Wednesday, October 29, 2014

‘உண்பவன் பரமன்’

 ‘உண்பவன் பரமன்என்ற கருத்தின் மூலமாக உண்ணும் செயலைச் செய்பவனாகவும், உணவின் சுவை அதனால் கிடைக்கும் சக்தி ஆகிய இரண்டையும்அனுபவிப்பவனாகவும் இருப்பது பரமனே என்கிறது வேதம்.  நானே பரமன்என்பதால் இதில் புதிதான கருத்து  ஏதுமில்லை என்பது  போலத் தோன்றும்அளிக்கும் .. ஆனால், ‘செய்பவன்  மற்றும்  அனுபவிப்பவன்என்ற  இந்தக்  கருத்தை ஆராய்வதன் மூலம், ‘நான் பரமன்என்ற உரிமையை நிலைநாட்ட நமக்குத் தேவையானபல உண்மைகளைக்  கீழ்க்கண்டவற்றை நோக்கினால் நாம் அறியலாம் .


நான் பரமன்என்பதை உணராமல் நாம் நம்மை, இந்த அழியக்கூடிய உடலாகவும் மாறக்கூடிய மனமாகவும்  நினைத்துக் கொண்டுள்ளோம். இந்த அறியாமையேநமது துன்பத்துக்கு எல்லாம் காரணம். அறியாமையை நீக்க அறிவை அடைவது ஒன்றே வழி. அறிவு என்பது தானாக நம் மனதில் தோன்றாது. வேதத்தில் உள்ள இந்தஉண்மைகளைத் தகுந்த ஆசிரியரின் வாய்மொழியாகக் கேட்டு ஆராய்ந்து அறிவைப்பெற வேண்டும். நமது மனதைப்பற்றியும் அதன் செயல்களைப்பற்றியும்விளக்கிய பின்னர் வேதம் நமது உடல் பற்றிய உண்மைகளைத் தருகிறது.

மூன்று உடல்கள்

உடலியல் அறிஞர்கள் நமது உடலைத் தசை மண்டலம், எலும்புக்கூடு என்று பல்வேறு பாகங்களாகப் பிரித்து  அதன் செயல்பாடுகளை ஆராய்கிறார்கள். அதுபோல,நம் செயல்பாடுகளைத் தெளிவாக நமக்கு உணர்த்த, வேதம் நம் உடலை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

காரண உடல் (Causal body):

நாம் செய்யும் எல்லாச் செயல்களும்  நமக்கு  மூன்று விதமான பயன்களைக் கொடுக்கின்றன. அவை பாவ புண்ணியம், விருப்பு வெறுப்பு, அறிவுஆகியவைகளே.  .பாவபுண்ணியங்களின் பயனை நாம் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த உலகில் பிறப்பதற்குக் காரணமே, நாம் செய்த நல்வினைகள், தீவினைகள்தான்.நமது பாவபுண்ணியங்களின் தொகுப்பை காரண உடல்என்று வேதம் கூறுகிறது.

நுண்ணிய உடல் (Subtle body):

நமது விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு இருக்கும் இடம்தான்  நுண்ணிய உடல்.  இதில் பத்தொன்பது பாகங்கள்  உள்ளன. அவைகளாவன ---  மனம், புத்தி, சித்தம்,அகங்காரம், ஐந்து பிராணன்கள் (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) ஐந்து புலன்கள் (மெய், வாய், நாக்கு [சுவை], கண், செவி, மூக்கு), மற்றும் ஐந்துகரணங்கள் (கை, கால், நாக்கு [பேச்சு], எருவாய், கருவாய்). இந்த உறுப்புக்கள்  நம்மிடம் இருக்கின்றன  என்று  நன்றாகத்  தெரிந்தாலும் எந்த வித அறிவியல்கருவிகளாலும் இவற்றை அறிய முடியாது. உதாரணமாக, நமக்குக் காது கேட்கிறதா இல்லையா என்பதையோ, மனது எப்படி இருக்கிறது என்பதையோ நம்மைத்தவிரவேறு யாராலும் துல்லியமாக அறியமுடியாது. ஆகவேதான், இந்த பத்தொன்பது உறுப்புகளால் ஆன உடலை  நுண்ணிய உடல்என்று வேதம் கூறுகிறது.நுண்மைத் திறன் கொண்டது.

