Monday, November 10, 2014

தெரிந்துக் கொள்வோம்

      தாய்க்கு ஐந்து பெயர்கள்  : ---

 ஜநநீ----  தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதற்குக் கருவாக 

 உயிர்  கொடுப்பவள்.

       மாதா :--  கருவைத் தன்னுள்அடக்கி வைத்து அடைகாப்பவள்.

   ஸவித்ரி :--  கருவாகத் தாங்கியதை வெளியில் வளர்க்கத் 

 தருணம் வந்ததும் வெளியிடுபவள்.

     தாத்ரீ :---  சிசுவைப்  போஷித்து வளர்ப்பவள்.

.................................................................................

     அம்பா:---  ஆபத்து வேளையில் தானே வந்து காப்பவள்.
           திருமால் படுக்கை எட்டு வகை

1.       வடபத்ர சயனம்       -திருவில்லிபுத்தூர்

2.       வீர சயனம்           திரு இந்தளூர்

3.       தல சயனம்          திருக்கடல்மல்லை

4.       உத்தான சயனம      திருக்குடந்தை

5.       தர்ப்ப சயனம்         திருப்புல்லாணி

6.       புஜங்க சயனம் --     திருவரங்கம், திருக்கோட்டியூர்

7.       போக சயனம்        தில்லை திருச் சித்திரகூடம்

8.       மாணிக சயனம்       திருநீர்மலை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------                 வியாசர் துதி

வ்யாசம் வஸிஷ்ட நப்தாரம் சக்தோ பௌத்ரம் அகல்மஷம்!
பராசராத்மஜம் வந்தே சுகநாதம் தபோநிதிம்  
என்ன அர்த்தம் தெரியுமா?-----

வஸிஷ்டருக்குக் கொள்ளுப் பேரரரும், சக்தி மகரிஷிக்குப் பேரரும் , பராசரருக்குப் புத்திரரும் , சுகருக்குத் தந்தையும் , தவச் செல்வரும் தோஷமற்றவருமான வியாசரை வணங்குகிறேன் . ------
-
                  மாதங்களின் வடமொழிப்  பெயர்கள்
சைத்ரம்                                   சித்திரை
வைசாகம்                                 வைகாசி
ஜியேஷ்டகம்                               ஆனி
ஆஷாடீ                                   ஆடி
ச்ராவணி                                  ஆவணி
ப்ரௌஷ்டபதீ                              புரட்டாசி
ஆஸ்வயுஜம்                              ஐப்பசி
கார்த்திகம்                                 கார்த்திகை
மார்க்கசீரிஷம்                             மார்கழி
தைஷீ                                    தை
மாசம்                                     மாசி
பால்குநம்                                 பங்குனி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
                    மனிதனுக்கு  இரண்டு

1.    வருவதும் போவதும் இரண்டு       இன்பமும் துன்பமும்

2.    வந்தால் போகாதது இரண்டு     புகழும், பழியும்

3.    போனால் வராதது இரண்டு    மானமும், உயிரும்

4.    தானாக வருவது இரண்டு     இளமையும்,முதுமையும்

5.    உடன் வருவது இரண்டு      புண்ணியமும் , பாவமும்

6.  அடக்க முடியாதது இரண்டு    ஆசையும் , துக்கமும்

7.  தவிர்க்கமுடியாதது இரண்டு    பசியும் ,தாகமும்

8.    பிரிக்க முடியாதது இரண்டு    பந்தமும் , பாசமும்

9.       இழிவைத் தருவது இரண்டு    பொறாமையும் , கோபமும்

10.    அனைவருக்கும் சமமாவது இரண்டு  பிறப்பும் , இறப்பும்
------------------------------------------------------------------------------------------------------------------------------                         
   இராமாயணத்தில் நவ பக்தி  
சிரவணம்                   அனுமான் 

கீர்த்தனம்                   வால்மீகி

ஸ்மரணம்                  சீதை

பாதசேவனம்                பரதன்

அர்ச்சனம்                        சபரி

வந்தனம்                   விபீடணன்

தாஸ்யம்                   லக்ஷ்மணன்

ஸக்யம்                    சுக்ரீவன்

ஆத்ம நிவேதனம்           ஜடாயு  

No comments:

Post a Comment