பக்தர்களுக்கு ஒரு யோசனை. பூஜை அலமாரியில்
தெய்வங்கள் மூச்சுவிடத் திணறுகிற அளவு
அவைகளின் திருவுருவங்களை அடைத்து
வைக்கிறோம்.
பூ விற்கிற விலையில் (முழம் இருபது ரூபாய்)
அனைத்துத் தெய்வங்களுக்கும் பூவை சமர்ப்பிக்க
முடிவதில்லை. வருத்தப்பட வேண்டாம்.
''தினமும் ஏதாவது ஒரு தெய்வத்தைத்
தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் எல்லாப் பூவையும்
போடுவது என்று ஒரு முறைவைத்துக்கொண்டால்
நல்லது'' என்கிறான் நண்பன் நாராயணன்.
அவன் ஒரு சிறிய பித்தளைத் தட்டில் தினமும்
ஏதாவது ஒரு சாமியை மட்டும் உட்கார வைத்து
எல்லாப் பூவையும அதற்கே போட்டு மனத் திருப்தி
அடைகிறான்.
நாளைக்கு இன்னார், அடுத்த நாளைக்கு இன்னார்
என்று கணக்கு வைத்துக்கொண்டு தெய்வ
உருவங்களுக்கு பூ போட்டு மகிழ்கிறான்.
''இத்தகைய வழிபாடு ஓரளவு மனத்தை
சமாதானப்படுத்துகிறது'' என்கிறான் நாராயணன்.
No comments:
Post a Comment