பரு உடல் (Gross body or Physical body):

இது  நுண்ணிய உடலைத் தாங்கும்  வாகனம்.  நுண்ணிய உடலில் உள்ள  நமது மனம்  உள்ளிட்ட அனைத்து  உறுப்புகளும்  செயல்பட, நமக்கு  இந்தப் பரு உடல்அவசியமாகிறது. . அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது இந்த உடல் மட்டுமே.  நுண்ணிய உடலின்  செயல்பாடுகளை இந்தப்  பரு உடலின் செயல்பாடுகளாகவிஞ்ஞானம் தவறாகக் கருதிவருகிறது. பரு உடலை இயக்குவது நுண்ணிய உடல்தான். ஒரு காரோட்டி எப்படி காரைவிட மேலானவனோ, அதுபோலவே  நுண்ணியஉடல் பரு உடலை விட மேலானது. கார் என்பது உயிரோ அறிவோ இல்லாத ஜடப்பொருள். பரு உடலும் அதுபோலவே வெறும் ஜடப்பொருள்தான். நுண்ணியஉடலுக்குத்தான் அறிவும் செயல்படும் திறனும் இருக்கிறது.  நுண்ணிய உடலானது  பரு உடலில்  இருந்து  விலகுவதுதான்  மரணம்.

செயல்களும் செயல்களின் காரணமும்

பரு உடலைக் காப்பாற்றுவதற்காகவும் உணவின் சுவைக்காகவும் நாம் உணவு உண்ணும் செயலை மேற்கொள்கிறோம். இதைப் படிப்படியாக ஆராய்வதன் மூலம்நமது மூன்று உடல்களின் செயல்பாடு பற்றி நாம் இதுவரை அறியாத பல உண்மைகளை வேதம் நமக்குச் சொல்கிறது.

 உதாரணமாக, சாப்பிடுவதற்காகச் சமையல் செய்கிறோம். எதற்காகச் சாப்பிடுகிறோம்? மீண்டும் சமையல் செய்வதற்காக என்ற உண்மையை வேதம் நமக்குச்சுட்டிக்காட்டுகிறது.
செயல்படுவதன் காரணம் பலனை அனுபவிப்பதற்காகஎன்று நமக்குத் தெரியும். நாம் பலனை அனுபவிப்பதனால் தான் செயலில் ஈடுபடுகிறோம்என்ற இந்த புதியகருத்தை வேதம் தருகிறது. நாம் நமக்குச் செயல் செய்ய  அல்லது செய்யாமல் இருக்க முழுச் சுதந்திரம் இருப்பதாக  நினைத்துக் கொண்டுள்ளோம்.  இது தவறு. ஒருசெயலின் பலனை அனுபவிப்பதனால் நாம் எவ்வாறு ஒரு அடிமையைப் போல செயலில் தூண்டப்படுகிறோம்  என்பதை இப்பொழுது காணலாம் .

1. பரு உடலின் செயல்பாடு: 

பசி  என்ற உணர்வை  உடல்நம்  மனதுக்குத் தெரிவிக்கிறது. எந்த வகையான உணவை உண்டாலும்அப்போதைக்குப்  பசிஅடங்கிவிடும். உடல் எனக்கு இந்தக் குறிப்பிட்ட உணவுதான் வேண்டும் என்று எந்தவிதக் கோரிக்கையையும் முன்வைப்பதில்லை.

நமது உடலே உணவால் ஆனதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் உயிர்வாழ்வதற்காக  ஒன்றை ஒன்றுச்சார்ந்துள்ளன.  நிலம், நீர், காற்று, சூரிய ஒளி  ஆகியவற்றால் உணவு தயாரித்துக்கொள்ளும் தாவரங்கள், இந்த உணவுச் சக்கரத்தின் தொடக்கத்தில் உள்ளன .உடலுக்கும் உணவுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இவ்வாறு உணவால் வளரும் ஒரு உடல், மற்றொரு உடலுக்கு உணவாகிறது (எவ்வாறு புலி , கரடியைச் சாப்பிடுவது போலவும் , மனிதர்களாகிய நாம் விலங்கினகளை அழித்துச் சாப்பிடுவது போலவும்)  நமது உடலும் இதற்கு விதிவிலக்கல்ல.

