Saturday, December 6, 2014

ஏன் இப்படி?

As Received:

சில குறைகளைக், கொண்டவர்களை விட, கண்டவர்களே அதிகம் கவலை படுகின்றனர்!

குழந்தைகள் மட்டுமே பழம் விட்டதும் பழசை மறக்கின்றனர்.

செருப்பு விற்பவனிடம் பார்க்காத ஜாதி, செருப்பு தைப்பவனிடம் பார்க்கப்படுகிறது.

நாம ஒண்ணு நினைச்சா மனைவி இரண்டு நினைக்கிறா = தீபாவளி சேலைகள் !

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தடுக்கும் சிறந்த கருத்தடை மாத்திரை முதல் குழந்தையின் பள்ளிக்கட்டணமே 

நம்மைப் பெற்ற அம்மாவுக்கு போன் செய்தாலும், நாம் பெற்ற பிள்ளைகளுக்கு போன் செய்தாலும் 'நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தற்சமயம் பிஸியாக உள்ளார்’ என்கிறார்கள். மனிதர்களை வாடிக்கையாளர்களாக மாற்றியதுதான் செல்போனின் ஆகப்பெரிய சாதனைபோல. ஆனால், இவர்கள் வியாபாரம் செய்வதை 'சேவை’ என்று சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை

No comments:

Post a Comment