Monday, August 18, 2014

காலையில் எழுந்தவுடன் காபி ....................

காலையில் எழுந்தவுடன் காபி ..... எத்தனை சௌத் இந்தியனுக்கு கார்த்தாலே எழுந்ததும்  கையில் காபி கிடைக்கலேன்னாலும், ந்யூஸ் பேப்பர் வரலேன்னாலும் அவ்ளோதான்,....கையும் ஓடாது, காலும் ஓடாது ஆனால் வாய் மட்டும் நல்லாவே ஓடும். எப்டிங்கறேங்களா , அதான் அந்தப் பேப்பர் காரன், பொண்டாட்டின்னு எல்லாருக்கும் சகஸ்ரநாம அர்ச்சனைக் கிடைக்கும். காலைக் கடன் கழிக்கலேன்னாலும் பரவாயில்லை, இந்த ரெண்டும் இல்லன்னா, போச்சு.

ஆனால் இப்போ இருக்கற ஜெனரேசனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, ஏன்னால் மொபைல்லேயே எல்லாம் பாத்து தெரிஞ்சுக்கலாமே!
காபின்னா கும்மோணம் டிகிரிக் காபி தான் நெனவுக்கு வருது, அது எப்படி இறுகும் ஏன் அந்தப் பேருன்னு எனக்குத் தெரியாது.

அந்தக் காபி ஒன்னு ஒவ்வொருத்தர் ஆத்துலேயும் ஒவ்வொரு தினுசு. சிலர் காபி பொடி ரெடி மேடா வாங்கிப் போடுவா.ஒரு சிலர் கடைக்குப் போய் கொட்டை வாங்கி அரைச்சுண்டு வருவா, சிலர் ப்ரூ ,நெஸ்கபே ,சன்ரைஸ் ன்னு வாங்குவா.

நானும் மொதல்ல .....

இதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லியாகணும் ,

எனக்கு ...என்ன .......எங்களோட சின்ன  வயசுலே எங்களுக்கு ராகி இல்ல கோதுமைக் கஞ்சி தான், பெரியவாளுக்கு மட்டும் தான் காபி.
இப்டியே கல்யாணம் வரைக் காலத்தை தள்ளியாச்சு. கல்யாணம் ஆனதும் அப்போ மத்யப்ர்தேஷ்ன்னு சொல்லக் கூடிய ராய்பூரில் வாசம்.

அங்கே என்னடான்னா, காபிக் கொட்டை இந்தியா காபி ஹவுசில் வாங்கி வறுத்து, கை மிஷினில் அரைத்துக் கலக்கணும், அப்புறம் அதை பில்டரில் போட்டு டிகாக்ஷன் எடுத்து காபி அதுவும் என்னவருக்கு மட்டுமே. அதுவே பெரிய வேலையாயிடும்.
என்ன வறுக்கறது ஒரு டெக்னிக் , அது வாணலிலே சூழ்ந்து புகை வரும் போது எடுக்கணும். பி  பெர்ரி, ப்லேண்டஷன் ஏ ,பி ன்னும் ,ரொபஸ்டா ன்னும் இருக்கும் காபிக் கொட்டை .கடையில வாங்கினா அதுல சிக்கரின்னு புளியங்கொட்டையைக் கலந்துடுவான் திக்கா இருக்க, ஆனால் டேஸ்டுலத் தெரிஞ்சுடும்.

பில்டர்ல காபி போடி போடறதுக்கு முன்னாடி, அதுல ஒரு துளி சக்கரைப் போட்டு பிறகு பொடி போட்டு அதை நல்ல மத்தாலே, இடிக்கணும் i mean press பண்ணனும். சுடச்சுட தண்ணீ விடணும் .ரெண்டு தரம் இறக்கி மொத்தத்தையும் கலந்து பிறகு காபி போடணும்.

சில சமயம் என்ன ஆகும்னா, மூணு பேர் வந்துருப்பா , ரெண்டு பேருக்குத் தான் காபி வரும், அப்போங்கரச்சே புதுசா டிகாஷன் போட்டு அப்புறம் ரெண்டையு ம் ஒண்ணாக் கலந்து கொடுக்கணும்.

 சில சமயம் கெஸ்ட் வந்து  இருக்கப்போ, சமயம் பாத்து பில்டர் காலை வாரிடும் .அப்போ அதுக்கு வேண்டியது பக்கத்துலேயே ஒக்காந்து அதைக் கொஞ்சம் கவனிக்கணும். அது எப்டின்னா, தண்ணி வுட்டுட்டு,தலையிலே தட்டனும் அதுவும் வலிக்காத மாதிரி, இல்லன்னா, வாஷர் போன கொழா மாதிரி குடுகுடுன்னு எறங்கி, வாயில வக்க வழங்காத மாதிரி டிகாஷன் இருக்கும், அதுல எவ்ளோ திக் பாலா இருந்தாலும் காபி தேறாது.

ஒரு சிலருக்கு பஸ்ட் டைம் எறங்கினதுமே காபி குடிக்கணும் அது மத்தவாளுக்கு தண்ணியா இருக்குமேங்கற கவலைக் கிடையாது, இவா எல்லாரும் தலை வலி காராலா இருப்பா இல்ல மத்தவாளுக்கு தல வலி கொடுப்பா, செல்பீஷ் பீபிள் .