அறிவியல் கண்ணோட்டத்தின்படி இந்தப் பேரண்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்களின் தொகுப்புதான்.  உயிருள்ளவை, உயிரற்றவை என்றபாகுபாடு அணுக்களின் நிலையில் கிடையாது. . ஒன்று மற்றொன்றாகத் தொடர்ந்து உருமாறும் மாற்றத்தின் ஒரு அங்கம்தான் நமது உடல் உணவைஉட்கொள்ளுவது.  அதாவது, ஒருவகை உணவை மற்றொரு வகை உணவாக மாற்றிக் கொள்வதுதான் பருவுடலின் செயல்பாடு.

2. புலன்களின் செயல்பாடு:

 சுவைத்து உணரும் நாக்கு நமது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப சிலவிதமான உணவு வகைகளைப் பிடித்தவை என்றும் வேறு சிலவற்றைப் பிடிக்காதவை என்றும்பாகுபாடு செய்துள்ளது. பிடித்தவற்றை வேண்டும் என்றும் பிடிக்காதவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து புலன்கள் பிடிவாதம் பிடிக்கின்றன. புலன்கள், மனதின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டியவை. ஆனால், பெரும்பாலான மனிதர்களின் புலன்கள் மனதைவிட பலம் வாய்ந்தவையாகச் செயல்படுகின்றன.அவை உலகில் உள்ளவைகளைக்  கண்டும், கேட்டும், தொட்டும், நுகர்ந்தும், சுவைத்தும் அறியப்படும் பல்வேறு பொருட்களினால் கவரப்பட்டு அவற்றை நாடிச்செல்லமனதுக்கு உத்தரவிட்டுக்கொண்டே இருக்கின்றன.

3. மனதின் செயல்பாடு:

மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்துக்கும் முதல் காரணம் நமது புலன்கள்தான் என்பதை நிச்சயமாகக் கூறலாம். . புலன்களின்  மூலம் அல்லாது  நமதுமனதில் வேறு எண்ணம் எதுவும் ஒருபோதும் தோன்றாது. நுகர்பொருட்களின்  தொடர்புகள்  அனைத்தையும் தவிர்த்து, நாம் தியானம் செய்ய அமர்ந்தால் நமதுமனதில் எண்ணங்கள் தோன்றுவது எப்படிஏற்கனவே புலன்கள் வழியாக உள்ளே  வந்து நமது சித்தத்தில் குடிகொண்டுள்ள எண்ணங்களே  அவை. ஆக, நமதுமனதில் எந்த எண்ணங்கள் இருக்கவேண்டும் என்பதை நாம் அனுபவிக்கும் நுகர்பொருட்கள்தான்  தீர்மானிக்கின்றன.

4. புத்தியின் செயல்பாடு:

 ‘இது பிடிக்கும், இது பிடிக்காதுஎன்று மனதில் நடமாடும் எண்ணங்களை, ‘இது நல்லது, இது தீயதுஎன்று அறிவுக்கு ஏற்ற விதத்தில் புத்தி பாகுபாடு செய்கிறது. எந்தசெயலில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானிப்பது புத்திதான்.. சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும்தான் வேண்டும்என்று அடம் பிடிக்கும் மனதைஅலட்சியப்படுத்திவிட்டு சப்பாத்தியையும் பச்சைக் காய்கறிகளையும் மட்டுமே உண்ணவேண்டும்என்று தீர்மானிக்கும் சக்தி புத்திக்குத்தான் இருக்கிறது.எண்ணங்களை விருப்பமாக மாற்றுவது புத்தி.

ஒருபக்கம் நுகர்பொருள்களின் சக்திக்கும், மறுபுறம் அறிவுக்கும் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில், வெற்றிபெற்றவரின் கட்டளைப் படி எந்தவித எண்ணங்கள்விருப்பமாக மாற்றப்படுகின்றன என்பது முடிவு செய்யப்படும். நமது எல்லாச் செயல்களும் நமது விருப்பத்தின் அடிப்படையிலேயே அமையும்.

செயல் பலன் செயல் என்ற சுழற்சி

ஆக, நமது செயல்கள், நமது புலன்களை நுகரும் பொருட்களோடு தொடர்புகொள்ள வைத்து நமக்கு அனுபவத்தைத் தருகின்றன. தொடர்ந்து ஏற்படும் அனுபவங்கள்,நமது புலன்களுக்கு மனதைக் கவரும் சக்தியைக் கொடுக்கின்றன. அனுபவத்தால் அறிவும் ஏற்படுகிறது. கவரும் சக்தியும் அறிவும் நமது விருப்புவெறுப்புக்களைதீர்மானிக்கின்றன. நமது விருப்புவெறுப்புகள் மீண்டும் நம்மை செயலில் ஈடுபடுத்துகின்றன.

