Sunday, October 19, 2014

கடி ஜோக்ஸ் 110

புதுப் பழமொழிகள்

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்.

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன்

 செல்லுக்கு தானே வரும்

* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி 

தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் 

வருவான் முன்னே..
........................................................
இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....?
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் 
கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே
அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா....?

2. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ 
இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து 
மேல இருக்கு...?
3. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் 
போது No.ன்னு எழுதுறோம்..? Numberல 'O'ங்கிற 
எழுத்தே இல்லையே..?
4. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" 
எல்லாரும் சொல்றாங்களே… நாய் என்னைக்கு 
வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் 
ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா...?
5. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு 
விட முடியுமா...?
( கண்ணெல்லாம் வேர்க்குதா...? நோ 

வயலன்ஸ்...ஒன்லி சைலன்ஸ்...! )


மூணு காரணங்களால், மனைவியும் ஒரு 

திருக்குறள் தான்.

1. நிறைய அதிகாரம் இருப்பதால்...

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் 

இருப்பதால்....

3. இரண்டடியில் எல்லாவற்றையும் உணர 

வைப்பதால்....

No comments:

Post a Comment