ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
மானசீக பூஜை பண்றப்போ மனசுதான் எஜமானனாய் இருக்கணும். கெட்ட வார்த்தகளை காது வாங்கி மூளைக்கு அனுப்பிடாம வெளியே துரத்தணும். கண் கண்டதையும் வாங்கி உள்ளே ரசிக்க அனுமதிக்கபடாது. ஏன்னா பூஜை சமயத்திலே பகவானைக் கண் பார்க்கும். கை பூ எடுத்து போடும். வாய் ஸ்லோகம் சொல்லும். மனது மட்டும் சிலதை ரசிச்சிண்டிருக்கும். இது தெய்வம் தண்டிக்குமே என்கிற பயத்தாலே செய்கிற சடங்காயிடும். தேரை எத்தனை அலங்கரிச்சாலும் அதுக்குள்ளே ஸ்வாமி இருந்தாதான் அழகு.
கணபதி ஹோமம்னா அப்பம், கொழுக்கட்டை, கரும்பு, பழ வகைகள், அவல், பொரி எல்லாம் சமர்பிக்கிறோம். இது சுவைக்காக.
அக்னி ஒளி. பழங்கள், பூக்கள், நெய், ஹவிஸ் இதெல்லாம் வாசனை;
மந்திர வேத சப்தங்கள் ஓசை- நம்மோட ஐம்பொறிகளும் பகவான் விஷயத்துக்குப் பயன்படறதே பெரிய ஹோமம் தான்.
கை நெய்யையும், ஹவிசையும் சேர்த்து அக்னியிலே போட, கண் நன்னாத் தெரியணும். வியாதி வராம தேகம் ஒத்துழைக்கணும். வாய் மந்திரம் சொல்லணும். நாம சொல்லற மந்திர ஒலி நம்ம காதுலே கேட்டாத்தான் நம்ம ஆத்மா திருப்தியடையும்.
வேத மந்திரங்களை, உபந்யாசங்களை இரண்டு காதுகளாலேயும் வாங்கி மனசிலே நிரப்பிக்கணும்.
மனசு நிர்மலமாயிருந்தாதானே இதையெல்லாம் நிரப்பிக்கலாம்.
கெட்ட எண்ணம் வராமல் இருக்கறது மட்டுமே சுத்தமான மனசு ஆகாது.

No comments:
Post a Comment