Friday, December 5, 2014

கார்த்திகைப் பண்டிகை


கார்த்திகைப் பண்டிகையன்று தீபங்களை ஏற்றி வைத்து விட்டுக் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.
 
                கீடா : பதங்கா : .மச காச்ச வ்ருக்ஷா :
                ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா :
                த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
                பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா : ii


“ புழுக்களோ , பக்ஷிகளோ, அல்லது கொசுவாகத்தான் இருக்கட்டும் , அந்தக் கொசுவோ, நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகின்ற வ்ருக்ஷமோ , இன்னும் ஜலத்திலும் , பூமியிலும் எத்தனை வகை ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனிதர்களுக்குள்ளேயே  பேதம் இல்லாமல் பிராம்மணனோ , பஞ்சமனோ , எவனாலும் சரி எதுவானாலும் சரி , இந்தத் தீபத்தைப் பார்த்து விட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவ்ருத்தியாகி , இன்னொரு  ஜென்மா எடுக்காமல்  நித்யானந்தத்தில் சேரட்டும் “ ----------

அக்னி ஸ்வரூபமாக நிற்கும் திருவண்ணாமலை  பஞ்ச பூதத்தலங்களுள் அக்னிக்கு உரிய தலமாகும் இங்கு மலையே இறைவனின் ஸ்வரூபம் வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதியாகும் .


அருணாசல மகிமை :
---- 
ஒரு சமயம் வச்ராங்கதன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் . அவன் ஆண்டு வந்த காலத்தில் நோய் இல்லை , திருடு இல்லை என எல்லாக் கெடுதல்களும் இன்றி நல்ல முறையில் ஆட்சி செய்து சிவ பக்தியுடன் இருந்தான். ஒருநாள் வேட்டையாடுவதற்காக , கையில் வில்லும் அம்பும் ஏந்தி , குதிரை மீது ஏறி , காட்டை நோக்கிச் சென்றான் . அங்கு ஒரு கஸ்தூரி மிருகத்தைக் கண்டு அதைப்பின் தொடர்ந்தான் . அரசனைக் கண்டதும் அம்மிருகம் வேகமாக ஓடத் தொடங்கியது. அது அரசனை நெடுந்தூரம் இழுத்துச் சென்றது , அரசனும் சலிக்காது அதன் பின் தொடர்ந்தான் . அது எங்கு இழுத்துச் சென்றது தெரியுமா? திருவண்ணாமலைக்குத்தான் அவர்களை அறியாமலே அண்ணாமலையைச் சுற்றி வந்தார்கள் 


அருணாசலத்தை வேகமாகச் சுற்றி ஓடிய அந்த வாசனை மிருகம் ஒரு சுற்று சுற்றியதும் கீழே விழுந்து மடிந்தது. பாண்டியன் ஏறி வந்த குதிரையும் அதே சமயத்தில் கீழே விழுந்து தன் உயிரை விட்டது . அதனால் பாண்டிய அரசனும் தரையில் விழும்படி ஆயிற்று. அப்பொழுது காந்திசாலி, கலாதரன் என்ற இரண்டு  வித்யாதரர்கள் வானில் தோன்றி ,” அரசே ! “ எனக் கூப்பிட்டு , “இந்த அருணாசலத்தை வலம் வந்த மகிமையால் , எங்களுக்கு துருவாச முனிவர் விதித்த சாபம் நீங்கப்பெற்றோம் . “ எனக் கூறி அரசனையும் கட்டாயம் வலம் வருமாறு கூறி, அங்ஙனம் வலம் வந்தால் ஏற்கனவே  சிவபக்திச் செல்வம் உள்ள அரசனுக்கு இருக்கும் இடர்கள் யாவும்  இடறி மாய்ந்துவிடும் என்று கூறி மறைந்தனர்.

       அதனால் அருணாசலத்தை ஒருமுறையேனும் வலம் வந்தால் இடர்கள் களையப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவோம் என்பது திண்ணம் எனத் தெரிகிறது -- உமாபாலசுப்ரமணியன். 

No comments:

Post a Comment