Wednesday, August 13, 2014

ராஜராஜன் செய்த யுக்தி!

கல்கி செய்தி
ராஜராஜன் செய்த யுக்தி!

"நம்பிக்குத் தும்பி சொன்னார்' என்பார்கள். தும்பி என்றால் யானை, அதன் கைதான் தும்பிக்கை. ஸாட்சாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது. அவர் சொன்னதைநம்பி பிற்பாடு "திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலாகப் பாடினார். நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழஜ் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.


ஆனால், அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீட்சிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்றுகேட்டார்கள்.


"அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதாரிட்டி இல்லையே! என்று கைவிரித்து விட்டார்கள். சோஒ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிடந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. அவன் மஹா வீரனும், பக்திமானும் மட்டுமல்ல; புத்திமானும்.


என்ன யுக்தி என்றால், ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோ கூட இல்லை, அவை பிராண பிரதிஷ்டை ஆனவையாதலால் பிராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் "அர்ச்சாவதாரம்' என்றே சொல்வது வழக்கு. முக்யமாக வைஷ்ணவ ஸித்தாந்தத்திலே அர்ச்சா என்றால் விக்ரஹம். இதை வைத்தே ராஜ ராஜ சோழன் யுக்தி பண்ணினான். என்ன யுக்தி என்றால்,
மூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான். தீட்சிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்' என்று கேட்டு கொண்டான்.
எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது. அவனுடைய பக்தியும், தேவார சொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

No comments:

Post a Comment