திமு திமுவென கோபுவின் பள்ளி ஆசிரியர்கள் வந்து வீட்டில் குழுமி விட்டார்கள். தாத்தாவிற்கு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கௌரவித்து பரிசு கொடுத்து விட்டுச் செல்ல விட்டார்கள்.
அவர்களை எல்லாம் இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தினார் தாத்தா.
ஒருவர் விழுந்து வணங்கினார். ஒருவர் இருகரம் தலைக்கு மேலே கூப்பினார். ஒரு சிலர் தலைசாய்த்து வணங்கினர். சிலர் கை கொடுக்க வந்தனர் ஒவ்வொருவிதமாக அவர்கள் மரியாதை பண்ணுவதை பார்த்து ரசித்தார் தாத்தா .
''உங்களுக்கு நமஸ்தே நமஸ்காரம் என்று சொல்கிறோமே அதற்கு அர்த்தம் தெரியுமோ ?'' ஒருவரும் பதில் சொல்லவில்லை. தாத்தாவே விளக்கினார் .
நமது பாரத தேசத்தில் ஒருவரை மற்றொருவர் நமஸ்காரம், நமஷ்கார், நமஸ்தே என்று வாழ்த்தி வணங்குவது வழக்கம். இதை ஒருவர் சந்திக்கும்போதும் விடை பெறும்போதும் சொல்கிறோம். இரு உள்ளங்கைகளையும் சேர்த்து மார்புக்கருகில் வைத்து, உடல் வளைத்து தலை சாய்த்து உச்சரிக்கிறோம். இந்தமாதிரி இரு உள்ளாங்கைகளையும் சேர்த்து வைத்து வணங்குவதற்கு நமஸ்கார முத்ரை என்று பெயர்.
கையாட்டி விடை பெறுவது, ஜப்பானியர் வழக்கம் மாதிரி ஒருவரை தொடாமல் வாழ்த்தி வணங்குவதில் ஒரு ஆன்மீக உண்மை இருக்கிறது.
நமஸ்காரம் என்கிற ஸம்ஸ்க்ரித வார்த்தை நமஹ என்பதில் இருந்து பிறந்தது. செலுத்துவது அர்ச்சனை நாமாவளி சொல்லும்போது ''அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ'' என்று ஒவ்வொரு நாமத்திற்கும் கடைசியில் நமஹ சேர்த்து சொல்கிறோம் அல்லவா. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆத்மா என்கிற பரம்பொருள் இருக்கிறதே. அதை மதித்து வணங்குவது தான் நமஸ்காரம். ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வது.
இரண்டுமே ஒன்றாயினும் நமஸ்காரம் என்று சொல்லும்போது சாத்வீகமாக இருக்கிறது. மற்றொரு ஜீவனிலும் பகவான் இருக்கிறான் என்று உணரும்போது தெய்வீக உணர்வு மேலிடுகிறது. ஆன்ம சக்தி அதிகரிக்கிறது. (சைதன்யம்).மற்றொருவரை வணங் கும்போது அவருள் ஒளிரும் ஆன்மாவை நாம் சரணாகதி அடைகிறோமே. இதால் உள்ளம் அமைதியுறுகிறது. இறைவனிடம் நன்றி உணர்சசியும் பக்தியும் பெருகுகிறது. ஒருவனின் ஆன்ம வளர்ச்சிக்கு இது அத்தியாவசியம்.
1. மற்றவரை வணங்கி நமஸ்காரம் பண்ணும்போது '' ந மஹ ஸ தே'' நான் ஒன்றுமே இல்லை, நீயே சர்வமும் நீயே ஆண்டான் நான் அடிமை என்ற உயர்ந்த நோக்கு வெளிப்படுகிறது. அகம்பாவம் அழிகிறது. பணிவு பெருகுகிறது.
2. நமஸ்கார முத்ரை செய்வதால் தெய்வீக உணர்வு உடலுக்குள், மனதில் இடம் பெறுகிறது. நமஸ்காரம் என்று சொல்லும்போது ஆகாசதத்வம் பிறக்கிறது (Ākāshtattva) முத்ரையோடு சொல்லும்போது பஞ்ச பூதங்களில் ப்ரிதிவி தத்வமும் கூடவே வளர்கிறது. (prithvithattva) ஏனென்றால் முத்ரை மண்ணோடு இயைந்தது. இறந்து பூதங்களின் சேர்க்கை இவ்வாறு ஒருமித்தபோது மற்ற பூதங்களின் சேர்க்கையும் தானாகவே நேர்கிறது. நல்வழியில் உயர்ந்த நோக்கில் நம்மை செலுத்துகிறது. மற்றவரை தொடாதிருக்க செய்கிறது.
