Friday, October 10, 2014

-- .பகவானை நினைக்கணும். ஆனா திட்டரது ரொம்பத் தப்பு


ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே என்ற புத்தகத்திலிருந்து…
“லோகத்துலே எல்லாம் கிடைச்சு சௌகரியமாயிருக்கிறவனும் கடவுளை துவேஷிக்கிறான். எப்படி? நல்ல பத்தினி; குழந்தைகள்; சம்சாரம் பண்றதுக்குப் போதுமான வருமானம். வேறென்ன வேணும்? வேறே வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தான். தள்ளுபடி ஆயிடுத்து. இப்படிப் பல முறை நடந்திருக்கலாம். அதுக்காக பகவானுக்குக் கண் இல்லே.. கருணை இல்லேன்னு திட்டலாமா?
ஒரு பட்டணத்துலே பெரிய ஆஸ்பத்திரி. அங்கே உடம்பெல்லாம் வெந்து சுத்திண்டு இருக்கிற ஒரு நோயாளியைக் கொண்டு வரா. இன்னொரு வண்டி வருது. அதிலே மாடிப் படியிலேயிருந்து தவறி விழுந்து நினைவு தப்பிப் போன ஆள் வரார். அடுத்தபடியா விபத்து நடந்து இரத்தம் சொட்ட ஒருத்தரை கொண்டுவரா. இதுலே காய்ச்சல், தலைவலி போன்ற சின்ன உபாதைகளோடு வரவா கிட்டே சின்ன டாக்டர்தான் நிப்பா. அதுக்காக, வைத்திய சாலையிலே அலட்சியம் பண்றான்னு அர்த்தம் பண்ணிக்கலாமா?
ஒரு ஊரிலே உள்ள ஒரு சின்ன ஆஸ்பத்திரியிலேயே இப்படீன்னா, இந்த உலகம் எத்தனை பெரிசு. இதிலே அவசரமா கவனிக்க வேண்டியவா யாருன்னு பகவானுக்குத் தெரியாதா? உன்னைவிட அவசியமானவாளுக்காக பகவான் ஓடிக்கொண்டிருக்கார்.
முன்னேறணும்னு நெனைக்கறது தப்பில்லே.. முயற்சி பண்ணனும்; பகவானை நினைக்கணும். ஆனா திட்டரது ரொம்பத் தப்பு”

No comments:

Post a Comment