Saturday, December 13, 2014

.பெரியவா சரணம்.

உலகின் அதிகமான பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது என அறிஞர்கள் கூறுவதை

 அறிந்திருக்கின்றோம். அந்த நீர்பரப்பினை கடல் என்று அறிகிறோம். நாம் நேராக கடலுக்குச் சென்று அந்த நீரை அருந்தி நமது தாகத்தினைத் தீர்த்துக்

 கொள்ள இயலுமோ..? ஆனால் மேகமானது கடல் நீரை அருந்தி, ஸர்வ 

பிராணிகளும் குடித்து நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளத் தக்க மதுரமான 
நீரைப் பொழிகின்றதல்லவா! அவ்வாறே சற்குருவானவர் வேத வேதாந்தம் 

முதலிய ஸகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்து சிஷ்யர்களின், பக்தர்களின்

 அதிகாரத்திற்கேற்ப அவரவர்களுக்குத் தகுதியானவற்றை உபதேசித்து 

முடிவில் மேலான நிலைக்கு கொண்டு வருகின்றார். ஆதலின் சற்குருவின் 

மூலமாகவே தான் ஞான சாஸ்திர விசாரம் செய்ய வேண்டியது என்று நம்

 சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குருதத்வ விமர்சனத்தில் கூறுவதாவது ஒருவனுக்கு சிறந்த குரு

பக்தியிருக்குமேயாயின், அவர் மூலமாய் அவனுக்குக் கிடைத்துள்ள ஒரு

வாக்கியத்தின் மூலமாய், எல்லா சாஸ்திரங்களின் ரகசியத்தையும் அறிதல்

கூடும். இத்தகைய சிஷ்யன், தூய்மையான மனத்தையுடைய தன்மையால்

, தன் அந்தக்கரணத்திற்கு அதிஷ்டானமாய் விளங்கும் தனது ஆத்ம ஸ்வரூபா

 தேவதையைச் சற்குருவின் அருளால், குருஸ்வரூபமாகவே அறிகின்றான்.

 அவனுக்கு தோன்றும் எண்ணங்கள் யாவும் குருவின் உபதேசத்தினால்

கிடைத்தவைகளென்றே கொள்ளத் தகும் என்று கூறுகிறது.
நம் சற்குரு நம்மைக் கடைபிடிக்கச் சொன்ன சத்யமான விஷயங்களுள்

மிகவும் முக்கியமானது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதல்

 என்பதல்லவா!

வாருங்களேன்! அனைவருமாக இன்று உறுதி பூணுவோம். ஆச்சார்யனின்

பத்மபாதக் கருணையில் இந்த உறுதி என்றென்றும் நிலைத்திருக்க

ப்ரார்த்திப்போம். இந்த சத்யமானது நம்மைச் சுற்றியுள்ள பகைமை என்ற

இருளை விரட்டி அன்பு என்ற ஒளி பொருந்தியதாக ஆக்கட்டும் என்ற

ப்ரார்த்தனையோடு இன்றைய புஷ்பத்தினை உங்கள் அனைவருடோடு

சேர்ந்துச் சமர்ப்பிக்கின்றேன்.

No comments:

Post a Comment