Monday, November 10, 2014

தெய்வீக இசை ஞானி .மஹா பெரியவாளிடம் சரணடைந்த கதை

இளையராஜா மந்திர சொல் , ரமணரின் தீவிர பக்தர் , மூகாம்பிகை அருள் பெற்றவர் .தெய்வீக இசை ஞானி .மஹா பெரியவாளிடம் சரணடைந்த கதை .

ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்ய பட்டது .ஜீயர் மூலமாக மஹா பெரியவளிடம் விஷயம் தெரிவிக்க பட்டது .ராஜ கோபுர நிலைகளை சீர்படுத்த அந்த நாட்களில் குறைந்த பட்சம் 8 லட்சம்.தேவை பட்டது .

மஹா பெரியவா மடத்து அதிகாரிகளை அழைத்தார் சினிமாவில் பிரபலமான இருக்கும் பெயர்களை எழுத சொன்னார் . நிறைய பெயர்கள் எழுதபட்டது
சுவாமிகள் ராஜாவின் பெயரை செலக்ட் செய்தார் .

ராஜாவிடம் சந்திரமௌலி என்ற மிருதங்க வித்வான் இருந்தார் அவர் மூலமாக இந்த செய்தி ராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டது
ராஜா எப்ப மஹா பெரியவா சொல்லிட்டா எவ்ளோ செலவானாலும் நா நிகழ்ச்சி நடத்தி அந்த பணத்தை குடுக்கறேன் என்று உடனே ஒப்புகொண்டார்.

ராஜா சுவாமியை பார்க்க சதாரா சென்றார் மௌனத்தில் இருந்த சுவாமி ராஜாவிடம் பேசினார் , இங்க தங்கி சாப்டு போ என்றார் . இரவு ராஜாவிற்கு வானத்தை காட்டிஅதோ பார் அது அஸ்வினி , இது பரணி என்று எல்லா எல்லா நட்சத்திரங்களையும் காண்பித்தார் . பின்னாளில் ராஜா இதை பற்றி கூறும் போது, எனக்கு மஹா பெரியவா பழக்கமில்லை , ஆனால் அவரை பற்றிய செய்திகளை சந்திரமௌலி என்னிடம் அடிகடி சொல்வான் . அவர் என் பெயரை தேர்வு செய்தது என் பாக்கியம் . சதாராவில் மௌனத்தில் இருந்த அவர் என்னிடம் பேசியது நான் செய்த புண்யம் . என்னை தங்க சொல்லி இரவு என்னிடம் நட்சத்திரங்களை காட்டி பேசியது வெகு நாள் கழித்து புரிந்தது , அன்று மட்டுமே எல்லா நட்சத்திரங்களையும் வானத்தில் காண முடியும் என்று .
நான் செய்த பாக்கியம் நடமாடும் தெய்வம் என்னை அனுக்ரகம்
செய்தது .இந்த விஷயத்தை ராஜாவே சொல்ல கேட்க விரும்புவோர் YOU TUBE இல் பார்க்கவும்

No comments:

Post a Comment