Sunday, May 10, 2015

பெரியவாளின் மலர் அடி

காஞ்சி மஹா பெரியவாள் சத்தமே இல்லாது பல அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை செய்து இருக்கிறார். தனது சக்தி
அவர் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளி படுத்துவார். உதாரணத்திற்கு ஒரு புகழ் பெற்ற துறவி ஒருவர் ,இவர் பாத யாத்திரை செய்யும் பொழுது எதிரில் காரில் வந்தார். காரிலிருந்து இறங்கி பெரியவாள் முன் கையை சுத்தி என்ன, என்னலாமோ செய்தார். பெரியவாள் பின்னால் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பெரியவாள் அதை பார்த்து. நீ என்ன பண்றனு கேட்டார். இல்லை. என் மந்திர சக்தியால உங்களுக்கு ஒரு மாலை வர வைத்து அதை போடலாம்னு பார்த்தேன்.
பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே. உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம்.
பின்னர் அந்த துறவி பெரியவாளிடம் ஆசி வாங்கி அவர் காரில் ஏற பெரியவாள் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதே போல் அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற ஒருவர் பெரியவாளை சந்தித்து என்னால் வானில் பறவை போல் பறக்க முடியும், நடுக்கடலில் நடக்க முடியும், நெருப்பினில் என்னால் குளிக்கவும் முடியும். நினைத்த உருவத்தை என்னால் எடுக்கவும் முடியும். நான் வேண்டுமானால் இப்பவே ஒரு குரங்காய் மாறி காட்டட்டுமா அப்டினு பெரியவாளை பார்த்து அந்த நபர் கேட்டாராம்.
பெரியவாள் நீ அதுக்குதான் லாயக்கு என்று சொல்லி உள்ளே சென்று விட்டாராம். பின்னர் அந்த நபர் தனது தவறை உணர்ந்து
பெரியவாளிடம் மன்னிப்பு கேட்க நினைத்தார். முதலில் அந்த நபரை பெரியவாள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவர் வெளியிலேயே காத்து இருக்க அதன்பிறகு மனமிரங்கி அவரை பெரியவாள் பார்க்க அனுமதித்தார்.
முழுவதும் அழிந்தவராய் பெரியவாளின் மலர் அடியை பணிந்தார்.

No comments:

Post a Comment