Wednesday, September 17, 2014

மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம்

Uma Balasubramanian

மகா பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கிறா? ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமா?மகா பெரியவா பதில் சொன்னார்..."

மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம். சரஸ்வதி வாக்குக்கு தெய்வம். அன்னிக்கு காஷ்ட மௌனம் இருந்து அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தா வாக் விரயம் ஆகாமலும் இருக்கும். அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்த மாதிரியும் இருக்கும். அதனால, மூலா நக்ஷத்ரம் அன்னிக்கு எதுவும் பேசாம இப்படி காஷ்ட மௌனம் இருக்கறது.

 "ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. 'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.அந்த குழந்தைகளும் கல்யாணம் ஆறதுக்கு ரொம்ப சிரமப் பட்டுண்டு இருக்கா. 

இன்னொரு சிஷ்யர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூலா நக்ஷத்ரம். மகா பெரியவா அவரிடம் 'ஏண்டா, பொம்மனாட்டி கொழந்தை, அதுவும் மூலா நக்ஷத்ரம். ஒனக்கு கவலையா இல்லியோ?' என்றாராம். அடியாருக்குத் தெரியாதா என்ன? ஐயனின் திருவிளையாடல்கள்...'பெரியவா இருக்கா. அதெல்லாம் பெரியவா பாத்துப்பா. அப்புறம் அவள் க்ஷேமத்துக்கு என்ன குறை இருக்கப் போறது?' என்ற ரீதியில் சொல்லிவிட்டாராம். 

மகா பெரியவா அவரை நிரம்ப ஆசிர்வாதம் பண்ணி, 'மூலா நக்ஷத்ரம் சரஸ்வதி அம்பாளோட நக்ஷத்ரம். குழந்தைக்கு சரஸ்வதி ன்னு பேரு வை. க்ஷேமமா இருப்பா' என்று ஆசி சொன்னாராம். இன்று அந்த பெண் குழந்தை நல்ல இடத்தில் மணமாகி குழந்தைகளுடம் பரம க்ஷேமமாக இருக்கிறார்.ஆம். அதெல்லாம் மகா பெரியவா பாத்துப்பா.

No comments:

Post a Comment