தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடைவச்சிப் பொழைச்சிக்கோ..!
...................................................................
"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."
"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
"ஆமா! உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"
/..............................................................................................
ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர்சொன்னீங்க?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர்சொன்னீங்க?
/............................................................................
காதலி ஜோஸ் ஆலுக்காஸ் மாதிரி
"இது தங்கமான உறவு"
"இது தங்கமான உறவு"
மனைவி லலிதா ஜீவல்லர்ஸ் மாதிரி
"சொன்னத கேட்டா ஆஹா இல்லாட்டி சுவாஹா"
"சொன்னத கேட்டா ஆஹா இல்லாட்டி சுவாஹா"
/..............................................................................
நர்ஸ் : டாக்டர்...அந்த பேஷண்ட் தீவிர ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*
டாக்டர் : எப்படிச் சொல்றே?
நர்ஸ் : நான் ஊசி போட்டதும்.... என் வலி ...தனி வலின்னு சொல்றாரு.........
.................................................................................................
டாக்டர் : எப்படிச் சொல்றே?
நர்ஸ் : நான் ஊசி போட்டதும்.... என் வலி ...தனி வலின்னு சொல்றாரு.........
.................................................................................................
அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."
.........................................................................................
கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டிலே வைக்கப்பட்டு இருந்தது. கடைக்கு வந்த சிறுவன், நாலணாவிற்குப் பல்லி மிட்டாய் என்று கேட்டான்.
கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் பாட்டிலைக் கவனமாகக் கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி மிட்டாய் தந்தார். மீண்டும் ஏணியில் ஏறிப் பழைய இடத்தில் பாட்டிலை வைத்தார்.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன், நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரர் வழக்கம் போல ஏறி அவனுக்கு மிட்டாய் கொடுத்து விட்டுப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்தார்.
மூன்றாவதாக வந்த பையன் நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி பாட்டிலைக் கீழே கொண்டு வந்தார். மீண்டும் பாட்டிலை மேலே வைக்கவில்லை.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான். அவனிடம் கடைக்காரர், உனக்கும் நாலணா பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.
இல்லை என்றான் சிறுவன். கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய்ப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்து விட்டுக் கீழே இறங்கினார்.
பிறகு பையனைப் பார்த்து, இப்ப உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்குப் பத்துப் பைசாவுக்குப் பல்லி மிட்டாய் வேண்டும் என்றான் அவன்.—
No comments:
Post a Comment