சிலர் மொடாக் குடியன்களா இருப்பா, எத்தனை தரம் வேணுமானாலும் ஒரு நாளைக்கு காபி குடிப்பா, சிலர் வரான்னாலே மொதல்ல தோணறது காபி
டிகாக்ஸன் தான்.

ஒரு தரம் ஒரு வீட்டுல நான் கெஸ்டா இருந்தப்போ காபி கலக்குற ட்யுடி எனக்கு வந்தது, டிகாக்சன் எல்லாருக்கும் வராதுன்னுத் தோணித்து , அதனால, கொஞ்சம் டம்ளரில் கம்மியாகவே கலந்து ( இது மொதல் டோஸ்) கொடுத்தேன், அவ்ளோ தான், உடனே,  '' இது என்னது இவ்ளோ கம்மியா கொடுத்திருக்கே, மொதல் டோஸ் காபி முழு டம்ளர்ல கொடுக்கணும் , இல்லன்னா குடிச்சா மாதிரியே இருக்காது''.

இதுல என்ன வேடிக்கைன்னா, யார் வீடோ அவாளே இப்டி சொன்னாள் , டிகாக்ஷன் எல்லாருக்கும் போராதுன்னு தெரியும், ''எப்படி மத்தவாளுக்கு போறும்னு நான் கேட்டதுக்கு, அது அப்போங்கரச்சே பாத்துக்கலாம்னு சொல்லிட்டா, எனக்கு தெரியும் என்ன செய்வாள் என்று.

நான் சில வீட்டுல காபிக் குடிச்சிருக்கேன், எல்லைடமும் நான் காபிக் குடிப்பதில்லைன்னு சொல்ல மனசு வரமாட்டேன்கறது  அதுவும் நான் குஜராத்தில் இருந்தப் போ தமிழ் நாட்டுக்காரின்னு விசேஷமா கவனிக்கறோம்னு பரு காபிக் கொடுப்பா, எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் எதுக் கௌடிசாலும் வாயை கொப்பளிக்கணும் அதுவும் காபிக்குப் பிறகு definite டா .அப்போ டான் தெரிஞ்சது, எப்டியெல்லாம் டேஸ்ட் இருக்கும்னு, சில சமயம் பானகம் , கறுப்பா , சில சமயம் நெறய பால் , சில சமயம் தண்ணீ டிகாஷன்.....

நான் முன்னாடி சொன்னாமாதிரி, ஒரே ஆளு காபிக் குடிப்பதால் டிகாஷன் எப்பவுமே நிறைய இருக்காது, அதனால் விருந்தாளி வந்தப்போ என் கணவர் , '' கறுப்பு இருந்தால் நம்மூரு கொண்டுவா, இல்லன்னா, இந்தூரு கொண்டுவா '' ன்னு சொல்வாரு தமிழில்.
ஏன் வீட்டிலேயே சில சமயம் டிகாஷன் போட மறந்துட்டால், அப்பப்போ கொஞ்சம் கடையிலிருந்து ப்ரு வாங்கி வச்சு, அதை கலந்துக் கொடுத்துடுவேன் திருட்டுத்தனமாக.

என்னவருக்கு, நிச்சயம் பில்டர் காபி தான் வேணும், இதுல no compromise .

இப்பல்லாம் coffee மேக்கர் கடையில கிடைக்கிறது, இதுக்கு வேண்டியது கரண்ட் அவ்ளோதான், தண்ணிய  விட்டுட்டு பொடியப் போட்டு விட்டால்  போறும் எடுத்து வைக்கனும்கறது கிடையாது, it 's a storage container cum coffee maker .
என்னிடமும் ஒண்ணு இருக்கு, ஒரு வருஷம் நல்லா வேலை செஞ்சது, அப்புறம் கொஞ்சம் கொணத்தைக் காட்ட ஆரம்பிச்சது, மெட்றாசுக்குப் போய் ரிப்பேர் செஞ்சு ( 250/ ரூபாய் ) கொண்டு வந்து ஆறே மாசம் coil  போய்டுத்து. ஆனாலும் அதுலேயே இப்போ டிகாசன் போடுறேன் மேனுவலாக , எதுக்கு தண்டம் அழணும் ? ரெண்டு பேர் இப்டி யூஸ் பண்றதைப் பார்த்தேன் அதையே follow பண்றேன்.

 வீட்டுல பில்டர் இருக்கு, எத்தனை பேர் அதுல காபி போடறா, எத்தனை பேர் பொடி  வாங்கறா? ப்ரு ,நெஸ்கபே ன்னு ஆயிரத்தெட்டு ரெடி இருக்கும்போது?

உங்காத்து பில்டர் எங்கே இருக்குன்னு சொல்லுங்கோ பாப்போம்! இப்பத்தான் எலெக்ட்ரிக் coffee maker    வந்துருக்கே!

1 comment:


  1. Hello Mathangi,

    Thanks for the morning dose of coffee. Great write up and I could relate to it as am a big fan of filter coffee.
    Regards,
    Laxmi

    ReplyDelete