Wednesday, October 15, 2014

'' அர்ச்சுனா !...கோபம் வேண்டாம் .

'' நீங்கள் எப்போதும் கர்ணனையே புகழ்கிறீர்கள் !. 

நாங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு தர்மமாக

 தெரியவில்லையா' கிருஷ்ணனை கோபித்தான் 

அர்ச்சுனன் :

'' அர்ச்சுனா !...கோபம் வேண்டாம் ..., ஒரு


போட்டிவைக்கிறேன்.... .அதில் தெரிந்து விடும் 

யாருடைய கொடை பெரிதென்று''

.அடுத்தகணம் .இரு தங்க மலைகளைஉண்டாக்கிய 


கிருஷ்ணன் .அர்ச்சுனனிடம்,

'' இதோ பார் அர்ச்சுனா !...ஒரு நாள் பொழுதில் 


இதைமுழுவதும் நீ தானம் செய்ய வேண்டும்' 

என்று கூறினார் ;

.'' ஓ ....இதென்ன பிரமாதம் ....''


அலட்சியத்துடன் கூறிய அர்ச்சுனன் தங்க 


மலையிலிருந்து தங்கத்தை பாளம் பாளமாக 

வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.!

ஊஹூம் .... மலையின் அளவு குறைந்தபாடில்லை !
.....பொழுதும் முடிந்து விட்டது !


இனி கர்ணனின் முறை !


.நம்மால் முடியாதது கர்ணனாலும் முடியாது என்ற 


இறுமாப்புடன் காத்திருந்தான் அர்ச்சுனன் !

.அடுத்த நாளும் அதே தங்க மலைகளை 


உண்டாக்கினார் கிருஷ்ணன்... .கர்ணன் வந்தான் ..

. கணமும் தாமதியாமல் , .இரண்டு 

வழிப்போக்கர்களை அழைத்து, ஆளுக்கொரு 

மலையென கொடுத்தான் !!

இப்போது . கிருஷ்ணன் அர்த்தபுஷ்டியுடன் 


அர்ச்சுனனை பார்க்க . அந்த பார்வையின் வீரியம் 

தாங்காமல் ..குற்ற உணர்ச்சியில் தலை 

குனிந்தான் 

அர்ச்சுனன் !,

No comments:

Post a Comment