பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!"
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்
பெரியவாள். சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த பெரியவா,
ஒரு சந்தர்ப்பத்தில், சட்டென்று பேச்சை நிறுத்திக்
கொண்டார்கள்; உடனே, எழுந்து நின்றார்கள்.

"நான் மட்டும் வெளியே போய்விட்டு வருகிறேன்.
யாரும் என்னுடன் வரவேண்டாம்" என்று சொல்லிவிட்டு,
வாயிலை நோக்கி நடந்து வெளியே போய்விட்டார்கள்.

எல்லோருக்கும் திகைப்பு; உள்ளுக்குள்,அச்சம்.
பெரியவா தனியாகப் போகிறார்களே? என்று கவலை.

கொஞ்ச நேரம் கழித்துப் பெரியவர்கள் திரும்பி
வந்ததும்தான், எல்லோரும் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள்.
என்றாலும், 'எங்கே போய்விட்டு வந்தார்கள்?'
என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அடங்கவில்லை.

பெரியவா அவர்களை வெகுநேரம் தவிக்கவிடவில்லை.
"எங்கே போனேன்னு எல்லோரும் கவலைப்பட்டேள்,
இல்லையா.... ஒரு கொலைகாரன் என்னைப் பார்க்க
வந்துகொண்டிருந்தான். அவன் மடத்துக்குள்ளே வந்தால்,
அவனுடன் கூடவே மகாபாவமும் உள்ளே வந்து
ஒட்டிக்கொள்ளும்.

"ஆனா, என்னிடம் நல்ல எண்ணத்தோடதான் வந்தான்.
நான் அவன் வரூத்தத்தைப் போக்குவேன்னு நம்பிண்டு
வந்தான்.அப்படிப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்வது என் கடமை

"அவனை மடத்துக்குள்ளே விடவும் கூடாது; ஆறுதலும்
சொல்லணும்! அதனாலே நானே வெளியே போய் பேசிவிட்டு
வந்தேன். அவனைத் தனியே அழைத்துக்கொண்டு போய்,
அவனுக்கும் சங்கடம் கொடுக்காமல், தனியே பேசி
ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்..."

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால்
பகவான், பக்தனை நோக்கிப் பத்து அடிகள் எடுத்து
வைப்பார் என்பார்கள். ஆனால், பெரியவாளோ
ஒரு பாவி,மனம் திருந்தி, தன்னை நோக்கி ஓர் அடி
எடுத்துவைத்தாலும், தான், நூறு அடிகள் எடுத்து வைத்து,
தன் கடாட்சத்தினாலேயே அவனைக் கழுவி விட்டு
விடுவார்கள் - அடியார்களை ஆட்கொள்வதற்கு.

பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு;
பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!

No comments:
Post a Comment