Monday, May 4, 2015

'பெரியவாளின் 'யுனீக்' ஸாமர்த்தியம்"

'பெரியவாளின் 'யுனீக்' ஸாமர்த்தியம்"

(அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை)



கட்டுரையாளர்-ரா-கணபதி.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"தம்பதியோ (நீலம் ராஜு மகளும் மருமகனும்) உடனேஇந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்;உயிர் காத்தமனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்;
அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞைசெய்து கொண்டனர்."


அப்படித்தான் இப்போது ஸ்ரீ சரணரின் சரணாரவிந்தத்துக்குப் பாதபூஜை செய்யப் புஷ்பங்களும்,ஸ்வர்ண புஷ்பங்களும் எடுத்துக் கொண்டுவந்திருக்கின்றனர். பெரியவாளின் ரக்ஷக சக்தியும் ரக்ஷிக்கப்பட்டவர்களின்உத்தம பக்தியும் உடனிருந்தோரை உருக்கி விட்டது.பெரியவாள் மிராகிளில் தமக்கு சம்பந்தமேயில்லாதது போல,ஆனால் மலர்ச்சியுடன் அவர்கள் கூறியதையெல்லாம்கேட்டுக் கொண்டார். பன்னீராகச் சிறிது நேரம்அவர்களிடம் பேசினார். பிறகு பாரிஷதர்களிடம் கூறித்தமது பாதுகைகளைத் தருவித்தார்.

தம்பதியின் பெண் குழந்தையை அருகழைத்தார்.அதன் பெற்றோர் கொண்டு வந்திருந்த புஷ்பம்,ஸ்வர்ண புஷ்பம் யாவற்றையும் அதன் புஷ்பக் கையாலேயேஎடுத்துப் பாதுகைக்கு அர்ச்சனையாகப் போடச் சொன்னார்.குழந்தை ஆசை ஆசையாகப் பாத பூஜை செய்தது.
பெற்றோர் ஆனந்தத்துடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.


ஸ்ரீசரணர் அவர்களை நோக்கி, "நீங்கள் இருவரும் சேர்ந்துஇந்தக் குழந்தை. இது பண்ணும் பூஜை நீங்களே செய்வதுதான்!அதோடு உங்கள் கையால் பண்ணுவதை விட இது குட்டிக்கையால் பண்ணும்போது நிறைய அர்ச்சனை, நிறைய நாழிநடக்கும்" என்று முகமெலாம் நகையாகத் தெலுங்குமொழியில் கூறினார்.
அவர்களது ஆனந்தம் அப்போது ஆராத ஆனந்தமாயிற்று!பூஜை முடிந்தது.

ஸ்ரீசரணர் அவர்களை அழைத்துச் சென்று வயிறார போஜனம்செய்விக்குமாறு பாரிஷதர் சிலரிடம் பணித்தார்.
அவர்கள் சென்றபின் உடனிருந்தோரிடம் சொல்வார்;
"இந்தப் புண்ய பாரத தேசத்தில் பிறந்த ஒருவர் அந்நிய தேசம்போய் நம்முடைய ஆசாரங்களில்லாத ஜனங்களுடன்பழகி விட்டுத் திரும்பி வரும்போது அங்கே என்ன அநாசாரம்நடந்திருக்குமோ என்கிறதால் அவர்களை ரொம்பவும்
சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் அநுமதிப்பதில்லை.

அதனால் நீலம் ராஜுவுடைய பெண்-மாப்பிள்ளை பாத பூஜைசெய்கிறதற்கில்லை, சாஸ்த்ரிகளை வைத்துக் கொண்டு'ஆசார்ய முகேன' என்று அவரிடம் அவர்கள் புஷ்பம்முதலானதைக் கொடுத்து அவர் கையால் பூஜைபண்ணியிருக்கலாம்தான்! ஆனால் அவர்களுக்கிருந்த பக்திதாபத்தில், நேரே தாங்கள் பூஜை பண்ணாமல் ஒருத்தர் கையில்கொடுத்துப் பண்ணுவது ரொம்பவும் மனஸுக்கு ஏற்காமலே இருக்கும். அதுவே தங்கள் குழந்தை தங்களுக்காகப் பண்ணுகிறது,அதோடு நான் சொல்லிப் பண்ணுகிறது என்கிறபோது தாங்களே பண்ணுவதை விடவும் அவர்களுக்கு ஸந்துஷ்டியாயிருக்கும்.
"கடல் கடந்த தோஷம் குழந்தைக்கும் தானே இருக்கிறது என்று தோன்றலாம்.அப்படியில்லை. அது புண்ய பாரத தேசத்திலிருந்துவேறே ஆசாரமுள்ள வெளியிடத்துக்குப் போகவில்லை. இந்தக்குழந்தை பிறந்ததே இங்க்லாண்டில்தான். அங்கே பிறந்த குழந்தைஇந்தப் புண்ய தேசத்துக்கு வந்திருக்கிறது.அதோடு குழந்தைப் பிராயம் என்கிறதாலும் ஒரு பரிசுத்தி. 

அதனால்தான் சாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகவும் பண்ண வேண்டாம்,நல்ல பக்தி மனஸுக்காரர்களின் தாபத்தை சமனம் செய்யாமலும் இருக்க வேண்டாம் என்று அந்தக் குழந்தையை விட்டுப் பாத பூஜை பண்ணச் சொன்னது."

அபிஷேக தீர்த்தத்திற்குப் பதில் இளநீர் (எம்.எஸ்.-சதாசிவம்)
கொடுத்த அதே 'ஸாமர்த்தியம்' தானே இங்கேயும் பேசுகிறது?மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும்ஒட்டிய இந்த 'யுனீக்' ஸாமர்த்தியத்தை என் சொல்ல?

5

No comments:

Post a Comment