Wednesday, September 17, 2014

எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

 .உமா பாலசுப்ர மணியன்

யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு. ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான். அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான். இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்தரகசியம் சித்திக்கும்.

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.
"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை" 
என்கிறார் இடைக்காட்டு சித்தர்.

எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்
உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து
என்கிறார் கடுவெளி சித்தர்.

"எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!"
என்கிறார் திருமூலர்.

ஆங்கில எண்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பழந் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களே எண்களை குறிக்க பயன் படுத்தப்பட்டன. இதில் எட்டு என்ற எண்ணைக் குறிக்க "" என்ற எழுத்தும் இரண்டு என்ற எண்ணைக் குறிக்க "" என்ற எழுத்தும் பயன் படுத்தப் பட்டது. இந்த  என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?

இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான். வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது.

இந்த அட்சரங்கள் பற்றியும், அதன் இயக்கம், தொழிற்பாட்டு முறைகள் பற்றி ஆத்ம சுத்தியுடன் தெளிவாக உணர்ந்து தெரிந்து கொள்வோருக்கு மட்டுமே ஞானம் சித்திக்கும். இதன் மகத்துவத்தின் பொருட்டே சித்தர்கள் இதனை மறைவாய் வைத்தனர்.
இத்தனை மகத்துவமான எட்டிரண்டை பூரணமாய் அறிந்து தெளிந்தோர் பெரியோர். அவர் வழி நிற்போருக்கு குறையேதுமில்லை.
உண்மையை உணர்வோம்.! தெளிவடைவோம்.!

No comments:

Post a Comment