தாத்தாவும் பேரனும்
''தாத்தா நீ எங்க பள்ளிக்கூடத்திலே சொன்ன கதையெல்லாம் எல்லோருக்கும் பிடித்து அடிக்கடி நீ அங்கே வந்து சொல்லணும் என்கிறார்களே.''
''அதற்கென்ன என்னால் முடிந்த மட்டும் வருகிறேன். தெரிந்ததை சொல்கிறேன். முடியாதபோது யாராவது ஒரு இன்னொரு தாத்தாவை என் கிருஷ்ணன் தக்க நேரத்தில் சொல்ல வந்தால் கதை தொடரும்''
எங்க பரிமளா டீச்சர் உன்கிட்டே கேக்க சொல்லி சில கேள்வி எழுதி கொடுத்த்ருக்கா. இந்த இதுக்கு புரியற மாதிரி பதில் சொல்லு''
'' கோபு, துளிக்கூட கிடையாது. அணு என்கிறதை நம்மால் கண்ணால் கூட காண முடியாதே சக்தியை ஆக்கத்திலும் பார்க்கிறோம் அழிவிலும் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் படிக்கிறாயே ஹிரோஷிமா நாகசாகி அழிவு, அதுவும் அணுவினால் தான். உலக சக்தியான பிரபஞ்ச நுணுக்கங்களையும் தன்னுள் கொண்டு ஆக்க வேலை புரிவதும் அணு சக்தி தான்.
பெரிய யானை கூட ஓர் வண்டு காதில்நுழைந்தால் அதற்கு மரணம் நிச்சயமாம். வாமனன் சிறியவன் தானே அவன் கால் அளவில் முன்று அடி மண் என்பது என்ன ஒரு பெரிய விஷயமா என்று அலட்சியமாக மகாபலி கொடுத்த வரம் மூன்றாம் அடிக்கு இடம் இல்லாமல் அவனையே அழுத்தி அவன் மறைந்தான் அல்லவா. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பது இதால் தான்.
ஆதி சங்கரர் சொல்வது ஞாபகம் இருக்கிறதா? நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.''
''தாத்தா எனக்கு அடிக்கடி மனம் பற்றி சொல். அது கேட்க விருப்பத்தை தருகிறது. என்னை யோசிக்க வைக்கிறது. ''

''நான் என்ன புதிதாக கண்டுபிடித்தா சொல்லப்போகிறேன். யாராவது சொன்னதைத்தான் எனக்கு சொல்லத்தெரியும். நான் மேதாவி அல்லவே. ஆதி சங்கரர் என்ன சொல்கிறார் என்றே பார்ப்போம்.
''அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழி முறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் சக்தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்த ஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.''
''தாத்தா நமக்கு எல்லோருக்கும் பயம் எதைப்பற்றியாவது, எதிலாவது இருக்கிறதே. பயமில்லாதவர் யார்?''

''மரணத்தை எவன் ஒரு சாதாரண எறும்பு கடிக்கிற சமாச்சாரமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அடைந்தவனோ அவனுக்கு எதிலும் எவரிடமும் பயம் இல்லை. அதேபோல் நேர்மையும், நியாயமும் பின்பற்றி எவன் வாழ்கிறானோ அவன் யாரிடமும் பயம் கொள்ள மாட்டான். பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவன் எதைக்கண்டும் பயப்படமாட்டான்.
இதைப்பற்றியும் ஆதி சங்கரர் சொன்னதையே தான் சொல்லப்போகிறேன் கோபு
* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் . ஆனால் அவரவர் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.
* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலை பெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.
* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.
* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.
* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
பொருள் பறந்து போய்விடும்
தாத்தா தேங்க்ஸ். எளிமையாக சொல்லிவிட்டாய். எனக்கே கொஞ்சம் புரிகிறது. எங்க டீச்சருக்கு வெகு நன்றாகவே புரியும்.
No comments:
Post a Comment