"பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு"
நன்றி-பால ஹனுமான்.
அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன்காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், "வரும் 12ம்தேதி புறப்படறோம்.பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்" என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.
பெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மவுனத்தில் ஆழ்ந்தார். "பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு" என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேஷன் எப்படி செய்வது? என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப்பயணத்தை ஒத்தி வைத்தார்.
மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால்காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றிய காஞ்சிப்பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.
ஸ்தோத்ரத்தைவிட, புகழ்ச்சியைவிட வசவு தான் எப்போதுமே ஒருவனுக்கு நல்லது செய்யும். புகழ்ச்சி, கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்ம ஹானிக்குத்தான் வழி செய்கிறது. "சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்ற பேர்; அழ அழச் சொல்கிறவர் உற்ற பேர்" என்று சொல்வதுண்டு
No comments:
Post a Comment