தாத்தா என்ன ரொம்ப மும்முரமா ஏதோ பழைய டயரிலே எழுதிண்டு இருக்கே?
சில வார்த்தைகளை பற்றி படித்தேன். மறந்து போய்விடும் என்பதற்காக உனக்குச் சொல்லத்தான் எழுதிண்டிருக்கேன்.
சொல்லு தாத்தா
விருக்ஷ - என்றால் முக்யமாக வேப்ப மரமும் ஆலமரமும் தான். காலையில் இந்த மரங்களை சுற்றி வந்தால் அவற்றின் அடியில் நாம் சுவாசிக்கும் காற்றில் நமக்கு உடம்பு பலப்படும். வியாதி வராது.
2. யோகா, யோகாசன் - எல்லோருமே உழைப்பினால் உண்டாகும் இருக்க நிலை (stress )யிலிருந்து விடுபட வழி தேடுகிறார்கள். நமது முன்னோர்கள், சுலபமாக இதற்கு வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். பிராணாயாமம் பண்ணினால் போதும். இது ஒன்றும் பெரிய காரியமல்ல. மூச்சை உள்ளே இழுக்கும்போதும் வெளிவிடும்போதும் ஒரே சீராக மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு மூக்கின் வழியாக உள்ளிழுத்தும் மறு மூக்கின் வழியாவெளியேற்றுவதும் தான். மனம் அதில் ஒன்றி ஈடுபட வேண்டும்.
3. பிரதிஷ்டானம் - நமது கோவில்கள் ஏதோ நிலம் இருக்கிறதே அதில் கட்டுவோம் என்று கட்டப்பட்டவை அல்ல. நாம் இப்போது சொல்கிறோமே விஞ்ஞானம் என்று, அதை அவர்கள் சாஸ்திரமாக அறிந்து செயல் படுத்தி கட்டியிருக்கிறார்கள். எங்கு மூல விக்ரஹம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதோ அது மூலஸ்தானம். மூலஸ்தானமாக நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தான் பூமியின் ஆகர்ஷண சக்தி அலைகள் அதிகமாக இருக்கும் இடம் என்பதைக் கண்டுபிடித்து அங்கு நிறுவப்பட்டது. . இதனால் அங்கு வணங்கி நிற்கும் பக்தனுக்கு நன்மை உண்டு. இதுவே சிலை (விக்ரஹ) பிரதிஷ்டை தத்வம்.
4.துளசி - ஒவ்வொரு வீட்டிலும், (பிளேட் (flat )ல் உள்ளவர்கள் கூட சிறிய தொட்டிகளில், வளர்க்கலாம்.) இருக்கவேண்டிய தாவரம் இது. தினமும் குளித்து விட்டு சுத்தமான ஜலத்தில் துளசி இலையை போட்டு வழிபடும் தெய்வத்துக்கு நெய்வேத்யம் அர்ப்பணித்து விட்டு அதை பருகினால், அந்த இலையை சுவைத்தால், வியாதிகள் வருவதை தடுக்கும் மருந்தாக உபயோகப்படும். கோவில்களில் இதற்காகத்தான் இதை விநியோகம் பண்ணினார்கள். சமீபத்திய ஆராய்ச்சியில் துளசி இல்லை H1N1 வியாதிக்கு தடுப்பாக பயன் படுகிறது இவ்வளவு லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள்.
5. மந்த்ரம் - வேத மந்திர உச்சாடனம் ஒரு அத்யாவசியமாக நமது முன்னோர்கள் கருதினார்கள். உடல் நலம் சீரமைய, இடர்ப்பாடுகள் வராமல் இருக்க, மந்திர உச்சாடனங்களும் அதை கேட்பதும் உதவின. முக்யமாக ரத்த அழுத்தம் சீர்படும் ( blood pressure)
6. திலகம். - நீரில்லா நெற்றி பாழ் என்று அந்த காலத்திலேயே சொன்னது ஏன்? நமது சிரசு, மண்டை பாகத்தில் அதிகப்படியாக நீர் உள்ளே தோல் வழியாக செல்லாமல் வெளியே இழுக்க இந்த விபூதி உதவுகிறது. அதனால் குளித்து விட்டு இதை குழைத்து பூசினார்கள். குளிக்கும்போது உள் சென்ற அதிக பட்ச நீரை இதற்கு வெளியே உறிஞ்சிக்கொள்ளும் சக்தி இருப்பதால் தான்.
7 குங்குமம் - தரித்துக்கொள்வதும் அர்த்தமுள்ளது. பல வசியங்களிலிருந்து ஒரு பெண்ணை இது காக்கிறது என்று உணர்ந்தார்கள். ( hypnotism).
8. ஹஸ்த கிராஸம் -- சுத்தமான கையினால் உணவை உண்பது. கையால் உண்ணும்போது, மனம், உடம்பு, ஆத்மா மூன்றுமே ஒன்று படுகிறது. இது அநாகரிகம் என்று வெள்ளைக்காரர்கள் நினைத்து நம்மவர்களும் ஒரு உலோகத்தின் மூலம் உண்கிறார்கள் (spoon , knife, fork). காரணம் தெரியாமலே அவர்களை செம்மறி யாடுகளாக பின் பற்றுகிறோம்.
9. பத்ரம் - இலையில் சாப்பிடுவது. இயற்கையோடு ஒட்டிய வாழ்வில் இது ஒரு அங்கம். இந்த விஞ்ஞான உலகில் இந்த பழக்கம் செத்துக்கொண்டு வருகிறது. இலையை சுத்த படுத்த எந்த ரசாயனமும் வேண்டாம். உணவு அதன் மீது பரிமாறும்போது அந்த இலையின் உள்ளடங்கிய பல சக்திகள் உணவோடு கலந்து நமக்கு நன்மைபுரிகிறதே, ஒரு உலோக தட்டு இதை செய்யுமா? ஒருவர் உண்ட இல்லை மற்றவர் உண்ணமுடியாது. இதுவே தட்டை உபயோகிப்பதால் பரவும் வியாதியை தடுக்கிறதே புரிகிறதா? வாழை இலை, பலாச இலை பல சக்திகள் கொண்டவை.
10. கர்ண சேதனம் - குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு அத்யவாசிய சடங்காக வைத்தார்களே ஏன்? அதுவும் ஒரு வயதுக்குள் - இது தற்போதைய ஆகுபன்க்ச்சர் வைத்தியம் தான். காதின் கீழ் மடல் சதையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் குத்து வதற்கு? அங்கு தான் ஆஸ்த்மா வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது.
என்னடா கோபு நெளிகிறாய்? கஷ்டமாக இருக்கிறதா கேட்க?
இல்லை தாத்தா. எழுந்து போய் பேனா கொண்டு வரணும் இதை எழுதிக் கொண்டு பள்ளிக்கூடத்தில் என் நண்பர்களிடமும் சொல்லவேண்டாமா. இன்னும் சொல்லு தாத்தா.
இப்போதைக்கு இதைப் புரிந்துகொள். மீதியை அப்பறமாக சொல்கிறேன்.
No comments:
Post a Comment