Saturday, October 18, 2014

முள்ளு முறுக்கு

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 2 கப்

பயத்தம் பருப்பு – 3/4 கப்


கடலைப் பருப்பு – 1/4 கப்


எள் – 1 டீஸ்பூன்


உப்பு

செய்முறை:
அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக்

கொள்ளவும்.
பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து,

நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2

அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய

முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு,

இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து

செய்யவும்.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப்

பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து,

 சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு

முறுக்கு செய்யலாம்.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து

முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக

லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக்

கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.
நன்றி ஜெய்ஶ்ரீ.

No comments:

Post a Comment