Friday, December 5, 2014

"உத்தரவு பெரியவா"

Dears , Namaskaram / Jaya Vijayee Bhava .
It is very well known that the parents of 1000s and 1000s of parents of NRIs are in a great dilemma , whether to go out of India and stay with their children or to stay in India irrespective of the difficulties they have to face by staying alone especially as age advances.
Here is an UPADESAM of Kanchi Mahaperiyava , just conclusively giving his decision on this very important problem faced by the parents of NRIs. Hope this will be of use to many elders.
PRANAAMS to Mahaperiyavaa , who has always been solving the real life challenges faced by us. Please read and get benefitted.
Adiyavan , Kombur Vankeepuram Madhavan.
*****************************************
ஆசார அனுஷ்டானத்துடன் பெரியவா சொல்படி வாழ்க்கையை நடத்திய முதிய பக்தர் க்ருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவியோடு இங்கே இவர் மட்டும் ஸிம்பிளான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி காலமானதும் இவர் மட்டும் இங்கே எப்படி தனியே இருப்பது?
" அப்பா! நீங்க இங்க இருக்க வேண்டாம். எங்களோட அமெரிக்கா வந்துடுங்கோ! ஒங்களுக்கு ஈஸியா க்ரீன் கார்ட் கெடச்சுடும்....."
பையன்கள் தங்களிடம் வந்து இருக்கும்படி அன்போடு அழைக்கிறார்கள். நல்ல பையன்கள்தான்; நாட்டுப் பெண்களும் மிகவும் ப்ரியமானவர்கள்தான். ஆனால், ஏனோ, அவருக்கு தன்னந்தனியாக இருந்தாலும், தனக்கு ஏதாவது ஶரீர அஸௌகர்யம் உண்டானால், யாருமே இல்லையே! என்ற பயமோ, கவலையோ இல்லவேயில்லை! குழந்தைகள் ஆசையாக கூப்பிடும் போது நிர்தாக்‌ஷிண்யமாக மறுக்கவும் மனமில்லை. ஸஞ்சலமான மனஸோடு பெரியவாளிடம் வந்தார். பின் நமக்கு வேறு யார் உண்டு?
"பசங்க தனியா இருக்க வேண்டான்னுட்டு, அவாகிட்ட கூப்பட்றா......கொழந்தேள் நல்லவாதான்.....ஆனா, எனக்கு அங்க அனாசாரம் ஒத்துக்காது....என்ன பண்ணறதுன்னே தெரியலே....பெரியவாதான் வழி சொல்லணும்"
இந்தா பிடி! என்று அத்தனை மனக்குழப்பத்தையும் ஒரேயடியாக த்வம்ஸம் செய்யும் பெரியவாளின் திருவாக்கு அமைதியாகப் பிறந்தது......
"வெளிதேஸம்...ன்னெல்லாம் எங்கியும் போகவேணாம். ஆத்துலேயே ஸ்வயம்பாக்கம் [self cooking] பண்ணிச் சாப்பிடு ...."
"உத்தரவு பெரியவா"
"காவேரி ஸ்நானம், ஶிவபூஜை, ஜபம், கோவில் தர்ஶனம்....ன்னு பண்ணிண்டு ஒன்னோட அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா மாதிரி, க்ராமத்துலேயே ஒரு' ரிஷி' மாதிரி இரு"
க்ருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி! இதுவன்றோ அடித்து சொல்லி பொறுப்பேற்றுக் கொள்ளும் பெரியவாளின் மஹாக் கருணை!
"அப்பனே! குருநாதா! கொஞ்சநஞ்சம் எனக்கிருந்த ஸஞ்சலத்தையும் போக்கிட்டேளே! மஹாப்ரபு! இந்த உபதேஸத்த கேக்கணும்னே வந்தேன்......." தழுதழுத்தார். பெரியவா சொன்னபடியே வாழும் முறையை கைக்கொண்டார்.
அப்புறம் அந்த க்ராமத்திலிருந்து யார் வந்தாலும், க்ருஷ்ணமூர்த்தியைப் பற்றி விஜாரிப்பார் பெரியவா.
ரொம்ப காலம் கழித்து அந்த ஊரிலிருந்து வந்தவர் "க்ருஷ்ணமூர்த்தி நேத்தி ராத்ரி போய்ட்டார்......." என்றார்.
பெரியவா பட்டென்று...."அவன் செத்துப் போகல! ஶிவலோகம் போய்ருக்கான்!" என்றார்.அங்கு அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புல்லரித்தது. பெரியவா அதற்கும் மேல் ஒரு படி போய், ஒரு ஸிஷ்யரைக் கூப்பிட்டு "நீ போய் க்ருஷ்ணமூர்த்தியை நெனச்சுண்டு கொளத்துல ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார்.
என்ன ஒரு பாக்யம்! கல்யாணம் ஆகி ஸெட்டில் ஆகிவிட்ட குழந்தைகள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்காமல், "வானப்ரஸ்தம்" போல், இருக்கும் இடத்தில், "பெரியவா பார்த்துக் கொள்ளுவார், அவர் மட்டுமே துணை" என்று, ஸிம்பிளான வாழ்க்கை வாழும் ஸத்புத்தியை பெரியவா நமக்கும் அனுக்ரஹம் பண்ண வேண்டுவோm.

No comments:

Post a Comment