மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி
நினைவு கூர்ந்தவர் : ஸ்ரீமடம் பாலு
அந்தக் கிராமத்திலிருந்த தர்மராஜா கோயிலில் திருவிழா. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
பெரியவா அந்தக் கிராமத்தில் முகாம்.
கோயில் பூசாரி பெரியவாளிடம் வந்தார் “சாமி, கோயிலுக்கு வரணும்” என்று வேண்டிக் கொண்டார்.
ஆனால், அந்தக் கிராம அந்தணர் தெருவிலுள்ளோர் தர்மராஜா கோயிலுக்குப் போகும் வழக்கமில்லை. திருவிழாவுக்கு நன்கொடை கொடுப்பார்கள்.
தர்மராஜா சிலை பார்ப்பதற்கு வெகு உக்ரமாக இருக்கும். மீசை, சூலம், உலக்கை, பாசக்கயிறு, தண்டம் போன்ற ஆயுதங்களுடன் பயங்கரமாகத் தோற்றமளிக்கும்.
மாலை ஐந்து மணிக்குப் பெரியவா தர்மராஜா கோயிலுக்குப் புறப்பட்டுவிட்டார்கள். தேங்காய், பழம், புஷ்பம், வெற்றிலை-பாக்கு, மாலை, வஸ்திரம், ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக. வேறு வழியில்லாமல் மற்றவர்களும் உடன் சென்றார்கள்.
பூசாரிக்கும் மற்ற மக்களுக்கும் ஆனந்தம் தாங்கவில்லை.
பெரியவா அந்தணர்களிடம் சொன்னார் : “உங்கள் எல்லோருக்கும் ஸ்வாமியிடமும் பாபத்திடமும் பயம் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தர்மராஜா கோயில் கட்டியிருக்கிறார்கள். அதனால், கிராம தேவதை கோயிலுக்குப் போவது தவறு இல்லை”.
பெரியவா இப்படிச் சொன்னபிறகு, மாதாமாதம் தர்மராஜாவுக்கு ராஜோபசாரம்தான்!
கிராம தேவதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது
மஹா பெரியவாளின் தனிப்பெரும் இயல்பு!

No comments:
Post a Comment