வெகு காலம் கழித்து பிறந்ததால் வேங்கிடுசாமி
என்று
குலதெய்வத்தின் பேரை தாத்தா பாட்டி தனக்கு வைத்த
து
ப்ரொபசர் வேங்கிடசாமிக்கு பிடிக்கவில்லை. எனவே பெத்த பெருமாளின் பெயரை சுருக்கி மாடர்னாக ''வேமி'' என்று சுருக்கமாக பெயர் மாற்றிக்
கொண்டதோடு
மட்டும் அவருக்கு திருப்தி இல்லை.
இப்படி தனக்கு பெயர் வைத்த தாத்தா பாட்டியோடு பெருமாள் மேலும் அவருக்கு வெறுப்பு வந்தது. பெருமாள் பிடிக்காததற்கு இது முக்ய காரணம்.
''
கடவுளே இல்லை
''
என்று சொல்லும்
சிலரது பேச்சு இதனால் அவருக்கு பிடித்ததால்
பல இடங்களில்
சந்தர்ப்பம் கிடைத்தபோது வேங்கிடுசாமி
தானும் அதை பரப்புவதில் மும்முரமாக இருந்து பல இடங்களில் கூட்டத்திலும் பேசினார்.
கல்லூரியிலும் ஜாடையாகவும் நேரேயும் தனது சித்தாந்தத்தை போதித்தார்.
அனைத்து
கல்லூரி மாணவர்கள்
விழா
கூட்டம் ஒன்றில் பல பேர் பேச அழைக்கப்
பட்டதில்
சிறந்த பேராசிரியர்
வேங்கிடுசாமி யோடு மற்றொருவரும் வந்திருந்தார். அவர்
ஒரு
ராணுவ அதிகாரி. சீன எல்லையில் போர் புரிந்து பிரபலமானவர்.
''இப்போது புரட்சிப் பேச்சாளர் பேராசிரியர் வேங்கிடுசாமி அவர்கள் பேசுவார் என்ற அறிவிப்பை தொடர்ந்து வே.மி. பேச ஆரம்பித்தார். ஒரு சிலரின் கை தட்டல் அவரது உற்சாகத்தை வளர்க்கவே ''....... இதோ பாருங்கள் இந்த கூட்டத்தில் நான் அமரு;ந்துள்ள மேடைய... இதன் மேலே ஒரு ஷாமியானா..அதில் ஒரு கிருஷ்ணன் படம்... இது எதற்கு என்கிறேன்?? கிருஷ்ணன் காலேஜ் மாணவனா? ஆசிரியரா? இங்கே என்ன வேலை? அப்படியே அவர் நம்மோடு சம்பதப்பட்டவர் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் விஞ்ஞான பேராசிரியர். எதையுமே ஆதாரம் நிரூபணம் ஆகாமல் இல்லாமல் நம்புவதில்லை.
உண்மையாகவே கிருஷ்ணன் ஒரு கடவுள் என்று ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஒரு சிறிய சவால் விடுகிறேன். ''கிருஷ்ணா . நீ கடவுள், சர்வ சக்தி படைத்தவன் என்று சொல்கிறார்களே, அதை இங்கே இந்த கூட்டத்தில் மக்களுக்கு நிருபிக்க வேண்டும். எப்படி? இதோ நான் இந்த மேடையில் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் அல்லவா. என் நாற்காலி யிலிருந்து என்னை உன்னால் அசைக்க முடியுமா கிருஷ்ணா. உன்னால் இதை செய்யமுடியுமா? இது உன்னால் நடக்க கூடிய காரியமா? முடிந்தால் நீ உண்டு என்று ஒப்புக்கொள்கிறேன். நம்புகிறேன். எதற்கும் உனக்கு 15 நிமிஷங்கள் அவகாசம் தருகிறேன்.'' என்று உணர்ச்சி பொங்க பேசினார். இள வட்டங்களில் சில கைதட்டின. மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வே.மி. பேசிக்கொண்டே போனார்; நேரம் ஓடியது. கைகடிகாரத்தில் 10 நிமிஷம் ஓடியதை பார்த்து. ''கிருஷ்ணா, உனக்கு இன்னும் ஐந்து நிமிஷங்கள் தான் பாக்கி. நான் காத்துக்கொண்டிருக்கிறேன் உன் வருகைக்கு..'' என்றார் வே.மி.
பதிமூன்று... பதினான்கு நிமிஷங்கள் ஓடின.
அவருக்கு அருகே மேடையில் அமர்ந்திருந்த ராணுவ அதிகாரி எழுந்தார். ஒரே உதையில் நாற்காலியோடு வே.மி.யை மேடையிலிருந்து கீழே தள்ளினார்.
எல்லோரும் திகைத்தனர்.
ராணுவ அதிகாரியோ எந்த உணர்ச்சியும் காட்டாமல் தனது நாற்காலில் அமர்ந்து கொண்டார்.
ஒரே ஆரவாரம், கலவரம். அமைதி அமைதி என்று பலர் கூவினர்.
வலியை பொறுத்துக்கொண்டு இடது கையால் இடுப்பை தாங்கிக்கொண்டு மீண்டும் வே.மி மேடை ஏறினார். சரியான கோபம் அவருக்கு.
அருகே அமர்ந்திருந்த 'பலராம் சிங் என்ற அந்த ராணுவ அதிகாரியைப் பார்த்து '' உனக்கென்ன பைத்தியமா? எதற்கு என்னை கீழே தள்ளினாய்'' என்று உரக்க கேட்டார்?
பலராம் சிங் அமைதியாக எழுந்து அனைவருக்கும் கேட்கும்படியாக ''கிருஷ்ணன் லோக சம்ரக்ஷணன். மிகவும் பிசியாக இருக்கிறார். எல்லைப்பகுதியில் எங்களை ரட்சிக்கும் அவரை தொந்தரவு செய்ய இஷ்டமில்லை. அதே போல் பொறுப்பற்ற பேச்சுகளை பேசும் உங்களைப்போன்றோர்களையும் அன்போடு காத்துக்கொண்டிருக்கிறார்.'' நான் வேலையாக இருக்கிறேனே எனக்காக நீ சென்று சவால் விட்ட அந்த பேராசிரியரை சந்தித்து ஆவன செய்யக் கூடாதா என்று கிருஷ்ணன் எனக்கு ஆணையிட்டார். மேலதிகாரிகளின் ஆணையை ராணுவத்தில் நாங்கள் மீறுவதில்லை. ' எனவே தான் '' மதிப்புக்குரிய பேராசிரியரே உங்கள் சவாலை அவர் சார்பில் நான் ஏற்று நீங்கள் விரும்பியதை செய்தேன்''
அனைவரின் கரகோஷம் வெகுநேரம் தொடர்ந்து ஒலித்தது.இப்போதெல்லாம் வே.மி கடவுள் பற்றி பேசுவதில்லையாம்
No comments:
Post a Comment