Friday, May 8, 2015

என் கடமை:



வேதத்தை ரக்ஷிக்க வேன்டியதுதான் உங்களுடைய பெரிய கடமை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் என் கடமை. நீங்கள் நான் சொல்வதைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும், உங்களை காரியம் பண்ணும்படி செய்ய எனக்கு சக்தியில்லாவிட்டாலும், “இதுதான் உங்கள் காரியம்; இதுதான் உங்கள் கடமை” என்று வாய் வார்த்தையாகச் சொல்லவாவது எனக்குச் சக்தி இருக்கிற மட்டும் ஓயாமல் ஒழியாமல், நச்சு நச்சென்று, இதை நான் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். வேதத்துக்காகத்தான் ஆசார்யாள் இந்த மடத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பெயரை வைத்துக்கொண்டு உங்களைப் பாக்கி எப்படியெல்லாம் நான் ஏமாற்றினாலும், இந்த வேதங்களைக் காப்பாற்றிக் கொடுக்கும்படியான பொறுப்பையாவது ‘ஸின்ஸிய’ராக பண்ணிவிட்டால், அது ஓரளவு தோஷ நிவிருத்தியாகும். இதையும் பண்ணாவிட்டால் மஹா பெரிய தோஷமாகிவிடும். அதனால்தான் அலுப்புத் தட்டினாலும் ஸரி என்று, திரும்பத் திரும்ப வேத ரக்ஷணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment