Monday, August 11, 2014

யக்ஞோபவீதம்


உபவீதம்   முதுகு அரிப்புக்கு  சுகமாக  சொரிந்து கொள்வதற்கு  பெரியோர்கள்  கண்டுபிடித்த  சாதனம்  என்று  மட்டும்  தெரிந்து கொண்டிருக்கும்  ''த்விஜர்களுக்கு''   (முதல் பிறப்பு  அம்மா மூலம்,ரெண்டாவது  அவனுக்கு  இடுப்பிலே  முஞ்சி என்கிற  தர்பையை கடி  சவிதா என்கிற  சாவித்திரி தேவதை  அம்மா,   பிதா  சர்மா  நாமகரணம்  பண்ணி  புதுபிறவி,)    ஆசீர்வாதம்.  உபய குசலோபரி.  பூணல்  இப்படியும்  உபயோகப்படட்டும்.  பிரதானமாக  அதன்  அர்த்தம்  முதலில்  தெரிந்துகொள்ளவேண்டும்.  குருகுல வாசம் இல்லாத  தற்காலத்தில்  ''அருகில் அமர்ந்து'' வாத்தியார்  சொல்லிக்கொடுக்கும் காயத்ரி மந்த்ரத்தை  உபதேசமாக  பெறுவது தான்  பிரம்மோபதேசம்.  தந்தை  மகனுக்கு  காதில் உபதேசிப்பது.   அன்று முதல்  அவன்  உலகில்  கடைசி  மூச்சு  விடும் வரை  அவன் உடலில் இருப்பது  இந்த  பூணல்.  காயத்ரி மந்த்ரம் சொல்வதால்  ஏற்படுகிற  நன்மைகள்,  சக்திகளை  பற்றி  ஏராளமாக  சொல்லலாம்.  சொல்கிறேன்.  ஏற்கனவே சொல்லியும் இருக்கிறேன்.  


ஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்டினப்ரவேசம் பண்ணினார். எல்லார் வீட்டிலும் பூர்ணகும்ப மரியாதை பண்ணினார்கள். இவன் வீட்டிலும் பூர்ணகும்பம் குடுத்துவிட்டு எல்லாரும் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். இந்தப்  பையனும்  புதுப்பூணூல் ஜோரில்"அபிவாதயே" சொல்லி பெரியவாளைநமஸ்கரித்தான்.

"அபச்சாரம்! அபச்சாரம்! டே, அம்பி!பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்றச்சேஅபிவாதயே சொல்லப்டாதுடா !"

பக்கத்தில் பல குரல்கள் ஏககாலத்தில்ஒலித்தன. பையன் மனஸில் ஓடிய என்னமோ,

"பூணூல் போட்ட வாத்யார்தானே பெரியவாளப்பாத்தா அபிவாதயே பண்ணுன்னு" சொன்னார் !இவா என்னடான்னா பண்ணப்டாதுங்கறாளே !   அப்போ இவா பெரியவா இல்லையா?"  என்று  பையன்  மனசுலே  சந்தேகம்  எழுந்ததை  அவன்  பார்வை  சொல்லியது. 

மஹா  பெரியவாளுக்கு  சிரிப்பு  வந்தது.   " ஏண்டா பயலே,  ஒனக்கு என்னைப் பாத்ததும்பெரியவாளா, இல்லியான்னு சந்தேஹம்வந்துடுத்தோல்லியோ?".

பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்னதுஇது? X-ray மாதிரி சொல்றாரே!   நாம்ப   நினைச்சது  இவருக்கு எப்படி  தெரிஞ்சுது?''

பெரியவா பையனை முன்னிட்டுஎல்லாருக்கும் திருவாய் மலர்ந்தார்.

"அபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி.  ப்ரவரம்னு  சொல்லுவா.   அந்தக்காலத்லமனுஷாள்ளாம் மாப்பிள்ளைய, நீலத்தனல்லூர்சந்தைல, மாடு வாங்கறா மாதிரி, வாங்கமாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா, அதுனால"அபிவாதயே" மூலமா, இவன் இன்ன கோத்ரம்,இன்ன சூத்ரம், இன்னார் பையன்ன்னுதெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா?வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா. நானோசன்யாசி. எனக்கு பொண்டாட்டி, பொண்ணுஇல்லே, ஒனக்குக் குடுக்க. அதுனாலஅபிவாதயே சொல்றது அவஸ்யம் இல்லியேஒழிய, தப்பு இல்லே, புரிஞ்சுதா?"

அழகாக அன்பொழுக நடுரோடில் அந்தபையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சிதாத்தா.
 சமீபத்தில் நண்பர்  ஒருவர்  பேரனுக்கு  உபநயனம்.  அமெரிக்கா   வட   கரோலினா  பையன். 10 வயது  இவனைப்பற்றி  பால  சங்கரர்   டி  ஷர்ட்டில் விஜயம்  என்று  உங்களுக்கு  எழுதியிருந்தேன்.  அந்த  பையனுக்கு  குடும்ப  வாத்தியார்  தன்னுடைய  சிஷ்ய கோடிகளோடு   உபநயனம்  செய்ய  வந்திருந்தபோது  ''குழந்தே  நீ  கிராப் வச்சிண்டிருக்கே.  அது  அவ்வளவு  ஸ்லாக்கியம் இல்லை.  சாச்த்ரப்ரகாரம்  சிகை வச்சுக்கணும்  இல்லைன்னா  மொட்டை  அடிச்சுண்டுடு.  என்ன?   என்றார்.  பையன்  வெகுநேரமாக  அவர்  மந்திரம்  சொல்வதையே  கவனமாக்  கேட்டுக்கொண்டு  திருப்பி  சொல்லிக்கொண்டிருந்தவன்  திடீரென்று  அப்பா, அம்மா, தாத்தா  பாட்டி  எல்லா உறவினர்கள்  நண்பர்கள் கேட்டுக்கொண்டிருக்க  ஒரு  கேள்வி  கேட்டான்.

''மாமா  நா  தலையை  மொட்டை  அதிச்சுண்டு  அமெரிக்கா  ஸ்கூல் லே  எப்படி போறது.  பரவாயில்லை  இன்னும்  ஒருமாசம் இருக்கு  அதுக்குள்ளே  வளந்துடும்.  ஆனா  ஒரு  கண்டிஷன் உங்களோடு.  நீங்க  ஒத்துண்டா நான் மொட்டை  அடிச்சுக்கிறேன்.''

வாத்யார்  சிரித்தார்..  ''என்னடா  குழந்தே  உன்  கண்டிஷன் என்னோட, சொல்லு  ''

''நீங்க  மந்த்ரம்  சொல்லும்போது நடுவுலே  நடுவுலே   செல்லுலே  பேசக்கூடாது. எனக்கு  என்னவோ போல  இருக்கு.  மந்திரம்  சரியா கவனிச்சு சொல்ல முடியலே.  நீங்க இந்த  ரிச்சுவல்  முடியறவரைக்கும்  செல்  போனை  ஆப்  பண்ணினா  நான்  நாளைக்கு  காலேலே  மொட்டை அடிச்சுண்டுடுறேன்.  ''

வாத்யார்  என்ன  சொல்லுவார்.  விவேகானந்த  பையன்.  வாத்தியார்  செல்லை  பைக்குள்ளே  வச்சிட்டார்.  பையன்  மொட்டை அடிச்சுண்டுட்டான்.  அதற்கு முன்னாலே  ஒரு  வார்த்தையும்   சொன்னான். 

எனக்கு   பெரியவா கிட்டே ல்லாம்   இப்படி  மரியாதை குறைவா  பேச கூடாது ன்னு  தெரியும்.  ஆனால்  என்னால்  சொல்லாம  இருக்க முடியலே  மன்னிச்சுக்கோங்கோ ''


No comments:

Post a Comment