Thursday, November 27, 2014

பண உதவி

பணக்காரர்களை நம்பித்தான் சோஷியல் சர்வீஸ் என்று வைத்துக் கொள்ளவே கூடாது. அவர்களாகவே காதில் விழுந்து கூப்பிடுக் கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.

நாமாகப் போய்ப் பிடுங்கி எடுக்கக் கூடாது.ஸத் கார்யங்களின் செலவுக்கு என்ன செய்வதென்றால், பணக்காரனைத்தான் நம்பிக்கொண்டிருப்பது என்றில்லாமல், அவனவனும் ஒரு காலணாவது கொடுக்க வேண்டும்.

பணக்காரனும், சரீரத்தால் உழைக்க வேண்டும். ஏழையும் திரவியத்தால் துளி உதவி பண்ண வேண்டும். இது தான் நியாயமான தியாகம். 

ஸத் கார்யங்களுக்குச் சில பணக்காரர்களே அதிக பங்கு செலவு ஏற்கிறார்கள் என்றால் அதனாலேயே அவர்களுக்கு ஸங்கத்தில் அதிக "ரைட்" உண்டாகிவிடும்.

அவர்களுக்கு மற்றவர்கள் பயப்படும்படியாக ஆகும் எதிலும் அவர்கள் சொல்வது தான் முடிவு என்றாகி விடும். இது கூடாது.

பொதுத் தொண்டுக்கு மூலபலம் இல்லை. ஐக்கியப்பட்ட மனம் தான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

பணம் கொடுத்தவன் என்று எவனையும் பிரகடனப்படுத்தி அதனால் அவனுடைய புண்யபலன் போய் விடும்படியாகச் செய்து விடக் கூடாது.

பரோபகாரம் என்று வரும்போது பணத்தைக் காட்டி ஒரு ஸுபிரியாரிட்டி ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது ரொம்பவும் அவசியம்.

No comments:

Post a Comment