உதாரணமாக, தினமும் காலையில் காபி குடிக்கும் செயலைச் செய்தால், அதனால் பெறும் அனுபவம், நாக்கின் சுவையை தீர்க்கமாகச் செய்கிறது. நாக்கு மனதிடம்காபி வேண்டும்என்று அடிக்கடி கட்டளையிடுகிறது. மனம் காபி குடிக்கும் செயலைச் செய்ய கை, கால் முதலிய உறுப்புகளுக்கு கட்டளை இடுகிறது. ஆக, காபிகுடிக்கும் செயலின் பலனாக மறுபடியும் காபி குடிக்கிறோம்.

இந்த சுழற்சியை தவிர்க்க முடியாது. ஆனால், அடிக்கடி காபி குடிப்பது நல்லது அல்ல என்ற அறிவு ஏற்பட்டால், இந்தச்சுழற்சியை உடல் நலத்துக்கு ஏற்ற விதத்தில்மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

செயல்களில் அறிவின் பங்கு

நாம் தினமும் தொடர்ந்து ஒரு மனிதருடன் சிறிது நேரம் செலவிட்டால் அவரை நமக்குப் பிடித்துப் போகிறது. அவருடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் நமதுமனதை ஆக்ரமிக்கத் தொடங்கும். அதன்பின், நம் அறிவுக்கு ஏற்றாற்போல அந்த எண்ணங்கள் விருப்பமாக மாற்றப்பட்டு நமது செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

நாம் பழகும் மனிதரும் நம்மைப் போலவே இருப்பவர் எனில், திரைப்படம், இசை, உணவு விடுதி போன்ற உலக விஷயங்களில் இருந்து நம்மால் குறைவில்லாதஇன்பத்தைப்பெற முடியும் என்ற நம்முடைய தவறான அறிவு மேலும் உறுதிப்படும். ஆனால், அவர் பரமரகசியத்தை உணர்ந்த குருவாக இருந்தால் இன்பம் என்பதுநுகரும் பொருட்களில் இல்லவே இல்லை என்பதை நம் அறிவுக்குப் புலப்படுத்தி அதனால் நம் வாழ்வைச் சரியான திசையில் செலுத்த உதவுவார்.

எனவே, அறிவாளிகளின் சேர்க்கையே வாழ்வைச் சரியான வழியில் நடத்திச் செல்ல உதவும். துன்பத்தை தவிர்த்து இன்பத்தை அடையும் சக்தி அவரவர் அறிவின்திறத்தை பொருத்தே அமையும். அறிவு நாம் ஈடுபடும் செயல்களைச் சார்ந்து இருக்கும். செயல்கள் நமது விருப்பங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

முடிவுரை

காரண உடலில் பதிவாகியுள்ள பாவ புண்ணியங்களை அனுபவிக்கத் தேவையான சூழல் ஏற்படுகிறது. செயல்கள் செய்வதால் கிடைக்கும் அறிவும், விருப்பு-வெறுப்புக்களும் நமது நுண்ணிய உடலில் சேமிக்கப்படுகின்றன. நுண்ணிய உடல், பரு உடலை செயலில் ஈடுபடுத்தும். மூன்று உடல்களின் இந்தத் தொடர்செயல்பாடுகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் பரமனே நான்.  இந்த அறிவைப்பெறும் வரை, செயலின் விளைவாகப்பெறப்படும் விருப்பம்,விருப்பத்தின் தூண்டுதலால் செய்யப்படும் செயல் என்றச் சக்கரத்தில் நாம் ஓயாமல் சுழன்று வருவோம். இந்த நிலையில் நமது புண்ணியத்தின் விளைவாகஎப்போது நமக்கு நல்ல ஆசிரியர் கிடைக்கிறாரோ, அப்போதுதான் பரமனை அறியும் முயற்சியில் நாம் ஈடுபடத் தொடங்குவோம். அதன்பின் சரியான அறிவைஅடையத் தேவையான செயல்களை விரும்பிச் செய்வோம்.

நன்றி ---வேதம்

உமா பாலசுப்ரமணியன்

No comments:

Post a Comment