Saturday, October 11, 2014

கடவுள் நம்பிக்கை நமக்கு எப்போது வருகிறது ?

''கடவுள்  நம்பிக்கை  நமக்கு  எப்போது  தாத்தா  வருகிறது?''

'' கோபு  நம்மால்  முடிந்தவற்றை  நாம்  செய்யும்போது  கடவுளை பற்றி  அதிகம்  சிந்திப்பதில்லை.  இது  பலருடைய  அன்றாட  வாழ்க்கையில்  நிகழ்வது.  முடியாதோ  என்ற  பயம்  தோன்றும்போது,  அது  நன்றாக  முடிய வேண்டுமே  என்ற  கவலை  மனதை  அரிக்கும்போது தனக்கும்  மீறிய  சக்தி ஒன்றின் துணை  நாடுகிறோம்.  அந்த  அதீத  சக்தி தான்  கடவுள்.  எனக்கு  இந்த  காரியம்  நன்றாக  நடக்க வேண்டும்  என்று  வேண்டுகிறான்.  ''

''அதால்  அந்த  காரியம்  வெற்றிகரமாக  நடக்கிறதா, நடக்குமா   தாத்தா?''

''வெகு  அழகான  கேள்விடா  பையா.   ஒரு காரியம்  வெற்றிபெற  சாத்தியக்கூறுகள்  யாவை.  அதை  செய்ய, நிறைவேற்ற  நாம்  போடும்  திட்டம்,  நேரம், காலம்,  திறமை,  சந்தர்ப்பம், தன்னம்பிக்கை,  வெளியிலிருந்து  கிடைக்கும்  உதவி  இது தானே.''

முதலில்  நமது மனதில் அந்த  காரியத்தைப்பற்றி  சிந்திக்கிறோம். அதில்  நமது பங்கு   என்னவோ  அதை சீராக  முதலில்  திட்டமிட்டு  உபயோகித்து,  பிறகு  வெளியுதவி  நாடி,  நேரம்  காலம்  வீணாகாமல்,  அதால்  நஷ்டம்  நேராமல்,  தடை இன்றி  செவ்வனே நடக்க  உண்மையாக  முயல்கிறோம்.  இப்படி   இயங்கும அந்த  காரியத்தில்   எதிர்பாராத தடைகள், ஏதும்  நேராமல்  குறித்த காலத்தில்,  எண்ணிய  படியே  அது  முடிய  நமக்கும்  மீறிய  அந்த  கண்ணுக்குத் தெரியாத  சக்தியை வணங்குகிறோம்,  வேண்டுகிறோம்.  

அவ்வாறு முடிந்த காரியத்தில்  நமது முயற்சியால்  தான்  இது  நடந்தது  என்று  நிறுத்திக்கொள்வது  மனிதனின்  அகம்பாவம்.  நமக்கும்  மேலே இயங்குகின்ற  எதோ ஒரு சக்தியின்  துணையால்  என்  முயற்சி  வெற்றிபெற்றது என்று எண்ணுபவன்  ஆணவம் இன்றி  தோற்றமளிக்கிறான்.  இந்த  ஆணவமலம் இல்லாதவனை  கடவுள் அருள் பெற்றவன் என்று சொல்கிறோம்.  
மதிக்கிறோம்.   இது யாவர்க்கும்  எளிது. அவன்  அன்புடையவனாக  மிளிர்வதற்கும்  காரணம்  அந்த  அதீத  சக்தி  யார் மூலமாகவோ தனக்கு  வெளியிலிருந்து வந்து  உதவியது என்று  உணர்வதால்.    எல்லாம்  ''கடவுள் சித்தம்''  என்று   கூறுவதன் அர்த்தமும்  இது தான்.  ''நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்  தெய்வம்  ஏதுமில்லை  ''  பாட்டு  எனக்கு   பிடிப்பதன் காரணம் கூட  அதன்  அழுத்தமான  பொருள்,  பி. பீ. ஸ்ரீநிவாஸின்   தேன்  குரல்,  பாட்டின்  இனிய மெட்டு.  ''
 ''தாத்தா  பிரமாதம்.''    
 'கடவுளை  நினைப்பது பற்றி  ஒரு  கதை சொல்லட்டுமா ?''
 ''அதுக்கு தானே   தாத்தா  உங்க  கிட்டே   வரோம் நாங்கள்  எல்லாம்'' கேளு: 
 தன் வாழ்நாளில்  நாற்பது ஆண்டுக்கு மேல் உபதேசத்திலும் கீதை ராமாயணம்பாகவத  புராணம்  சொன்ன  
சுப்பு சாஸ்த்ரி  திடீரென்றுகாலமானார். சுவர்க்கத்தை  அடைந்தார். சுவர்க்கத்தின்  வாசலில் அவர்  ஒருக்யூவில் நிற்கவைக்கப்பட்டார்.   அவருக்கு முன்னால் ஒரு காக்கி உடை  அணிந்துகருப்பு கண்ணாடி,  பீடி வாசனைகலைந்ததலை முடிசாராய நெடியோடு ஒருஆசாமி.  

