Wednesday, December 3, 2014

“அனுஷ நட்சத்திரமா?

Contributed by Forum Member Shri Sankara Narayanan


வெளியூரிலிருந்து வந்த கணவன் – மனைவி மஹானின் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களது கையில், அவர்கள் பெற்றெடுத்த முதல் குழந்தை !

மகானின் பரம பக்தர்களான அவர்கள், தங்கள் குழந்தை மகானின் ஆசியைப் பெற வேண்டும் என்று பட்டுத்துணியால் குழந்தையைச் சுற்றி எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள்.

இவர்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே கிடத்தினார்கள். “மகா பெரியவா இந்தக் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும்!” இது அவர்களின் கோரிக்கை. அதைத் தவிர குழந்தையைப் பற்றி அவர்கள் வேறு எதுவுமே சொல்லவில்லை.

குழந்தையைக் கனிவோடு பார்த்தார் மகான். பிறகு, பெற்றோர்களிடம் புன்னகை புரிந்தவாரே கேட்டார்,

“அனுஷ நட்சத்திரமா? 

அதிர்ச்சியடைந்தனர் பெற்றோர். தாங்கள் சொல்லாததை மகான் சொல்கிறாரே! தலையை மட்டும் ஆட்டுகிறார்கள்.

அருகில் இருந்த கற்கண்டை தன் கையால் எடுத்து நசுக்கி குழந்தையின் வாயில் வைக்கிறார் மகான். பிறகு ஆசீர்வதிக்கிறார்.

முக்காலமும் உணர்ந்த ஞானி அவர் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

No comments:

Post a Comment