Sunday, November 23, 2014

குரு உபதேசம்


மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமல் இருப்பதற்காக எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும்.
உறுதியான சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.
தியானம் செய்யுங்கள். மற்றவர்களையும் செய்யச் சொல்லுங்கள்.
செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக் கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படிச் சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.
ஐசுவரியம் வந்தாலும், தர்த்திரியம் வந்தாலும் கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதி வந்தாலும் எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.
வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகீக நாகரீகத்தை விட்டுவிட்டு தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை.
பணத்துக்காக பறக்காத போது பகவத் ஸ்மரணைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்.
வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.
காலை ஸந்தி, மத்தியானவேளை, மாலை ஸந்தி என்று ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்துக் காலத்திலும் ஜபம் பண்ண வேண்டும். இந்த மூன்று காலமும் சாந்தம் உண்டாகிற காலம்.
காயத்ரீ என்றால் "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது" என்பது அர்த்தம்.
கானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவதில்லை. பிரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பது என்று அர்த்தம்.
யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜெபம் பண்ணுகிறார்களோ, அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும்.

No comments:

Post a Comment