''இந்த ஆளுக்கு  சுவர்க்கத்தில்  என்ன வேலை?''சாஸ்த்ரி 
மண்டையைகுடைந்து கொண்டார். சுவர்க்கத்தின் வாசலில்  சித்திரபுத்திரன் நின்றுகொண்டு வரிசையாகஒவ்வொருவரின்  வாழ்க்கை  கணக்கை (பாவம் + புண்ணியம்) பார்த்து  அதற்கேற்ப அவர்களின்  சுவர்க்க அந்தஸ்தை நிர்ணயித்து கொண்டிருந்தான்.  காகி சட்டை ஆசாமி வரிசையில்  முன்னேறிசிதிரபுத்ரனை நெருங்கியபோது கணக்குபார்த்து விட்டு,  ஒரு  பட்டுசால்வைபோர்த்தி ரோஜா மாலையுடன்  அவனை வரவேற்று சுவர்க்கத்தின்  பிரதானவாயிலுக்கு அனுப்பினான்.  
 அடுத்தது சுப்பு சாஸ்த்ரி.   சித்திரபுத்திரன்   அவர்   கணக்கை பார்த்து  அவருக்கு  ஒரு காட்டன்  சால்வை மட்டும்   அணிவித்துஜவந்தி பூ மாலையிட்டு   சுவர்க்கத்தின்  இரண்டாம் வாசலுக்கு  அனுப்பினான்.  
 சாஸ்திரிக்கு ஆச்சர்யம் ஒருபுறம்  கோபம்  ஒருபுறம்.   என்னஅக்கிரமம்இது.40 வருடத்துக்கு மேல் ஆன்மிக பணி செய்தஎன்னைவிட  அந்த  காக்கி சட்டை  மனிதர்எவ்விதத்தில் உயர்ந்தவர் என தெரிந்துகொள்ளலாமா?  என  சித்திரபுத்ரனைவினவினார்.  

சித்ராபுத்திரன்அமைதியாக "சாஸ்திரிகளே அந்த மனிதர்  30வருடங்களாக அண்ணாசாலையில்பல்லவன் பஸ்  ஓட்டியவர். நீங்கள் 40வருடங்கள்  பிரசங்கம்   உபந்நியாசம்  செய்தவர்.   இத்தனை  வருஷ  உங்கள் உபந்நியாசம் கேட்டு தூங்கியவர்கள் தான் அதிகம்.  அவர்ஒவ்வொரு முறையும்  பஸ் ஓட்டும்போதுஅனைத்து பிரயாணிகளும்  உயிரைகையில் பிடித்துகொண்டு  கடவுளே  இந்த  ஆள்   ஓட்டும்  பஸ்  ஜாக்ரதையா  போய்  சேரவேண்டுமே   நாங்க  ஜாக்ரதையாக அடி ஏதும் படாமல் முழுசாக இறங்கணுமே, காப்பாற்று ''எனவேண்டிக்கொண்டது  ரொம்ப  அதிகம். 

ஆகவேஉங்களைவிடநிறைய பேரைகடவுளை நினைக்க பண்ணியதால் அவருக்கு மேல் பதவி."என்றுசித்திரபுத்திரன் கணக்கு பார்த்துசொன்னான். 


No comments:

Post a Comment