Tuesday, August 12, 2014

எவ்வளவோ மேல்...


1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்..
............................................

 புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார்
ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.
உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.
நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.''
என்றார்.
தொழில் அதிபர் உடனே ''சரி,
அப்படி நீங்கள் உறுதியாக
இருந்தால் இந்தக்
காரை இலவசமாகப் பெற்றுக்
கொள்ள வேண்டாம்
.
இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய்
கொடுத்துவிட்டு இந்தக்
காரை வாங்கிக் கொள்ளுங்கள்.''
என்றார்.
உடனே அமைச்சர்,''ரொம்ப
சந்தோசம்,''என்று சொல்லிக்
கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து அவரிடம்
கொடுத்து,
''அப்படியானால் எனக்கு பத்து கார்
கொடுங்கள்.''என்
றாரே பார்க்கலாம்!.
தொழில் அதிபரே அசந்து விட்டார்.

No comments:

Post a Comment