“அடேய்… நீ ரொம்பப் புண்ணியம் செய்திருக்கிறாய்.காஞ்சி ஆச்சார்யரின்
புண்ணிய பூமியில் இருந்து அவரிடம் இருந்து ஆசிகளையும் புண்ணியத்தையும்
எனக்குக் கொண்டு வந்திருக்கிறாய்"
(யோகி ராம் சுரத் குமார்)
புண்ணிய பூமியில் இருந்து அவரிடம் இருந்து ஆசிகளையும் புண்ணியத்தையும்
எனக்குக் கொண்டு வந்திருக்கிறாய்"
(யோகி ராம் சுரத் குமார்)
நன்றி-பால ஹனுமான்
யோகியார் திருவண்ணாமலையில் இருந்த ஆரம்ப காலத்தில், காஞ்சீபுரத்தில் இருந்து யாராவது பக்தர்கள் தன்னைத் தரிசிக்க வந்தால், அவர்களை நிற்கச் சொல்லி சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பாராம். யோகியாரைத் தரிசிக்க வந்த பக்தர் திகைத்துப் போய் நிற்பார். அப்போது யோகியாரே சொல்வாராம்: “அடேய்… நீ ரொம்பப் புண்ணியம் செய்திருக்கிறாய்.காஞ்சி ஆச்சார்யரின் புண்ணிய பூமியில் இருந்து அவரிடம் இருந்து ஆசிகளையும் புண்ணியத்தையும் எனக்குக் கொண்டு வந்திருக்கிறாய். நான் ஒரு சாதாரண பிச்சைக்காரன். உன்னைத் தரிசிக்கும்போதே என் மனக் கண்ணில் மஹா ஸ்வாமிகளைப்பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட மகான் !“
அந்த அளவுக்குக் காஞ்சி ஆச்சார்யரின் மேல் யோகியாருக்கு அளவு கடந்த பக்தி உண்டு. ஒரு முறை மஹா பெரியவா திருவண்ணாமலைப் பகுதிக்கு யாத்திரையாகச் சென்றிருக்கிறார். சீனிவாச ஐயர் என்கிற பக்தரின் இல்லத்துக்கு மஹா பெரியவா எழுந்தருளி இருந்தார்.
பெரியவாளின் தரிசனத்துக்காக ஏராளமான கூட்டம் சீனிவாச ஐயர் வீட்டில் கூடி இருந்தது. தான் வணங்கும் தெய்வமான மஹா பெரியவா திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார் என்கிற தகவலைக் கேள்விப்பட்ட யோகியார் (பிரபலமாகாத நேரம்), அந்த இல்லத்துக்கு ஓடி வந்தார்.
பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்து முன்னேறினார். ஒரு கட்டத்தில் மஹா ஸ்வாமிகளே, இவரை அடையாளம் கண்டுகொண்டு தன் அருகே வரவழைத்து ஆசி வழங்கினாராம். இந்த நிகழ்வு, பெறற்கரிய பாக்கியம் என்று யோகியார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
No comments:
Post a Comment