Monday, October 13, 2014

"யோபம் புஷ்பம் வேத...

"யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் பிரஜாவான் பசுமான்
பவதி!"

இந்த மந்திரத்தை நாம் எல்லோரும் கேட்டிருப்போம், இல்லையா?
பொதுவாக "மந்திர புஷ்பம்" என்றறியப்படும் இது, யசுர் வேதத்தின் "தைத்திரிய ஆரணியகம்" பகுதியில் வருகிறது. இந்த மந்திரத்தின் பொருள் வேறொன்றும் இல்லை, "நீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம்" என்பதுதான்!

எல்லாப் பூசைகளின் இறுதியிலும் "தண்ணீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம். இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்." என்று சொல்லப்படவேண்டியது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை, நீரின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவும், "நீரின்றி அமையாது உலகு" என்ற பாரதப் பண்பாட்டை அனைவருக்கும் வலியுறுத்துவதற்காகவும் கூட இருக்கலாம்.

இந்த யூடியூப் இழையில் சென்று ஆங்கில அர்த்தத்துடன் மந்திர புஷ்பத்தை கேளுங்கள்!: http://www.youtube.com/watch?v=hKE38CBc3rs

தமிழில் சுருக்கமாக இங்கே:

நீர்ப் பூக்கள் கூறும் உண்மையை அறிக. அதன்மூலம் பூக்கள், குழந்தைகள், பசுக்களின் அதிபதி ஆகுக! சந்திரன் நீரில் பூவாகிறது. இதுவே உண்மை. இதை அறிந்தவன் தன்னைத் தானே அறிகிறான்.

நெருப்பே நீரின் ஆதாரம். நீரே நெருப்பின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

காற்றே நீரின் ஆதாரம். நீரே காற்றின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

சுட்டெரிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். நீரே சுட்டெரிக்கும் சூரியனின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

சந்திரனே நீருக்கு ஆதாரம், நீரே சந்திரனுக்கு ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

விண்மீன்களே நீரின் ஆதாரம். நீரே விண்மீன்களின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

முகில்களே நீரின் ஆதாரம். நீரே முகில்களின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

மாரிகாலமே நீரின் ஆதாரம். நீரே மாரிகாலத்தின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான்.

No comments:

Post a Comment