Tuesday, August 12, 2014

கடி ஜோக்ஸ் 99

நீதிபதி : நாடு ராத்திரியிலே சத்தமே இல்லாம
பீரோவ எப்படி தெறந்தே ?
கைதி : எஜமான் செஞ்ச குத்தத்துக்கு தண்டனை குடுங்க
ஏத்துக்கறேன் - அனால் தொழில் ரகசியமெல்லாம் சொல்லித் தர முடியாது..
..................................
அவர் :" நீங்க பதில் சொல்ல முடியாத அளவுக்கு
உங்க பையன் அப்படி என்ன கேட்டுட்டான் ? "

இவர் :

" போலி மருந்து தர்ற ஒரிஜினல் டாக்டர் நல்லவரா...
இல்ல,
ஒரிஜினல் மருந்து தர்ற போலி டாக்டர் நல்லவரானு கேக்கிறான் ."

உங்களாலயாச்சும் பதில் சொல்ல முடியுமா
........................

திருவள்ளூர் கோயிலுக்கு train ல போய்ட்டுஇருந்தேன் 
எங்க தமிழ் mam போல ஒரு லேடி....
நெக்ஸ்ட் ஸ்டேஷன் என்னன்னு கேட்டாங்க
ரயில்வே ஸ்டேஷன் னு சொன்னேன்....

இதுலாம் எங்க உருபடபோகுதுனு தமிழ் mam போலவே சொல்லிட்டாங்க ........!!!

..............................

குட்டிக்கதை - வாழ்வின் ரகசியம்..
வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"

"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.


"புரியவில்லை குருவே.."


"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"



"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."


"கழுதையைப் பின்னால் தட்டினால்?"


"தட்டியவரை எட்டி உதைக்கும்.."


"ஆனால் குதிரை..?"


"முன்னால் பாய்ந்து செல்லும்.."


"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்..


இதுதான் வாழ்வின் ரகசியம்..



....................

கணவர்: (போனில்) ஹாய்! டியர் ! பிளைட் கொஞ்சம் லேட்டு... இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடுவேன்... என்ன டிபன்?
மனைவி: பைன் லாங் கிரேயின்ஸ் ஆப் வொயிட் ரைஸ் ஹேண்ட் பிக்ட் பரம் த எமரால்டு கிரீன் ஸ்லோப்ஸ் ஆப் த விந்தியாஸ் அண்ட் டெண்டர் கோல்டு லென்டில்ஸ் ஜென்டிலி சிம்மேர்டு ஓவர் ஸ்மோல்டரிங் டங்க்ஸ் ஆப் ஜென்டில் பையர் செர்வ்ட் வித் டாலப்ஸ் ஆப் க்ளேரிபைட் பட்டர்...
கணவன் : (கடுப்பாகி) என்ன நாங்க மெனுக் கார்டுல மக்களை ஏமாத்துறதுக்குப் போடுற மாதிரி ஏதோ பேர் சொல்லுற? என்னன்னு சொல்லிரு...
மனைவி: பொங்கல்..
......

..'என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''

''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டுக்குப் போய் சொல்லச் சொல்றான் !
....................



ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..
கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..
ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான்.

அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…
இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…
என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்.
...................................
"என்னோட கணவர் கல்யாணமான புதுசுல என்னை 'தேவயானி, தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்."
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ, தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
.......................

.பிச்சைக்காரன்- அம்மா தாயே பசிக்குதுமா எதாச்சும் சாப்பிட தாங்களேன்...
வீடுகார அம்மா- இன்னும் சமையல் ஆகலேப்பா..

பிச்சைக்காரன்- சரி பேஸ் புக் ல ஆறுமுகம் அண்ணே னு பேர்ல இருக்கேன் , சாப்பாடு ஆனதும் ச்டடுஸ் போட்டுடுங்க ப்ளீஸ்.. 


வீடுகார அம்மா _கரண்ட் இல்லப்பா செல் நம்பர் கொடுத்துவிட்டு போ மிஸ் கால் குடுக்கறேன் .

--.......................................
முதல் மற்றும் கடைசி தலைமுறை

முதல் தலைமுறை:
-------------------------------


1.எங்கயாவது வெளிய போனா என்ஜாய் பண்ணாம ஃபோட்டோ எடுக்க ஃபோன தூக்கிட்டு திரியுற முதல்தலைமுறை நாமதான்..


2.பேஸ் புக் யூஸ் பண்ணி முன்னுக்கு வந்த முதல் தலைமுறை நாம தான் ..


3.பண்டிகை நாட்களை டிவியிலும் , இணையத்திலும் பொழுதை கழிக்கும் முதல்தலைமுறை நாமதான்...


4.நம்ம வீட்டுக்குப் பக்கத்து தெருவோட பெயரை மறந்துட்டு அதை அந்தத் தெரு எங்க இருக்கு என்று GPS ல் தேடும் முதல்தலைமுறை நாமதான்......
..
5.ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் முதல்தலைமுறை நாமதான்..........

6.கூட்டுக் குடும்பத்தை மறந்த உறவுகளை தொலைத்த முதல்தலைமுறை நாமதான்..

.....................................................
நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

===============

"சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே? ஏன்?"


"ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?"

===================


No comments:

Post a Comment