப்போது. 

அவன்  வார்த்தைகள்  அப்பப்பா.  எவ்வளவு  அறிவும் ஞானமும்  நிரம்பியவை.  சொல்லத் தெரியவில்லை.  ஒரு  உதாரணம் வேணா  சொல்றேன்.   ஒரு ஆறு. தண்ணி இல்லே.  பாசி, படர்ந்திருக்கு.  வெள்ளம் வந்தா  அது,  அந்த  பாசி, மண்ணு எல்லாத்தையும்  அப்படியே   தூக்கி எறிஞ்சிடுமே  அது மாதிரி  நமது மனசுலே  என்ன   தீய எண்ணம்  இருந்தாலும் அவன் பேரைச் சொல்லி,  அவன் வார்த்தையை படித்தாலோ, கேட்டாலோ  கூட  நாம் எல்லாரும் உள்ளேயும் வெளியேயும் பரி சுத்தம்.  அவன் என் நண்பன். 

வேடிக்கையானவன்  என் நண்பன்.  இவ்வளவு அறிவாளி  தன்னை அப்படிக் காண்பித்துக் கொள்ளவே  மாட்டான்.  பசு  கன்னு, படிக்காத  பசங்க, பெண்கள்  இவங்களோடு சரி சமானமாக  பழகி, பேசி, விளையாடுவான்.  அவங்கள்ளே  ஒருத்தன்  அவன். என் நண்பன். மாயக்காரன்.  ஏமாத்த நினைச்சவங்க  அவன்கிட்டே  ஏமாந்துடுவாங்க.

 அவன் சொல்லி  கேக்கலேன்னா  நஷ்டம் நமக்கு தான். அவனுக்கென்ன?.   நாம்  அவனை அப்படியே நம்பிட்டா  அடடா அவனை மாதிரி  ஒரு அம்மா கூட  குழந்தையை காப்பாத்த முடியாது.  

என்னுடைய அனுபவம் சொல்றேன்.  எந்த  ஆபத்தும் அவன் என்கிட்டே  இருந்தபோது என் கிட்டேயே  வந்தது  இல்லை. எந்த  சோதனை வந்தாலும் அவன் அதுக்கு தக்க  பரிகாரம் வைத்திருப்பான்.  சுருக்கமா சொல்லட்டா.  விளக்குலே  நிறைய  பூச்சி விழுமே  அதுமாதிரி  எல்லா கஷ்டமும் அவன் கிட்டே இருக்கும்போது  காணாம போய்விடும்.

என் நண்பனுக்கு  பொய் பேசினா  பிடிக்காது. ஏமாத்து, நயவஞ்சகம்  இதெல்லாம்  வச்சிக்கிட்டா நசுக்கிடுவான். ஆனா ஒண்ணு . அவன்  நிறைய  பொய் சொல்லுவான்.  அதாலே  ஒரு தீங்கும் வராது. நல்லதுக்கு சொல்ற பொய்.  என் நண்பன் குழந்தை மாதிரி.  அன்புக்கு கட்டுபடுவான். அவனுக்கு கோபம் வந்தால்  நெருப்பு தான்.  அவனுக்கு தெரியாத  விஷயமில்லை.  

வேதம்  சொல்ற  அறிந்த  முனிவர்கள், ரிஷிகள்   எல்லாம் அவனுக்கு  நமஸ்காரம் பண்ணுவாங்க. அவனை மதித்து கொண்டாடுவாங்க.  அவன் எங்கே படிச்சான் எப்போ படிச்சான். எதுக்கு அவனுக்கு இதெல்லாம்?. அவனே  வேதம் , உபநிஷத், எல்லாமே என்று எனக்கே  தெரியுமே.

இது தான் என்கிட்டே  ஒரு  கஷ்டம். இத்தனை நேரம் சொன்னேனே  அவன் பேரை சொன்னேனா?.  அவன்  தான்  என் நண்பன் கிருஷ்ணன். என் உயிர்.  அவன் இல்லேன்னா  நான்  இல்லே. எங்க ரெண்டுபேரையும் பிரிக்கவே முடியாது. அவன் சொன்னது எல்லாம் எழுதி வச்சிருக்குது. அது பேர்  கீதை.  படியுங்க. அவனைப் புரிஞ்சுக்குங்க. நீங்க  மாறி விடுவீங்க.---  இப்படிக்கு உங்கள் அர்ஜுனன்.

மஹாகவி பாரதியாரின்  கண்ணன் என் தோழன்  --  அர்ஜுனன் சொல்வது போல்  மேலே  கூறப்பட்டுள்ளது. பாரதியாரின் கவிதையை கீழே காணலாம்.




கண்ணன் என் தோழன்

(புன்னாகவராளி -- திஸ்ரஜாதி ஏகதாளம் -- வத்ஸல ரசம்)
​ ​


பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவதற்கே -- இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இருகணத் தேயுரைப் பான்; -- அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன் -- வந்திங்கு
உன்னை யடைந்தனன்’ என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்;

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; -- பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான்; -- என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; -- நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில
இதஞ்சொல்லி மாற்றிடு வான்;2
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினிலே சொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழிவுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடைபசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.3
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத் திடுவான்; -- எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; -- என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லு முன்னுணர் வான்; -- அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?4
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித் திடுவான்; -- நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந்திடு வான்; -- சிறு
பள்ளத் திலேநெடு நாளழு குங் கெட்ட
பாசியை யெற்றிவிடும் -- பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்;5
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களித்திடுவான்; -- நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடு வான்; -- அவனை
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடுவான்; -- கண்ணன்
தன்னை யிழந்துவிடில், ஐயகோ, பின்
சகத்தினில் வாழ்வதிலேன்.

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; -- மனஸ்
தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி்
தளர்த்திடச் செய்திடுவான்; -- பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடுவான்; -- சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான்;

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; -- அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள
மலைமலை யாவுரைப்பான்; -- நல்ல
பெண்மைக் குணமுடையான்; -- சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்; -- மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான்.8
கொல்லுங் கொலைக்கஞ் சிடாத மறவர்
குணமிகத் தானுடையான்; -- கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்; -- என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடுவான்; -- கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்.

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத்தில் -- பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம்
முற்றிய பண்டிதன்காண்; -- உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்; -- நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன

No comments:

Post a Comment