ஒருவரை மற்றவர் தொடும்போது சில சக்திகள் பரிமாறப்படுகின்றன. பாசிடிவ் எனெர்ஜி என்கிறோமே அது அகன்று மற்றவரிடமிருந்து நெகடிவ் எனெர்ஜி நம்மை அணுகாமல் காக்கிறது. தொடாமல் இருப்பதால் சத்வ அலைகள் (vibration) மற்றவரை அடைகிறதே அவரை வளரச் செய்கிறதே தவிர அவரிடமிருந்து தாமச, ராஜச அலைகள் தீண்டாமல் காக்கிறது.
விரல் நுனிகள் ஆகாசத்தை நோக்கியே இருப்பதால் மற்றவரின் உயர்வற்ற அலைகள் நம்மை நெருங்காது. முத்ரையின் உபயோகம் இது.
கீழே ஒரு படம் ஆங்கில விளக்கத்தோடு கொடுக்கப்பட்டிருக்கிறது. நமஸ்காரம் பண்ணுபவர் பெறுபவர் பரிமாறிக்கொள்ளும் அலைகள் எவ்வளவு புரியும்படியாக விளக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்காக நமஸ்காரம் பன்னுவருக்கு 30 சதவிகிதம் ஆன்ம சக்தியும், பெறுபவருக்கு 50 சதவிகிதா ஆன்ம பலமும் இருப்பதாக காட்டி எப்படி இருவரிடம் இது பயணிக்கிறது என்று பாருங்கள்.
நுண்ணறிவு என்ற தலைப்பில் இந்த படத்தை பிரியங்கா லோதில்கார் என்ற பெண்மணி வரைந்திருக்கிறார். ஆறறிவு என்கிறோமே அதன் உச்ச நோக்கில் இது உண்டாக்கப்பட்டிருக்கிறது. பூஜ்ய டாக்டர் அதவாலே இதை அங்கீகரித்திருக்கிறார். இது பரிசோதிக்கப்பட்டு 80 சதவிகிதம் நம்பகமானது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய வெற்றி அந்த பெண்மணிக்கு. ஆத்மஞானத்தில் இது உயர்ந்த அளவு .
| Sno. | Explanation |
|---|---|
| 1 | When a person greets another with the feeling that “I am paying obeisance to the soul in the other” then a ring of spiritual emotion is created within him |
| 1A | Where there is spiritual emotion there is Communion with God and one is better able to access God’s thoughts |
| 1B | As a result there is a ring of spiritual emotion that is created around the person who is being greeted |
| 2 | This in turn attracts a flow of the Divine Principle or God’s power |
| 2A | A ring of the Divine Principle is created and activated |
| 3 | Wherever there is Divine Principle,a flow of Bliss (Ānand) is attracted. Bliss is a type of subtle-energy that brings about supreme happiness which is not dependant on any stimulus. |
| 3A | This creates and activates a ring of Bliss around the person greeting |
| 3B | The person being greeted also imbibes this flow of Bliss |
| 3C | As a result there is a creation and activation of a ring of Bliss around the person being greeted |
| 3D | There is an activation and emission of particles of Bliss into the environment |
| 4 | A flow of Divine consciousness is also attracted to the person who initiates the greeting |
| 4A | Thereby creating and activating of a ring of Divine consciousness around him |
| 4B | The Divine consciousness is emitted into the environment |
| 4B2 | The person being greeted too imbibes the flow of Divine consciousness from the person greeting him |
| 4C | A flow of Divine consciousness is also attracted directly to the person being greeted |
| 4D | There is creation and activation of a ring of Divine consciousness around the person being greeted |
| 4E | There is activation and emission of particles of Divine consciousness and the environment is benefitted spiritual |
- மாதவனையோ மானுடனையோ யாராக இருந்தாலும் நமஸ்காரம் பண்ணும்போது கண்களை மூடுங்கள். அகத்தைக் ''காண'' இது உதவும். உள்ளே இறைவனைக் காட்டும், வணங்கும் மற்றொரு ஆத்மாவில் அவனை உணர்விக்கும்.
மஹா பெரியவா வாழட்டும் ஆசீர்வாதம் பண்ணும்போது அதற்கு என்ன அர்த்தம் சொன்னார் என்பதை அடுத்ததாக சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும்.
No comments:
Post a Comment